உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பாடம் 90 பக். 210
  • கொல்கொதாவில் இயேசு இறந்துபோகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கொல்கொதாவில் இயேசு இறந்துபோகிறார்
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • இயேசு நிரபராதி என்று பிலாத்துவும் ஏரோதுவும் புரிந்துகொள்கிறார்கள்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • பிலாத்துவிடமிருந்து ஏரோதிடத்திற்கும், பின்பு மறுபடியும் பிலாத்துவிடம்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • பொந்தியு பிலாத்து யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • இயேசு கொல்லப்படுவதற்காகக் கொண்டுபோகப்படுகிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பாடம் 90 பக். 210
இயேசு மரக் கம்பத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறார். ஒரு படை அதிகாரியும் மரியாள், யோவான் உட்பட இயேசுவின் சீஷர்களில் சிலரும் பக்கத்தில் நிற்கிறார்கள்

பாடம் 90

கொல்கொதாவில் இயேசு இறந்துபோகிறார்

முதன்மை குருமார்கள் ஆளுநரின் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டுபோனார்கள். அப்போது பிலாத்து, ‘இவன் என்ன குற்றம் செய்ததாகச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘தான் ஒரு ராஜா என்று இவன் சொல்கிறான்’ என்றார்கள். அப்போது பிலாத்து, “நீ யூதர்களுடைய ராஜாவா?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு, “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” என்று சொன்னார்.

பிறகு பிலாத்து, கலிலேயாவை ஆட்சி செய்த ஏரோதுவிடம் இயேசுவை அனுப்பினார். இயேசுவிடம் ஏரோது ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கிறானா என்று பார்ப்பதற்காகத்தான் அவனிடம் அனுப்பினார். இயேசுவிடம் எந்தக் குற்றத்தையும் ஏரோதுவினால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவன் இயேசுவை மறுபடியும் பிலாத்துவிடமே அனுப்பினான். பிறகு பிலாத்து மக்களிடம், ‘நானும் சரி, ஏரோதுவும் சரி, இவனிடம் எந்தக் குற்றத்தையும் பார்க்கவில்லை. அதனால், நான் இவனை விடுதலை செய்கிறேன்’ என்று சொன்னார். அப்போது அவர்கள் எல்லாரும், ‘இவனைக் கொல்லுங்கள்! இவனைக் கொல்லுங்கள்!’ என்று சத்தம் போட்டார்கள். படைவீரர்கள் இயேசுவைச் சாட்டையால் அடித்து, அவர்மேல் துப்பினார்கள், அவரை அடித்தார்கள். முள்கிரீடத்தை அவருடைய தலையில் வைத்தார்கள். பிறகு, ‘யூதர்களின் ராஜாவே, வாழ்க!’ என்று கேலி செய்தார்கள். மறுபடியும் பிலாத்து அந்த மக்களிடம், ‘இவன் எந்தத் தப்பும் செய்ததாகத் தெரியவில்லை’ என்று சொன்னார். ஆனால் அவர்கள், “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று கத்தினார்கள். அதனால், இயேசுவைக் கொல்வதற்கு பிலாத்து விட்டுவிட்டார்.

படைவீரர்கள் இயேசுவை கொல்கொதா என்ற இடத்துக்குக் கொண்டுபோனார்கள். அங்கே அவரை ஒரு கம்பத்தில் வைத்து ஆணி அடித்தார்கள். பிறகு, அதைத் தூக்கி நிறுத்தினார்கள். அப்போது இயேசு, ‘அப்பா, இவர்களை மன்னித்து விடுங்கள். என்ன செய்கிறார்கள் என்றே இவர்களுக்குத் தெரியவில்லை’ என்று ஜெபம் செய்தார். மக்கள் அவரைக் கேலி செய்தார்கள். ‘நீ கடவுளுடைய மகன் என்றால், கம்பத்திலிருந்து இறங்கி வா! உன்னை நீயே காப்பாற்றிக்கொள்!’ என்று சொன்னார்கள்.

இயேசுவுக்குப் பக்கத்திலிருந்த மர கம்பத்தில், தொங்கவிடப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன், “நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றான். அப்போது இயேசு, “நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று சத்தியம் செய்தார். அன்று மத்தியானம், மூன்று மணி நேரத்துக்கு ஒரே இருட்டாக இருந்தது. அந்தக் கம்பத்துக்குப் பக்கத்தில் இயேசுவின் அம்மா மரியாளும் அவருடைய சீஷர்கள் சிலரும் நின்றுகொண்டிருந்தார்கள். மரியாளைச் சொந்த அம்மா மாதிரி கவனித்துக்கொள்ளும்படி யோவானிடம் இயேசு சொன்னார்.

கடைசியாக, “முடித்துவிட்டேன்!” என்று இயேசு சொன்னார். பிறகு, தலையைச் சாய்த்து இறந்துபோனார். அந்த நொடியே, பயங்கரமான நிலநடுக்கம் வந்தது. ஆலயத்தில், பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் இடையில் தொங்கிய கனமான திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. ஒரு படை அதிகாரி, ‘இவர் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்’ என்றார்.

“கடவுளுடைய வாக்குறுதிகள் எத்தனை இருந்தாலும், அவை அத்தனையும் அவர் மூலமாக ‘ஆம்’ என்றே ஆகியிருக்கின்றன.”—2 கொரிந்தியர் 1:20

கேள்விகள்: இயேசுவைக் கொல்வதற்கு பிலாத்து ஏன் விட்டுவிட்டார்? தன்னைவிட மற்றவர்கள்மேல் அதிக அக்கறை இருந்ததை இயேசு எப்படிக் காட்டினார்?

மத்தேயு 27:11-14, 22-31, 38-56; மாற்கு 15:2-5, 12-18, 25, 29-33, 37-39; லூக்கா 23:1-25, 32-49; யோவான் 18:28–19:30

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்