பகுதி இரண்டு
‘நீ என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினாய்’—தூய வணக்கம் கறைபட்டுவிடுகிறது
முக்கியக் குறிப்பு: ஆன்மீக மற்றும் ஒழுக்க விஷயங்களில், யூதாவும் எருசலேமும் கறைபட்டுவிடுகின்றன
தன்னுடைய “விசேஷ சொத்தாக” இருந்த இஸ்ரவேலர்கள்மீது யெகோவா அன்பும் அக்கறையும் காட்டினார். (யாத். 19:5) ஆனால், அவர்கள் யெகோவாவின் ஆலயத்திலேயே பொய்க் கடவுள்களை வணங்கினார்கள். இப்படி அவருடைய பெயரைக் களங்கப்படுத்தி அவருடைய இதயத்தைச் சுக்குநூறாக்கினார்கள். இஸ்ரவேலர்கள் ஏன் அந்தளவு மோசமாக நடந்துகொண்டார்கள்? எருசலேமின் அழிவைப் பற்றி எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? தங்களைச் சுற்றியிருந்த தேசத்தாரிடம் இஸ்ரவேலர்கள் நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?