உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lmd பாடம் 10
  • உறுதி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உறுதி
  • அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இயேசு என்ன செய்தார்?
  • இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
  • இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்
  • நிக்கொதேமுவிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • ராத்திரி நேரத்தில் நிக்கொதேமுவுக்குக் கற்பிக்கிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • சத்தியத்தில் உறுதியாக நிற்க பைபிள் மாணவருக்கு உதவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • நிக்கொதேமுவுக்குக் கற்பித்தல்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
மேலும் பார்க்க
அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்
lmd பாடம் 10

சீஷர்களை உருவாக்குவது

ராத்திரி நேரத்தில் இயேசுவும் நிக்கொதேமுவும் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

யோவா. 3:1, 2

பாடம் 10

உறுதி

நியமம்: “கடவுளுடைய நல்ல செய்தியை மட்டுமல்ல, எங்கள் உயிரையே உங்களுக்காகக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தோம்; அந்தளவுக்கு நீங்கள் எங்களுடைய அன்புக்குரியவர்களாக ஆகியிருந்தீர்கள்.”—1 தெ. 2:8.

இயேசு என்ன செய்தார்?

ராத்திரி நேரத்தில் இயேசுவும் நிக்கொதேமுவும் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

வீடியோ: நிக்கொதேமுவுக்கு இயேசு சொல்லிக்கொடுக்கிறார்

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது யோவான் 3:1, 2-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1. அ. இயேசுவை ராத்திரி நேரத்தில் போய்ப் பார்க்க வேண்டும் என்று நிக்கொதேமு ஏன் நினைத்திருப்பார்?—யோவான் 12:42, 43-ஐப் பாருங்கள்.

  2. ஆ. சீஷர்களை உருவாக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியாக இருந்தார் என்று எப்படிச் சொல்லலாம்?

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. மக்கள்மேல் நமக்கு அன்பு இருப்பதால், சீஷராவதற்கு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. உங்கள் பைபிள் மாணவருக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் படியுங்கள். வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் படிக்க அவர் ஆசைப்படலாம். வேலை செய்கிற இடத்தில், வீட்டில், அல்லது ஒரு பொது இடத்தில் படிப்பது அவருக்கு வசதியாக இருக்குமா? முடிந்தவரைக்கும், உங்களுடைய அட்டவணையை அவருடைய வசதிக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ளுங்கள்.

4. தவறாமல் படியுங்கள். சொன்ன நாளில் உங்களால் பைபிள் படிப்புக்கு போக முடியவில்லையென்றால், படிப்பை நடத்தாமல் இருந்துவிடாதீர்கள். இப்படிச் செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்:

  1. அ. அந்த வாரத்தில் வேறொரு நாளில் உங்களால் பைபிள் படிப்பை நடத்த முடியுமா?

  2. ஆ. போனிலோ வீடியோ கான்பரன்சிலோ உங்களால் பைபிள் படிப்பை நடத்த முடியுமா?

  3. இ. அந்தப் படிப்பை நடத்தும்படி வேறொரு பிரஸ்தாபியிடம் நீங்கள் கேட்க முடியுமா?

5. மாணவர்மேல் நம்பிக்கையை இழக்காமல் இருக்க ஜெபத்தில் உதவி கேளுங்கள். வாராவாரம் படிப்பதற்கோ படித்த விஷயங்களைக் கடைப்பிடிப்பதற்கோ உங்கள் மாணவர் திண்டாடினாலும், அவருக்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியோடு இருங்கள். யெகோவாவிடம் அதற்காக உதவி கேளுங்கள். (பிலி. 2:13) உங்கள் மாணவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கலாம். அந்தக் குணங்களைக் கவனிப்பதற்கு உதவி கேட்டு ஜெபம் செய்யுங்கள்.

இதையும் பாருங்கள்

நீதி. 3:27; அப். 20:35; 2 கொ. 12:15

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்