இன்னல்கள் நிறைந்த ஓர் உலகம்
சரித்திரத்தில் முன்னொருபோதும் மனிதவர்க்கம் இவ்வளவு துன்பங்களையும் கொடுமைகளையும் வேதனைகளையும் அனுபவித்தில்லை. துன்ப நிகழ்ச்சிகள் நாம் சுவாசிக்கும் காற்றைப்போன்று பெருமளவிற்கு சர்வசாதாரண காரியங்களாகிவிட்டன. 1914-ம் ஆண்டு முதற்கொண்டு வரும் காலத்தை விவரிப்பதாய் ஒரு பத்திரிகை குறிப்பிட்டதாவது: “தேசீய எல்லைப்புரத்திலிருப்பவர்களிலும் உட்புரத்திலிருப்பவர்களிலும் இது அளவுக்கு மீறிய ஒழுங்கின்மையும், வன்முறையும் இருக்கும் காலமாக இருந்திருக்கிறது.”
மிக முக்கியமாய் வேதனையூட்டுவது என்னவெனில் தற்காலத்து வாழ்க்கை நலன்களில் கட்டுக்கடங்கா மூர்க்கத்தை வெளிப்படுத்தும் மனப்போக்கு. ஒரு சிறிய ஆப்ரிக்க நாட்டிலே ஏழு ஆண்டுகால சண்டை 20,000-ற்கும் மேற்பட்ட உயிர்களை கொன்றது. அங்கே கடத்தி செல்லுதல், கற்பழித்தல், மற்றும் இதுபோன்ற செயல்கள் இருந்தன. முதியவர்களும் இளம் பிள்ளைகளும் நிலச்சுரங்கவெடி, ஏவுகணை, குண்டுவீச்சு, மற்றும் வெறும் வழக்கமான மூர்க்க செயல்கள் ஆகியவற்றிற்கு இறையாகியிருக்கின்றனர்.
தனி நபருக்குரிய நிலையிருந்து நாம் இன்னல்களை நோக்குகையில், அந்த நிலைமையின் துயரம் வெகு தெளிவாக தனித்து நிற்கிறது. உதாரணமாக, நீங்கள் உங்களை ஒரு பெண்ணின் இடத்தில் வைத்து பாருங்கள். ஒரு மனித கும்பல் அந்தப் பெண்ணின் கணவனை கொஞ்சம் கொஞ்சமாக சாகும் வரையில் அடிக்கும்போது அந்த பெண் பாட்டுப்பாடி கைதட்டி கொண்டிருக்கும்படி துப்பாக்கி முனையில் வற்புறுத்தப்பட்டாள். உங்கள் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்? ஆம், உண்மையிலேயே, “ஜனங்களுக்கு தத்தளிப்பும் இடுக்கணும்” உண்டாகியிருக்கின்றது. மேலும் தனி நபர்கள் இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.—லூக்கா 21:25.
கண்டிப்பான நடுநிலையை காத்து வருவதன் காரணமாக கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் கடுந்துயரங்களை தவிர்க்கின்றனர். மேலும் வன்முறை நிகழ்ச்சிக்கு சாத்தியமான இடங்களிலிருந்து தங்களை விலக்கி வைத்துக்கொள்கின்றனர். (யோவான் 17:16) என்றபோதிலும் எல்லா இடுக்கண்களையும் அவர்கள் தவிர்த்துவிட முடியாது. சில வேளைகளில் இந்த உலகத்தின் ஜனங்களை போன்றே அவர்களும் துன்பமனுபவிக்கின்றனர். வன்முறை மற்றும் வஞ்சகம் ஆகியவற்றின் மூலம் பிசாசாகிய சாத்தான் இறுதியாக மரணத்தை ஏற்படுத்தக்கூடும். யெகோவாவின் சாட்சிகளால் உலக முழுவதிலும் அறிவிக்கப்பட்டு வரும் செய்தியில் பிசாசின் வேலைகளை வெளிப்படுத்துவதும் ஒரு பாகமாயிருப்பதால், இந்தச் செய்தியை தாங்கியிருப்பவர்களை ஒழித்துவிட வேண்டும் என்ற ஒரு முயற்சியில் “மரணத்தை உண்டு பண்ணுவதற்குரிய” தனது வழிவகைகளை சாத்தான் பயன்படுத்துவான் என்று நாம் எதிர்பார்க்கலாமல்லவா? வேத வசனங்கள் அவ்வாறே சுட்டிக் காட்டுகின்றன.—எபிரெயர் 2:14, 15; வெளிப்படுத்துதல் 2:10; 12:12, 17.
கிறிஸ்தவர்கள் கூடுதலான வேதனைகளை அனுபவிக்கின்றனர்
பொதுவில் ஜனங்களை தொல்லைப்படுத்தக்கூடிய இன்னல்களோடுகூட, சர்வலோக பேரரசராகிய யெகோவா தேவன் சார்பிலும் அவருடைய ராஜ்யத்தின் சார்பிலும் தங்களுடைய உறுதியான நிலைநிற்கையை கொண்டிருப்பதன் காரணமாக தங்கள் மீது வரக்கூடிய துன்புறுத்துதல்களையும்கூட, இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்கள் சகிக்க வேண்டும். சாத்தானுடைய கைகளிலிருக்கும் மனித ஆட்சி முறைகளின் முடிவை முன்குறித்து காட்டும் துயர்தரும் நிகழ்ச்சிகளை விவரித்த பின்பு, இயேசு சொன்னதாவது: “அப்பொழுது, உங்களை [இயேசுவின் சீஷர்களை] உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களை கொலை செய்வார்கள். என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். மற்றும் “நீங்கள் . . . அடிக்கப்படுவீர்கள்.” என்பதையும் இயேசு குறிப்பிட்டதாக மாற்கு சுட்டிக்காட்டுகிறான்.—மத்தேயு 24:3, 7-9; மாற்கு 13:9.
ஆம், எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைமைகளின் மத்தியிலும் “ராஜ்யத்தின் இந்த நற்செய்தியை” உலக முழுவதிலும் பிரசங்கிப்பதற்கு யெகோவாவின் ஜனங்கள் தீர்மானமுள்ளவர்களாக இருப்பதன் காரணமாக, கூடுதல் சோதனைகளான துன்புறுத்துதல்களை—அடிகள், தடையுத்தரவுகள், சிறைச்சாலைகளிலிடப்படுதல் மற்றும் வேறு வகையான கொடூரங்களை—அவர்கள் சகிக்க வேண்டியதாக இருந்திருக்கிறது. (மத்தேயு 24:14) ஏன், இந்த துன்புறுத்தல்காரர் அநேக கிறிஸ்தவர்களை கொலை செய்கிறவர்களாயும் இருந்திருக்கிறார்கள். கடவுளுடைய ராஜ்யமே மனித குலத்திற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்று கற்பித்ததுதான் அவர்களுடைய “ஒரே குற்றமாக” இருந்திருக்கிறது!
இயேசு இதை சொல்லியிருந்தார்: “முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்.” (மாற்கு 13:13) என்றபோதிலும் நாம் விட்டு கொடுக்காமல் சகிக்கக்கூடுமா? மிகுதியான இன்னல்கள் மத்தியிலும் ஆறுதலுக்கான ஊற்றுமூலம் ஏதாகிலும் இருக்கிறதா? சகித்திருக்கக்கூடியவர்களின் முன்மாதிரிகள் ஏதாகிலும் நமக்கு இருக்கிறதா? (w85 9/15)