உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm23 பக். 7-8
  • சில தகவல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சில தகவல்கள்
  • 2023 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • சில தகவல்கள்
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சில தகவல்கள்
    2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சில தகவல்கள்
    2025 மாநாட்டு நிகழ்ச்சிநிரல்
  • சில தகவல்கள்
    2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2023 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm23 பக். 7-8

சில தகவல்கள்

அட்டன்டண்டுகள் உங்களுக்கு உதவ அட்டன்டண்டுகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வாகனங்களை நிறுத்துவது, இருக்கைகளைப் பிடிப்பது, மன்றத்துக்குள் வருவது, போவது போன்ற விஷயங்களில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள்.

ஞானஸ்நானம் ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்காக மேடையின் முன்னால், இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். இதில் மாற்றம் இருந்தால் அறிவிக்கப்படும். சனிக்கிழமை காலையில் ஞானஸ்நானப் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்பே ஞானஸ்நானம் எடுப்பவர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் உட்கார வேண்டும். ஒவ்வொருவரும் துடைக்கத் துண்டும், அடக்கமான மாற்று உடையும் கொண்டுவர வேண்டும்.

நன்கொடைகள் யெகோவாவிடம் நெருங்கி வரவும், மாநாட்டை அனுபவித்து மகிழவும் போதுமான இருக்கை வசதிகள், ஒலிபெருக்கி, வீடியோ சாதனங்கள் போன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுக்காக அதிக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் மனதார தரும் நன்கொடை, இந்தச் செலவுகளைச் சமாளிக்கவும் உலகளாவிய பிரசங்க வேலையை ஆதரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் வசதிக்காக, நன்கொடைப் பெட்டிகள் மாநாட்டு மன்றத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. donate.jw.org வெப்சைட்டைப் பயன்படுத்தி ஆன்லைனிலும் நன்கொடை கொடுக்கலாம். நீங்கள் தரும் நன்கொடைகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. உலகளாவிய வேலைக்காக நீங்கள் தாராளமாகக் கொடுக்கும் நன்கொடைகளுக்கு ஆளும் குழுவினர் நன்றி சொல்கிறார்கள்.

முதலுதவி அவசரத் தேவை ஏற்படும்போது மட்டுமே இந்த இலாகாவை அணுகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

கண்டெடுக்கப்பட்டவை கண்டெடுக்கப்பட்ட எல்லா பொருள்களும் இந்த இலாகாவில் ஒப்படைக்கப்பட வேண்டும். நீங்கள் எதையாவது தொலைத்துவிட்டால் இந்த இலாகாவில், உங்கள் பொருளை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுங்கள். காணாமல்போன பிள்ளைகளை இங்கே ஒப்படையுங்கள். தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்க, தயவுசெய்து உங்கள் பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்; உங்கள் கூடவே வைத்துக்கொள்ளுங்கள்.

இருக்கைகள் தயவுசெய்து மற்றவர்கள்மீது கரிசனை காட்டுங்கள். உங்களோடு வருபவர்களுக்காக, உங்கள் குடும்பத்தாருக்காக அல்லது உங்களோடு பைபிள் படிப்பவர்களுக்காக மட்டுமே இருக்கைகளைப் பிடியுங்கள். மற்ற இருக்கைகளில் எந்தப் பொருள்களையும் வைக்காதீர்கள்.

வாலண்டியர் சேவை மாநாட்டில் சேவை செய்ய விரும்பினால் தயவுசெய்து தகவல் மற்றும் வாலண்டியர் சேவை இலாகாவுக்குத் தெரிவியுங்கள்.

விசேஷக் கூட்டம்

ஒரு வகுப்பறையில், சகோதர சகோதரிகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள், குறிப்புகள் எடுக்கிறார்கள்.

ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி

ஊழியத்தில் இன்னும் அதிகத்தைச் செய்ய முடிந்த எல்லாரையும், ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்வதற்கான கூட்டத்துக்கு அழைக்கிறோம். இது ஞாயிறு மதியம் நடக்கும். கூட்டம் நடக்கும் நேரமும் இடமும் அறிவிக்கப்படும்.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஏற்பாடு

© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்