உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 47 பக். 114-பக். 115 பாரா. 3
  • யெகோவா எலியாவைப் பலப்படுத்தினார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா எலியாவைப் பலப்படுத்தினார்
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • கடவுளிடம் ஆறுதல் பெற்றார்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ஆறுதலின் கடவுள் அச்சத்தை அகற்றினார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • உன்னோடு யாருமே இல்லை என்று பயப்படுகிறாயா?
    செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
  • நீங்கள் எலியாவைப்போல் உண்மையுள்ளவர்களாக இருப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 47 பக். 114-பக். 115 பாரா. 3
ஓரேப் மலையிலிருந்த குகைக்கு வெளியே எலியா நின்றுகொண்டு தேவதூதர் சொல்வதைக் கேட்கிறார்

பாடம் 47

யெகோவா எலியாவைப் பலப்படுத்துகிறார்

பாகால் தீர்க்கதரிசிகளுக்கு நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் யேசபேலுக்குப் பயங்கர கோபம் வந்தது. உடனே, ‘பாகால் தீர்க்கதரிசிகளை நீ கொன்றுபோட்டது போலவே நாளைக்கு உன்னையும் கொன்றுபோடுவேன்’ என்று எலியாவுக்குச் செய்தி அனுப்பினாள். எலியா பயந்துபோய் பாலைவனத்துக்கு ஓடிப்போனார். எலியா யெகோவாவிடம், ‘யெகோவாவே, இனிமேல் என்னால் தாங்க முடியாது. நான் செத்துப்போகிறேன்’ என்று சொன்னார். களைத்துப்போன எலியா ஒரு மரத்துக்குக் கீழே படுத்துத் தூங்கிவிட்டார்.

ஒரு தேவதூதர் அவரை எழுப்பி, ‘எழுந்து சாப்பிடு’ என்று அன்பாகச் சொன்னார். அவர் எழுந்து பார்த்தபோது சூடாக்கப்பட்ட கற்கள்மேல் ரொட்டியும், ஜாடியில் தண்ணீரும் இருந்தது. அவர் சாப்பிட்டு தண்ணீர் குடித்து திரும்பவும் தூங்கிவிட்டார். அந்தத் தேவதூதர் மறுபடியும் அவரை எழுப்பி, ‘சாப்பிடு. ரொம்பத் தூரம் நடக்க உனக்குத் தெம்பு வேண்டும்’ என்று சொன்னார். எலியா இன்னும் கொஞ்சம் சாப்பிட்டார். பிறகு, 40 நாட்கள் ராத்திரியும் பகலும் நடந்து ஓரேப் மலைக்குப் போய்ச் சேர்ந்தார். தூங்குவதற்காக ஒரு குகைக்குள் போனார். யெகோவா அவரிடம், ‘எலியா, இங்கே என்ன செய்கிறாய்?’ என்று கேட்டார். அதற்கு எலியா, ‘இஸ்ரவேலர்கள் உங்களுக்குக் கொடுத்த வாக்கை மீறிவிட்டார்கள். பலிபீடங்களை உடைத்துவிட்டார்கள், உங்களுடைய தீர்க்கதரிசிகளையும் கொன்றுவிட்டார்கள். இப்போது என்னையும் கொல்லப் பார்க்கிறார்கள்’ என்று சொன்னார்.

யெகோவா அவரிடம், ‘நீ வெளியே போய், இந்த மலையில் நில்’ என்று சொன்னார். முதலில் பயங்கரமாகக் காற்று அடித்தது. பிறகு நிலநடுக்கமும், அடுத்ததாக நெருப்பும் வந்தது. கடைசியில், அமைதியாகவும் மெதுவாகவும் ஒருவர் பேசுவதை எலியா கேட்டார். உடனே, தன்னுடைய அங்கியால் முகத்தை மூடிக்கொண்டு குகைக்கு வெளியே நின்றார். எலியா அங்கே ஓடிவந்ததற்கான காரணத்தை யெகோவா கேட்டார். அதற்கு எலியா, ‘நான் ஒருவன் மட்டும்தான் மீதி இருக்கிறேன்’ என்று சொன்னார். அப்போது யெகோவா, ‘நீ தனியாக இருப்பதாக நினைக்காதே. என்னை வணங்கும் 7,000 பேர் இன்னும் இஸ்ரவேலில் இருக்கிறார்கள். உனக்குப் பிறகு தீர்க்கதரிசியாகச் சேவை செய்ய எலிசாவை நியமி’ என்று சொன்னார். யெகோவா சொன்னதைச் செய்வதற்காக எலியா உடனே போனார். யெகோவா சொல்வதைச் செய்யும்போது அவர் உனக்கு உதவி செய்வார் என்று நம்புகிறாயா? யெகோவா நிச்சயம் உனக்கு உதவி செய்வார். இஸ்ரவேலில் பஞ்சம் வந்த சமயத்தில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி அடுத்த பாடத்தில் பார்க்கலாம்.

“நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள்.”—பிலிப்பியர் 4:6

கேள்விகள்: எலியா ஏன் ஓடிப்போனார்? யெகோவா எலியாவிடம் என்ன சொன்னார்?

1 ராஜாக்கள் 19:1-18; ரோமர் 11:2-4

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்