பகுதி ஐந்து
மக்களோடு “நான் தங்குவேன்”—தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது
முக்கியக் குறிப்பு: ஆலயத்தைப் பற்றிய தரிசனத்திலுள்ள முக்கிய விஷயங்களும் தூய வணக்கத்தைப் பற்றி அவை கற்றுத்தரும் பாடங்களும்
எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கும் அப்போஸ்தலன் யோவானுக்கும் யெகோவா கொடுத்த தரிசனங்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்தத் தரிசனங்களில் காட்டப்பட்ட விஷயங்களிலிருந்து நாம் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். யெகோவா ஏற்றுக்கொள்ளும் விதமாக அவரை இப்போதே வணங்குவதற்கும், பூஞ்சோலை பூமியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் இவை நமக்கு உதவும்.