உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lmd பாடம் 9
  • அனுதாபம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அனுதாபம்
  • அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இயேசு என்ன செய்தார்?
  • இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
  • இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்
  • ஒற்றுணர்வு—கரிசனைக்கும் கருணைக்கும் திறவுகோல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • அனுதாபம் காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • அனுதாபம் காட்டுங்கள்
    விழித்தெழு!—2020
  • ‘மனம் உருகினார்’
    என்னைப் பின்பற்றி வா
மேலும் பார்க்க
அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
lmd பாடம் 9

மறுபடியும் சந்திப்பது

இயேசுவும் அவருடைய சீஷர்களும் படகிலிருந்து இறங்கி கரைக்கு நடந்துவருகிறார்கள். அங்கே அவர்களுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

மாற். 6:30-34

பாடம் 9

அனுதாபம்

நியமம்: “சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள். அழுகிறவர்களோடு அழுங்கள்.”—ரோ. 12:15.

இயேசு என்ன செய்தார்?

இயேசுவும் அவருடைய சீஷர்களும் படகிலிருந்து இறங்கி கரைக்கு நடந்துவருகிறார்கள். அங்கே அவர்களுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

வீடியோ: மக்களைப் பார்த்து இயேசு மனம் உருகுகிறார்

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது மாற்கு 6:30-34-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1. அ. இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் “தனிமையான ஒரு இடத்துக்கு” போக வேண்டும் என்று ஏன் நினைத்தார்கள்?

  2. ஆ. மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க இயேசுவை எது தூண்டியது?

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. நமக்கு அனுதாபம் இருந்தால், நல்ல செய்தியை வெறுமனே கடமைக்காகச் சொல்லாமல் மக்கள்மேல் இருக்கும் உண்மையான அக்கறையால் சொல்வோம்.

இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. கவனமாகக் கேளுங்கள். ஒருவர் தன் மனதில் இருப்பதை சொல்வதற்கு வாய்ப்பு கொடுங்கள். அவருடைய உணர்ச்சிகளை, கவலைகளை, அல்லது அவரால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களைப் பற்றி அவர் சொல்லும்போது குறுக்கே பேசாதீர்கள். அல்லது, அதை காதில் வாங்காதது போல நடந்துகொள்ளாதீர்கள். அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்கும்போது, அவருடைய கருத்துக்கள் உங்களுக்கு முக்கியம் என்று காட்டுவீர்கள்.

4. ஆர்வம் காட்டியவரைப் பற்றி யோசியுங்கள். ஏற்கெனவே நீங்கள் அவரிடம் பேசியதை வைத்து இப்படி யோசித்துப் பாருங்கள்:

  1. அ. ‘பைபிளிலிருக்கும் உண்மைகளை அவர் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?’

  2. ஆ. ‘பைபிளைப் படிப்பது இப்போதும் எதிர்காலத்திலும் அவருக்கு எப்படி நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும்?’

5. அவருக்கு உதவியாக இருக்கும் விஷயங்களைச் சொல்லுங்கள். அவருடைய மனதில் இருக்கும் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க பைபிள் படிப்பு எப்படி உதவும் என்று விளக்குங்கள். அவருடைய வாழ்க்கைக்கு அது எப்படியெல்லாம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விளக்குங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இப்படிச் செய்யுங்கள்.

இதையும் பாருங்கள்

ரோ. 10:13, 14; பிலி. 2:3, 4; 1 பே. 3:8

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்