நீங்கள் சத்தியத்தை நழுவ விடுகிறீர்களா?
விமானம் அமெஸான் காட்டுப்பகுதியில் இறங்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. உயிர்தப்பிய பயணிகளில் பெரும்பான்மையினர் தாங்கள் இறங்கிய மண்ணின் தனித்தன்மையில் அக்கறைக் காண்பிக்கவில்லை. ஆனால் கலக்கமுறாத கூர்ந்த கவனிப்புடைய ஒருவர் அப்படி இருக்கவில்லை! அவர் ஒரு மண்ணியல் அமைப்பு ஆராய்ச்சியாளர். ஹெலிகாப்டர் விமானம் இறங்கிய அந்த நிலத்துண்டு உயிரற்று வெறுமையாக இருப்பதைக் கண்டார். அந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடுவதற்குப் பதிலாக அவர் அந்தப் பகுதியைக் கூர்மையாகக் கவனித்தார். சற்று நேரத்திற்குப் பின்பு, மற்றவர்களுக்கு வெறுமையாகத் தோன்றிய நிலப்பரப்பு, உலகின் தாதுப் பொருட்கள் மிகுந்து காணப்படும் பகுதிகளில் ஒன்று என்பதை உணர ஆரம்பித்தார். இரும்பு, பக்ஸைட், மாங்கனீஸ். செம்பு மற்றும் தங்கம் ஆகிய தாதுக்கள் மிகுந்த “நியு எல்டெராடோ” என்று ஒருநாள் அந்த இடம் புகழப்படும் என்பதை உணர ஆரம்பித்தார்.
வாய்ப்புகளை நழுவவிடாமல் அதைப் பயன்படுத்திக்கொள்வோரைக் காண்பது மிகவும் அரிது. உதாரணமாக, நம்முடைய பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம கவர்னர் பொந்தியு பிலாத்துவைச் சிந்தித்துப் பாருங்கள். அவனுக்கு முன்பு ஓர் அரிய வாய்ப்பு வைக்கப்பட்டது. யூத மதத் தலைவர்கள் பூமியில் வாழ்ந்த சத்தியத்தின் மிகச் சிறந்த போதகரை அவனிடம் ஒப்புக்கொடுத்தார்கள். பிலாத்து அவரிடம் என்னென்ன கேள்விகளைக் கேட்டிருக்கலாம் என்பதைக் கற்பனைச் செய்து பாருங்கள்! அவன் மிகச் சிறந்த சத்தியங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தது என்பதையும் நினைத்துப் பாருங்கள். அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், “யூதர்களின் ராஜா” என்று உரிமைப் பாராட்டுவதாக அவர் மேல் குற்றஞ்சாட்டிய யூதர்கள் அவரை முதல் முறையாகக் கொண்டு வந்தபோது பிலாத்து காரியங்களைச் சற்று அறிந்துகொள்ளும் எண்ணமுடையவனாயிருந்தான்:
“நீ யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான் பிலாத்து.
அதற்கு இயேசு: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல . . . சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன். இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.” இந்த இடத்தில்தான் பிலாத்துக்கு ஒரு பொன்னான வாய்ப்பு திறக்கப்பட்டிருந்தது. கடவுளுடைய வாக்குறுதிகளின் உண்மைத் தன்மைக்கு உயிருள்ள சாட்சியாக இருந்தவரும் மற்ற எந்த மனிதனாலும் முடியாததை, அதாவது இந்தக் காரியங்களின் பேரில் அவனுக்கு விளக்கம் அளித்திட அல்லது தெளிவுபடுத்திடக்கூடியவரும், மேலும் அதைச் செய்ய மனமுள்ளவருமாயிருந்த ஒருவர் அவனுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தார். அப்படியிருந்தும் பிலாத்துவின் பதில் என்ன? “சத்தியமாவது என்ன?” பின்பு அவன் அப்படியே “யூதர்களிடத்தில் வந்து”விட்டான்.—யோவான் 18:33-38.
ஆம், பிலாத்து சத்தியத்தை நழுவவிட்டான். இன்றும் பலர் அதே தவற்றைத்தான் செய்கின்றனர். நீங்கள் இப்பொழுது வாசித்துக் கொண்டிருக்கும் இந்தப் பத்திரிகைதானே காவற்கோபுரம், மக்களுக்குச் சத்தியத்தைத் தெளிவுபடுத்திடுவதற்காகவே பிரசுரிக்கப்படுகிறது. அப்படியிருந்தும், அநேகர் இதை வாசிக்க மறுத்துவிடுகின்றனர். மற்றவர்கள் இதன் கட்டுரைகளை வாசித்து மகிழ்கின்றனர், ஆனால் கரியங்களை அத்துடன் நிறுத்திக் கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் ஒருவேளை, பிலாத்துவைப்போன்று சத்தியத்தை நழுவ விடுகிறவர்களாக இருக்கக்கூடுமா? (w86 3/1)