உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 36 பக். 88-பக். 89 பாரா. 1
  • யெப்தா செய்த சத்தியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெப்தா செய்த சத்தியம்
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • யெப்தா செய்த சத்தியம்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • யெகோவாவையும் அப்பாவையும் சந்தோஷப்படுத்தினாள்
    செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
  • உண்மையாக இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • யெப்தா யெகோவாவுக்குச் செய்த பொருத்தனையை நிறைவேற்றுகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 36 பக். 88-பக். 89 பாரா. 1
தன்னைப் பார்க்க தன் மகள் வருவதைப் பார்த்ததும் யெப்தா தன்னுடைய உடையைக் கிழிக்கிறார்

பாடம் 36

யெப்தா செய்த சத்தியம்

இஸ்ரவேலர்கள் மறுபடியும் யெகோவாவை விட்டுவிட்டு பொய் கடவுள்களை வணங்க ஆரம்பித்தார்கள். ஆனால், அம்மோனியர்கள் இஸ்ரவேலர்களைத் தாக்கி, அவர்களோடு சண்டை போட்டபோது, அந்தப் பொய் கடவுள்கள் இஸ்ரவேலர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. பல வருஷங்களாக இஸ்ரவேலர்கள் கஷ்டப்பட்டார்கள். கடைசியில் அவர்கள் யெகோவாவிடம், ‘நாங்கள் தப்பு செய்துவிட்டோம். எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று சொன்னார்கள். இஸ்ரவேலர்கள் தங்களிடம் இருந்த சிலைகளை அழித்துவிட்டு, மறுபடியும் யெகோவாவை வணங்க ஆரம்பித்தார்கள். அதனால், அவர்களுடைய கஷ்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று யெகோவா நினைத்தார்.

இஸ்ரவேலர்களுக்குத் தலைவராக இருந்து, அம்மோனியர்களோடு போர் செய்ய யெப்தா என்ற வீரனைக் கடவுள் தேர்ந்தெடுத்தார். அவர் யெகோவாவிடம், ‘இந்தப் போரில் ஜெயிப்பதற்கு நீங்கள் உதவி செய்தால், நான் வீட்டுக்குத் திரும்பி வரும்போது, என்னைப் பார்க்க என் வீட்டிலிருந்து முதலில் யார் வந்தாலும் அவரை உங்களுக்கே தந்துவிடுகிறேன்’ என்று சத்தியம் செய்தார். அவர் ஜெபத்தில் கேட்டபடியே, போரில் ஜெயிக்க யெகோவா அவருக்கு உதவி செய்தார்.

யெப்தா தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அவரைப் பார்க்க முதலில் வந்தது யார் தெரியுமா? அவருடைய ஒரே மகள்தான்! அவள் கஞ்சிராவைத் தட்டிக்கொண்டே நடனம் ஆடிக்கொண்டு வந்தாள். இப்போது யெப்தா என்ன செய்வார்? கடவுளுக்குச் செய்த சத்தியத்தை அவர் நினைத்து பார்த்து, ‘ஐயோ, என் மகளே! என் மனதைச் சுக்குநூறாக்கி விட்டாயே! நான் யெகோவாவிடம் ஒரு சத்தியம் செய்திருக்கிறேன். அதைக் காப்பாற்ற வேண்டுமென்றால், சீலோவில் இருக்கிற வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்வதற்கு உன்னை நான் அனுப்ப வேண்டும்!’ என்று சொன்னார். அதற்கு அவள், ‘அப்பா, நீங்கள் யெகோவாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்திருந்தால், அதைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். நான் என் தோழிகளோடு மலைகளுக்குப் போய் இரண்டு மாதங்கள் அங்கே தங்குவதற்கு அனுமதி கொடுங்கள். அதற்குப் பிறகு நான் சீலோவுக்குப் போகிறேன்’ என்று சொன்னாள். யெப்தாவின் மகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வழிபாட்டுக் கூடாரத்தில் கடவுளுக்கு உண்மையாகச் சேவை செய்தாள். ஒவ்வொரு வருஷமும், அவளுடைய தோழிகள் அவளைப் பார்க்க சீலோவுக்குப் போனார்கள்.

யெப்தாவின் மகளைப் பார்க்க அவளுடைய தோழிகள் வழிபாட்டுக் கூடாரத்திற்கு வருகிறார்கள்

“என்மேல் காட்டும் பாசத்தைவிட தன் மகனிடமோ மகளிடமோ அதிக பாசம் காட்டுகிறவன் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது.”—மத்தேயு 10:37

கேள்விகள்: யெப்தா என்ன சத்தியம் செய்தார்? யெப்தா செய்த சத்தியத்தைப் பற்றித் தெரிந்துகொண்டதும் அவருடைய மகள் என்ன சொன்னாள்?

நியாயாதிபதிகள் 10:6–11:11, 29-40; 1 சாமுவேல் 12:10, 11

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்