உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 10/8 பக். 15
  • மகிமையான வானவில்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மகிமையான வானவில்
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • உங்கள் சொந்த வானவில்லை செய்துகொள்ளுங்கள்
    விழித்தெழு!—1990
  • முதல் வானவில்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • எட்டுப் பேர் தப்பிக்கிறார்கள்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • யெகோவாவின் பரம சிங்காசனத்தின் சிறப்புத்தன்மை
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 10/8 பக். 15

மகிமையான வானவில்

இது இவ்வாறு விளக்கப்படுகிறது: வர்ணங்களின் ஒரு நிறமாலையைக் காண்பிக்கிற, ஒரு அரைவட்ட வடிவ வளைவு அல்லது வில்; “இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும்,” உறுதியளித்த யெகோவாவின் உடன்படிக்கைக்கான காணக்கூடிய ஒரு அடையாளம். (ஆதியாகமம் 9:11-16) எபிரெய மொழியில் வானவில்லுக்கென்று தனி வார்த்தை ஒன்றும் இல்லை. ஆகவே (அம்புகளை எறிய பயன்படுத்தும்) “வில்” என்பதற்கான சாதாரண வார்த்தை பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.—எசேக்கியேல் 1:28.

வானவில் உருவாவதை விளக்க சிக்கலான கோட்பாடுகளும் சூத்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அடிப்படையாக, மழைத்துளியினுள் வெள்ளொளி நுழைந்ததும், அத்துளி ஒரு சிறிய முப்பட்டகத்தைப் போல் செயல்பட்டு, அவ்வெளிச்சத்திற்கு ஒளிவிலகல் ஏற்படுத்தி, வெவ்வேறு நிறங்களாக பிரித்துவிடுகிறது. ஒவ்வொரு நிறமும் அத்துளியின் உட்பரப்பில் பட்டு குறிப்பிட்ட மற்றும் வேறொரு கோணத்தில் திரும்பவும் எதிரொளிக்கிறது. இதன் காரணமாக பார்க்கும் ஒருவர் நிறமாலையின் ஏழு நிறங்கள் அனைத்தையும் (வில்லின் உள்ளிருந்து வெளியே ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய நிறங்களை) காண்கிறார். இருப்பினும் இந்த நிறங்கள் மற்றவற்றோடு இணைந்து நான்கோ ஐந்தோ நிறங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெளிவாக காணப்படுகின்றன. சிலசமயங்களில் நிறங்களை தலைகீழ் வரிசையில் கொண்ட பெரியதும் தெளிவற்றதுமான “இரண்டாவது” வில் உருவாகிறது. விஞ்ஞானிகள் இன்னும் வானவில்லைப் பற்றி ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கின்றனர். கார்ல் பி. பாயர் கூறுவதாவது: “ஒரு மழைத்துளிக்குள்ளே ஒளி சக்தி திடப்பொருளோடு சேர்ந்து புரியும் இடைச்செயலானது அவ்வளவு நெருக்கமானதாக இருப்பதால், அது நேரடியாக ஆற்றல் இயக்கத்திற்கும் (quantum mechanics) சார்பியல் கோட்பாட்டிற்கும் (theory of relativity) வழிநடத்துகிறது. . . . வானவில் உருவாவதைப்பற்றி அதிகம் அறியப்பட்டிருந்தாலும், நம்மால் அதை எப்படி அவ்வாறு காணமுடிகிறது என்பதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை.”—வானவில், கட்டுக்கதையிலிருந்து கணிதம்வரை (ஆங்கிலம்), 1959, பக். 320, 321.

ஜலப்பிரளயத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் பேழையிலிருந்து வெளியே வந்த பிறகு, கடவுள் நோவாவோடும் அவருடைய சந்ததியினரோடும் செய்த உடன்படிக்கையைப் பற்றிய பதிவில்தான் வானவில்லைப் பற்றிய முதல் பைபிள் பதிவு இருக்கிறது. (ஆதியாகமம் 9:8-17; ஏசாயா 54:9, 10) பகட்டான இந்தக் காட்சிதானே நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாயும் சமாதானத்தைக் குறிப்பதாயும் இருந்திருக்கும்.

மனிதர்கள் வானவில்லை இப்போதுதான் முதல்முறையாக பார்த்தார்களா என்பதுபற்றி பல அபிப்பிராயங்கள் சொல்லப்படுகின்றன. வானவில் இதற்குமுன்பே காணப்பட்டிருக்கிறது என்றும், கடவுள் இச்சமயத்தில் வானவில்லைக் ‘கொடுப்பது’ உண்மையில் ஏற்கெனவே சம்பவித்துக்கொண்டிருக்கும் ஒரு காரியத்துக்கு ஒரு விசேஷித்த அர்த்தத்தை அல்லது முக்கியத்துவத்தை ‘கொடுப்பதாக’ இருந்தது என்றும் சில குறிப்புரையாளர்கள் கருதிவந்தனர். இவ்வாறு கருதிவந்த அநேகர் ஜலப்பிரளயம் உள்ளூர் வளிமண்டலத்தில் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்தியது அல்லது வளிமண்டலத்தில் பெரிதாக ஒன்றும் மாற்றத்தை ஏற்படுத்திவிடவில்லை என்பதாக நம்பிவந்தனர்.

என்ன இருந்தாலும், வானவில்லைப்பற்றி குறிப்பிடப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன்பே வானவில்லைப் பார்த்திருந்தால், கடவுள் தம்முடைய உடன்படிக்கையின் தனிச்சிறப்பு வாய்ந்த அடையாளமாக்கியதில் மெய்யான எந்தவொரு வல்லமையும் இருந்திருக்காது. அது ஒரு மாற்றத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அடையாளமாக, ஏதோ புதிய ஒன்றாக இல்லாமல், என்னவோ சர்வசாதாரணமானதாக இருந்திருக்கும்.

ஜலப்பிரளயம் ஏற்படுவதற்குச் சற்றுமுன் வானம் எவ்வளவு தெளிவாக இருந்தது என்பதைப்பற்றி பைபிள் விவரிக்கவில்லை. ஆனால் தெளிவாகவே, ‘வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டு’ ஒரு மாற்றம் ஏற்பட்ட காலம்வரை, நோவாவும் அவருடைய குடும்பமும் ஒரு வானவில்லைக் கண்டதற்குமுன் வேறு யாரும் காணமுடியாத அளவுக்குத்தான் வளிமண்டல நிலைகள் இருந்திருக்கின்றன. (ஆதியாகமம் 7:11) வானவில் காணப்படுகிறதா இல்லையா என்பதை இன்றும்கூட வளிமண்டல நிலைகள் பாதிக்கின்றன.

ஒரு புயலுக்குப்பின் தோன்றும் வானவில்லின் மகிமை, வனப்பு, அமைதி ஆகியவை கடவுளையும் அவருடைய சிங்காசனத்தையும் விவரிப்பதற்கு பைபிள் பயன்படுத்தியிருக்கிறது. எசேக்கியேல் கடவுளைக் கண்ட காட்சியில், “மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ அப்படி” உள்ள ஒன்றை தீர்க்கதரிசி கண்டார். இது ‘கர்த்தருடைய மகிமையை’ அழுத்திக்காட்டியது. (எசேக்கியேல் 1:28) இதைப்போலவே, யெகோவாவின் சிங்காசனத்தின் கண்கொள்ளாக் காட்சியை யோவான் கண்டார், “அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது: அது மரகதம் போல் தோன்றிற்று.” வானவில்லின் சாந்தமான அந்த மரகதப் பச்சை நிறமானது யோவானுக்கு மனநிறைவையும் அமைதியையும் குறித்திருக்கவேண்டும். பொருத்தமாகவே அவற்றைத்தான் குறித்தது, ஏனென்றால், யெகோவா ஒவ்வொரு வகை நிலையையும் கட்டுப்படுத்தும் ஒரு மகிமை பொருந்திய ஆட்சியாளராக இருக்கிறார். (வெளிப்படுத்துதல் 4:3) ‘தலையின்மேல் ஒரு வானவில்லைக் கொண்ட’ (வெளிப்படுத்துதல் 10:1) ஒரு தேவதூதனையும் யோவான் கண்டார். இத்தூதன் ‘சமாதானத்தின் தேவனுடைய’ விசேஷித்த பிரதிநிதியாக இருந்தார் என்பதை இது குறிக்கலாம்.—பிலிப்பியர் 4:9.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்