ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
ஃபிஜி-யில் யெகோவா தாமே ‘விளையச் செய்கிறார்’
எழில் கமழும் ஃபிஜி தீவுகளில் உண்மையுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளின் மீது யெகோவாவின் ஆசீர்வாதம் வெளிப்படையாய் இருக்கிறது இப்போது 1,049 யெகோவாவின் சாட்சிகள் அந்த தீவுகளில் இருக்கிறார்கள். இது கடந்த வருடத்தைவிட 10 சதவித அதிகரிப்பாக இருக்கிறது. அவர்கள் நட்டு நீர் பாய்ச்சியிருக்கிறார்கள். கடவுளே காரியங்களை விளையச் செய்கிறார்a—1 கொரிந்தியர் 3:6,7.
காவற்கோபுர சங்கத்தின் கிளைக் காரியாலயம், “எதிர்பாரா விதமாக ஜனங்கள் பைபிள் படிப்பில் அக்கறை காண்பிக்கிறார்கள்” என்று அறிக்கை செய்கிறது. ஒரு சபையின் அங்கத்தினர் தனித்திருந்த ஒரு கிராமத்தில் வேலை செய்தனர். முன்பு இந்தக் கிராமத்தில் அவர்கள் வரவேற்கப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் இந்த முறை கிராமத் தலைவர்கள், கிராமவாசிகள் அனைவரும் தங்கள் வீட்டில் தங்கியிருந்து யெகோவாவின் சாட்சிகளுக்கு செவிகொடுக்க வேண்டுமென்றும் அதற்கு பின்பு சமூக கூடத்திலிருக்கும் சகோதரர்களுக்கு தின்பண்டங்களை அளிக்குமாறும் கூறினார். இரண்டு வாரங்களுக்கு பிறகு திரும்பும்போது. 28 ஆட்கள் பைபிள் படிக்க தயாராக இருப்பதை ஒரு ஒழுங்கான பயனியர் கண்டார். அது முதற்கொண்டு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நற்செய்தியை அங்கு எடுத்துச்சென்று அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும் உதவி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சமீபத்தில் புதிதாக முழுக்காட்டப்பட்ட 68 ஆட்களில் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை வேதப்பள்ளிக்கு ஒன்பது வருடங்கள் ஆசிரியராக இருந்தார். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் இரண்டு சாட்சிகள் அவரை சந்தித்து. “வெகு நேரம் சம்பாஷித்தப்பிறகும், அநேக மறுசந்திப்புகளுக்கு பிறகும், கடைசியில் அவரோடு ஒரு படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.” இரண்டு மாதங்கள் பைபிளை படித்த பிறகு அவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை வேதப்பள்ளி ஆசிரியராக இருபதிலிருந்து ராஜினாமா செய்தார். சத்தியத்திற்கா நிலைநிற்கை எடுத்து, ஒரு வருடத்திற்கு பிறகு முழுக்காட்டுதல் பெற்றார்.
முதன் முறையாக 1984-ல் ஃபிஜியில் இரண்டு மாவட்ட மாநாடுகள் நடைபெற்றன. முக்கிய தீவிலிருக்கும், இருபத்திரண்டு மூப்பர்கள், தங்களுடை சொந்த செலவில், இன்னொரு தீவில் நடக்கும் சிறிய மாநாட்டு நிகழ்ச்சி நிரலை நடத்த முன்வந்தனர். பயணம் செய்வதற்கு கிளைக்காரியாலயம் ஏற்பாடு செய்தது. முக்கிய தீவிலிருந்து 90 சகோதரர்கள் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் 115 பேர் விசேஷ விமானத்தின் மூலம், 320 போர் வாடகைக்கு எடுக்கப்பட்ட கப்பலின் முலமும் பயணம் செய்து வந்தனர். சாட்சிகளின் நல்நடத்தையின் காரணமாக விமான ஓட்டுநர் ஒருவர் பின்வருமாறு கூறினார். “அவர்களுடைய நடத்தையைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன், கொடுக்கப்பட்ட கட்டளைகளுடன் ஒத்துழைக்க தயாராக இருந்தனர். இயந்திரக் கோளாறின் காரணமாக, விமானத்திலிருந்து கீழே இறங்கவேண்டுமென்று அறிவிப்பு செய்யப்பட்டபோது. ஒரு விதமான முறுமுறுப்பு அல்லது குறைகூறுதல் இல்லாமல், விமானத்தை விட்டு அமைதியோடு இறங்கினர். திரும்பவும் அவர்கள் விமானத்தில் ஏறினபோது சந்தோஷமாகவும், அமைதியோடும் சண்டைகள் இல்லாமலும் ஏறினர். விமானத்தில் ஏறின எல்லா பயணிகளும் உங்களைப் போன்றவர்களாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.”
வாடகைக் கப்பலின் தலைமை பொறியாளர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “உங்களைப் போன்ற பயணிகளை கொண்டிருப்பது நல்லது. இப்போது தானே நாங்கள் இன்னொரு தீவுக்கு அனுப்பிய மற்றொரு கிறிஸ்தவ இளைஞர் தொகுதியிலிருந்து நீங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறீர்கள். . . .நீங்கள் சுத்தமுள்ளவர்கள், உங்களோடு ஒத்துச் செல்வது சுலபமாக இருக்கிறது.” உடன் பயணம் செய்யும் ஒருவர் இவ்வாறு சொன்னார். “நான் அனுபவித்திராத ஒன்றைப் பார்த்தேன். . .நாங்கள் கப்பலின் அடித்தளத்தில் குளிரோடு படுத்திருந்தபோது உங்களுடைய சகோதரர்களில் ஒருத்தி எனக்கும் என்னுடைய மனைவிக்கும் தன்னுடைய மெத்தையை படுக்க கொடுத்தாள். நான் இவ்விதமான மதத்தையே தேடிக்கொண்டிருந்தேன்.” இவர் மேலும் அதிகம் கற்றுக்கொள்ள மாநாட்டுக்கு ஆஜராயிருந்தார்.
உண்மையில், இந்த சகோதரர்களின் நல்ல நடத்தையைத்தான் உண்மையான கிறிஸ்தவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கவேண்டும். இயேசு இவ்வாறு சொன்னார்: “நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்” ஃபிஸியில் உண்மையுள்ள வணக்கத்தாருக்கு யெகோவா கொடுக்கும் அதிகரிப்பை காண்பது சந்தோஷமாக இருக்கிறது, மேலும் யெகோவாவின் ஜனங்களின் நல்நடத்தையை பார்த்து இன்னும் அநேகர் நற்செய்திக்கு செவி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. (W86 3/1)
[அடிக்குறிப்பு]
a “சாட்சிகளில் இப்பொழுது 1, 107 வீட்டு வேதப் படிப்புகளை (கடந்த ஆண்டைவிட 42 சதவிகிதம் அதிகம்) நடத்தி வருகையில் சந்தேகமில்லாமல் யெகோவா கூடுதலான அதிகரிப்பை கொடுப்பார் என்பது நிச்சயம்.