உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w87 2/1 பக். 8
  • இயேசுவின் முதல் சீஷர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசுவின் முதல் சீஷர்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • இதே தகவல்
  • இயேசுவின் முதல் சீஷர்கள்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • சீஷர்களைத் தேர்ந்தெடுக்க ஆரம்பிக்கிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • இயேசுவின் சீஷர்கள்
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • பன்னிரண்டு அப்போஸ்தலர்களை இயேசு தேர்ந்தெடுக்கிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
w87 2/1 பக். 8

இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்

இயேசுவின் முதல் சீஷர்கள்

வனாந்தரத்தில் 40 நாட்கள் இருந்த பிறகு இயேசு தன்னை முழுக்காட்டின யோவானிடம் திரும்பி வருகிறார். அவர் நெருங்கி வருகையில் யோவான் ஆச்சரியத்தோடு: “ இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்” என்று சொல்லுகிறான். யோவான் தன் உறவினரான இயேசுவைவிட பெரியவனாக இருந்தபோதிலும், இயேசு தனக்கு ஓர் ஆவி ஆளாக பரலோகத்தில் இருந்தார் என்பது யோவானுக்குத் தெரியும்.

மறுநாள், யோவான் தன்னுடைய இரண்டு சீஷர்களோடு நின்றுக் கொண்டிருக்கிறான், மறுபடியும் இயேசு தன்னிடம் நெருங்கி வரும்போது: “இதோ, தேவ ஆட்டுக்குட்டி” என்று அவன் சொல்லுகிறான். இந்த சமயத்தில்தானே, யோவான் ஸ்நானகனின் இரண்டு சீஷர்கள் இயேசுவை பின்பற்றுகிறார்கள். அதில் ஒருவன் அந்திரேயா, மற்றவன் இந்தக் காரியங்களை பதிவுசெய்தவன். அவனும் யோவான் என்று அழைக்கப்பட்டான். விவரப் பதிவுகளின்படி இந்த யோவானும் இயேசுவின் உறவினனாக, மரியாளின் சகோதரியாகிய சலோமியின் மகனாக இருக்கிறான்.

அந்திரேயாவும் யோவானும் தம்மை பின்பற்றுவதைப் பார்த்து இயேசு: “என்ன தேடுகிறீர்கள்” என்று கேட்கிறார்?”

“ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்” என்று கேட்டார்கள்.

“வந்து பாருங்கள்” என்ற இயேசு பதிலளிக்கிறார்.

இப்போது நேரம் பிற்பகல் நான்குமணி, அந்திரேயாவும் யோவானும் இயேசுவோடு தங்கிவிடுகிறார்கள். அதற்கு பிறகு அந்திரேயா அதிக மகிழ்ச்சியுற்றவனாய் பேதுரு என்று அழைக்கப்பட்ட தன்னுடைய சகோதரனை கண்டுபிடிக்க விரைகிறான். “மேசியாவைக் கண்டோம்” என்று அவனிடம் சொல்லுகிறான். பேதுருவை இயேசுவிடம் அழைத்து செல்கிறான். அதே சமயத்தில் யோவானும் தன்னுடைய சகோதரனாகிய யாக்கோபுவை கண்டுபிடித்து இயேசுவிடம் அழைத்து வருகிறான். அப்படி செய்தும். தனது பழக்கத்தின்படி யோவான் தன்னை உட்படுத்திய இந்தத் தகவலை தன்னுடைய சுவிசேஷத்தில் பதிவு செய்யாமல் விட்டுவிடுகிறான்.

மறுநாள், இயேசு பிலிப்புவைப் பார்த்து: “நீ எனக்குப்பின் சென்று வா” என்று அவனை அழைக்கிறார். பிலிப்பு பற்தொலொமேயு என்றும் அழைக்கப்பட்ட நாத்தான்வேலை பார்த்து: “நீயாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே” என்று சொல்லுகிறான். நாத்தான் வேலுக்கு சந்தேகம், “நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா? என்று கேட்கிறான்.

“வந்து பார்” என்று பிலிப்பு அழைக்கிறான். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்தபோது, அவர் நாத்தான்வேலிடம்: “அத்திமரத்தின் கீழ் உன்னைக் கண்டேன்” என்று சொன்னார்.

நாத்தேன்வேல் ஆச்சரியப்படுகிறான் ‘ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்று பதிலளிக்கிறான்

இதற்குப்பிறகு வெகு சீக்கிரத்தில், இயேசுதம்முடைய புதிய சீஷர்களோடு யோர்தானைவிட்டு கலிலேயாவுக்கு பயணம் செய்கிறார். யோவான் 1:29-51

இயேசுவின் முதற் சீஷர்கள் யார்?

பேதுருவும் யாக்கோபும் எவ்வாறு இயேசுவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்கள்?

இயேசுதான் கடவுளுடைய குமாரன் என்று நாத்தான்வேலை நம்பச் செய்தது எது? W85 10/15

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்