உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 83 பக். 194-பக். 195 பாரா. 1
  • அற்புதமாக உணவு கொடுக்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அற்புதமாக உணவு கொடுக்கிறார்
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இயேசு ஆயிரக்கணக்கானோரை அற்புதமாகப் போஷிக்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • இயேசு ஆயிரக்கணக்கானோரை அற்புதமாகப் போஷிக்கிறா
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • அற்புத உணவு​—சொல்லித்தரும் பாடங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 83 பக். 194-பக். 195 பாரா. 1
அப்போஸ்தலர்கள் ஒரு பெரிய கூட்டத்தாருக்கு உணவு கொடுக்கிறார்கள்

பாடம் 83

அற்புதமாக உணவு கொடுக்கிறார்

கி.பி. 32-ஆம் வருஷம், பஸ்காவுக்குக் கொஞ்சம் முன்னால், நிறைய இடங்களில் பிரசங்கித்துவிட்டு அப்போஸ்தலர்கள் திரும்பி வந்தார்கள். அவர்கள் களைத்துப்போய் இருந்தார்கள். அதனால், ஓய்வு எடுப்பதற்காக அவர்களைப் படகில் கூட்டிக்கொண்டு பெத்சாயிதா என்ற இடத்துக்கு இயேசு போனார். அவர்கள் கரைக்குப் பக்கத்தில் வந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களைப் பார்க்க அங்கே வந்திருந்தார்கள். இயேசு தன்னுடைய சீஷர்களுடன் தனியாக இருக்க ஆசைப்பட்டாலும், அந்த மக்களிடம் அன்பாகப் பேசினார். நோயாளிகளைக் குணமாக்கினார். பிறகு, அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். அன்று முழுவதும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களிடம் பேசினார். சாயங்காலம் ஆனபோது, சீஷர்கள் அவரிடம் வந்து, ‘எல்லாரும் ரொம்பப் பசியாக இருப்பார்கள். அதனால், அவர்களை அனுப்பிவிடுங்கள். அவர்கள் போய் ஏதாவது வாங்கிச் சாப்பிடட்டும்’ என்று சொன்னார்கள்.

ஒரு பையன், ரொட்டிகளும் மீன்களும் இருக்கிற கூடையை இயேசுவிடம் கொடுக்கிறான்

அதற்கு இயேசு, ‘அவர்களை அனுப்ப வேண்டாம். நீங்களே அவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்’ என்று சொன்னார். அதற்கு அப்போஸ்தலர்கள், ‘நாங்கள் போய் அவர்களுக்கு ரொட்டி வாங்கி வர வேண்டுமா?’ என்று கேட்டார்கள். அவர்களில் ஒருவரான பிலிப்பு, ‘நாம் நிறைய பணம் கொடுத்தால்கூட, இத்தனை பேருக்கு ரொட்டி வாங்க முடியாதே’ என்று சொன்னார்.

அப்போது இயேசு, ‘நம்மிடம் எவ்வளவு உணவு இருக்கிறது?’ என்று கேட்டார். அதற்கு அந்திரேயா, ‘ஐந்து ரொட்டிகளும் இரண்டு சின்ன மீன்களும் இருக்கின்றன. ஆனால் அது போதாதே’ என்று சொன்னார். அப்போது இயேசு, ‘ரொட்டிகளையும் மீன்களையும் கொண்டுவாருங்கள்’ என்று சொன்னார். பிறகு, மக்களை ஐம்பது ஐம்பது பேராகவும், நூறு நூறு பேராகவும் புல்தரையில் உட்காரச் சொன்னார். இயேசு அந்த ரொட்டிகளையும் மீன்களையும் எடுத்து, வானத்தைப் பார்த்து ஜெபம் செய்தார். பிறகு, அதைத் தன் அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார். அவர்கள் மக்களிடம் கொடுத்தார்கள். பெண்களும் பிள்ளைகளும் தவிர 5,000 ஆண்களும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள். மிச்சம் இருந்ததை வீணாக்காமல் அப்போஸ்தலர்கள் எடுத்து வைத்தார்கள். அவை 12 கூடைகள் நிறைய இருந்தன. இது ஒரு பெரிய அற்புதம், இல்லையா?

மக்களுக்கு இயேசுவை ரொம்பப் பிடித்துவிட்டது. அதனால், அவரை ராஜாவாக்க நினைத்தார்கள். ஆனால், யெகோவா தன்னை ராஜாவாக்க வேண்டிய நேரம் அது இல்லை என்று இயேசுவுக்குத் தெரியும். அதனால், அவர்களை இயேசு அனுப்பிவிட்டார். பிறகு, தன்னுடைய சீஷர்களை கலிலேயா கடலின் அக்கரைக்குப் போகச் சொன்னார். அவர்கள் படகில் ஏறிய பிறகு, இயேசு தனியாக ஒரு மலைமேல் ஏறிப் போனார். ஏன்? தன்னுடைய அப்பாவிடம் ஜெபம் செய்வதற்காகப் போனார். இயேசுவுக்கு எவ்வளவு வேலை இருந்தாலும், ஜெபம் செய்வதற்கு அவர் எப்போதுமே நேரம் ஒதுக்கினார்.

“அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத் தரும் அழியாத உணவுக்காகவே பாடுபடுங்கள். மனிதகுமாரன் இதை உங்களுக்குக் கொடுப்பார்.” —யோவான் 6:27

கேள்விகள்: மக்களிடம் இயேசு எப்படி அக்கறை காட்டினார்? இதிலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

மத்தேயு 14:14-22; லூக்கா 9:10-17; யோவான் 6:1-15

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்