உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm18 பக். 7-8
  • சில தகவல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சில தகவல்கள்
  • 2018 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விசேஷக் கூட்டம்
  • சில தகவல்கள்
  • சில தகவல்கள்
    2017 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சில தகவல்கள்
    2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சில தகவல்கள்
    2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சில தகவல்கள்
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2018 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm18 பக். 7-8

சில தகவல்கள்

விசேஷக் கூட்டம்

ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி: ஊழியத்தில் இன்னும் அதிகத்தைச் செய்ய விரும்பும் பயனியர்கள், ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளிக்கு விண்ணப்பிக்க இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். அவர்கள் 23 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்தக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதியம் நடக்கும். இடமும் நேரமும் மாநாட்டில் அறிவிக்கப்படும்.

சில தகவல்கள்

அட்டன்டண்டுகள்: உங்களுக்கு உதவ அட்டன்டண்டுகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வாகனங்களை நிறுத்துவது, இருக்கைகளைப் பிடிப்பது, மன்றத்துக்குள் வருவது, வெளியே போவது போன்ற விஷயங்களில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள்.

நன்கொடைகள்: யெகோவாவிடம் நெருங்கி வரவும், மாநாட்டை நன்கு அனுபவித்து மகிழவும் போதுமான இருக்கை வசதிகள், ஒலிபெருக்கி மற்றும் வீடியோ சாதனங்கள் போன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுக்காக அதிக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் மனமுவந்து தரும் நன்கொடை, இந்தச் செலவுகளைச் சமாளிக்கவும் உலகளாவிய பிரசங்க வேலையை ஆதரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் வசதிக்காக, நன்கொடைப் பெட்டிகள் மாநாட்டு மன்றத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் தரும் நன்கொடைகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. உலகளாவிய வேலைக்காக நீங்கள் தாராளமாகக் கொடுக்கும் நன்கொடைகளுக்கு ஆளும் குழுவினர் நன்றி சொல்கிறார்கள்.

முதலுதவி: தேவைப்படும்போது மட்டுமே இந்த இலாகாவை அணுகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

கண்டெடுக்கப்பட்டவை: கண்டெடுக்கப்பட்ட எல்லா பொருள்களும் இந்த இலாகாவில் ஒப்படைக்கப்பட வேண்டும். நீங்கள் எதையாவது தொலைத்துவிட்டால் இந்த இலாகாவில், உங்கள் பொருளை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுங்கள். காணாமல்போன பிள்ளைகளை இங்கே ஒப்படையுங்கள். ஆனால், இது பிள்ளைகளைக் கவனித்துக்கொள்ளும் இலாகா அல்ல. தயவுசெய்து உங்கள் பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள், உங்கள் கூடவே வைத்துக்கொள்ளுங்கள்.

இருக்கைகள்: தயவுசெய்து மற்றவர்கள்மீது கரிசனை காட்டுங்கள். உங்களோடு வருபவர்களுக்காக, உங்கள் குடும்பத்தாருக்காக அல்லது உங்களோடு பைபிள் படிப்பவர்களுக்காக மட்டுமே இருக்கைகளைப் பிடியுங்கள். மற்ற இருக்கைகளில் எந்தப் பொருள்களையும் வைக்காதீர்கள்.

வாலண்டியர் சேவை: மாநாட்டில் சேவை செய்ய விரும்பினால் தயவுசெய்து தகவல் மற்றும் வாலண்டியர் சேவை இலாகாவுக்குத் தெரிவியுங்கள்.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஏற்பாடு

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்