உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lmd பாடம் 2
  • இயல்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயல்பு
  • அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பிலிப்பு என்ன செய்தார்?
  • பிலிப்புவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
  • பிலிப்பு மாதிரி நடந்துகொள்ளுங்கள்
  • பிலிப்பு—வைராக்கியமுள்ள ஒரு சுவிசேஷகன்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் நோக்கத்தோடு பேச்சை ஆரம்பியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • அக்கறை
    அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
  • “இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை” அறிவிப்பது
    கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
மேலும் பார்க்க
அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
lmd பாடம் 2

பேச ஆரம்பிப்பது

எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒருவர் ரதத்தில் உட்கார்ந்து ஒரு சுருளைப் படித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் நற்செய்தியாளரான பிலிப்பு பேசுகிறார்.

அப். 8:30, 31

பாடம் 2

இயல்பு

நியமம்: “சரியான சமயத்தில் சொல்லப்படுகிற வார்த்தை எவ்வளவு அருமையானது!”—நீதி. 15:23.

பிலிப்பு என்ன செய்தார்?

எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஒருவர் ரதத்தில் உட்கார்ந்து ஒரு சுருளைப் படித்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் நற்செய்தியாளரான பிலிப்பு பேசுகிறார்.

வீடியோ: எத்தியோப்பிய அதிகாரியிடம் பிலிப்பு பிரசங்கிக்கிறார்

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது அப்போஸ்தலர் 8:30, 31-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1. அ. பிலிப்பு எப்படிப் பேச ஆரம்பித்தார்?

  2. ஆ. அவர் கேள்வி கேட்டது, இயல்பாகப் பேச ஆரம்பிப்பதற்கும் ஒரு புது விஷயத்தைச் சொல்லிக்கொடுப்பதற்கு உதவியது என்று எப்படிச் சொல்லலாம்?

பிலிப்புவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. நாம் ஒருவரிடம் இயல்பாகப் பேச ஆரம்பித்துவிட்டால், அவர் நம்மிடம் சகஜமாகப் பேசுவதற்கும் நாம் சொல்லும் செய்தியைக் கேட்பதற்கும் நிறைய வாய்ப்பு இருக்கிறது.

பிலிப்பு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. கவனியுங்கள். ஒருவருடைய சைகைகளையும் முக பாவனைகளையும் வைத்தே அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாம். அவரைப் பார்த்தால் அவர் உங்களிடம் பேசுவார் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? பைபிளில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி பேச வெறுமனே, “உங்களுக்கு ஒன்று தெரியுமா . . .” என்று சொல்லிக்கூட ஆரம்பிக்கலாம். பேச விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.

4. பொறுமையாக இருங்கள். எப்படியாவது பைபிளிலிருந்து ஒரு விஷயத்தை உடனே சொல்லிவிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். இயல்பாகவும் பேச்சு வாக்கிலும் அதைச் சொல்வதற்குப் பொருத்தமான சமயம் வரும்வரை காத்திருங்கள். ஒருவேளை, அடுத்த தடவை அவரிடம் பேசும்வரைகூட நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

5. மாற்றிக்கொள்ளத் தயாராக இருங்கள். நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச நினைத்திருக்கலாம். ஆனால், அவர் வேறு விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடலாம். அப்போது, அவருக்குப் பொருத்தமான ஒரு பைபிள் விஷயத்தைப் பற்றிப் பேசத் தயாராக இருங்கள்.

இதையும் பாருங்கள்

பிர. 3:1, 7; 1 கொ. 9:22; 2 கொ. 2:17; கொலோ. 4:6

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்