உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w89 2/1 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • இதே தகவல்
  • ஞாபகார்த்தத்தின்போது ‘நாம் என்னவாயிருக்கிறோம் என்று பகுத்தறிதல்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • “ஜீவ அப்பம்” அனைவருக்கும் கிடைக்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • நம் எஜமானரின் இரவு விருந்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • கர்த்தருடைய இராப்போஜனம் ஆசரிப்பது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
w89 2/1 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வருடாந்தர ஆசரிப்பாகிய கர்த்தரின் இராப்போஜனத்தன்று ஏன் யெகோவாவின் சாட்சிகளில் வெகு சிலர் மட்டுமே அப்பத்தையும் திராட்சரசத்தையும் உட்கொள்ளுகின்றனர்?

இது ஏனென்றால் கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகளுக்கு நேர் எதிர்மாறாக, குறைந்த எண்ணிக்கையுள்ள மானிடர்கள் பரலோக வாழ்வை அடைவார்கள் என்றும் மீதமுள்ள கடவுளுடைய உண்மையான ஊழியர்கள் பூமியில் நித்திய ஜீவனை பலனாக பெறுவார்கள் என்றும் பைபிள் போதிப்பதை யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுளைப் பிரியப்படுத்தும் எல்லாருக்கும் பலன் பரலோகம் என்றும் மற்றவர்கள் நரக ஆக்கினைக்குச் செல்வார்கள் என்றும் சர்ச்சுகள் அதிக காலமாக போதித்து வந்திருக்கின்றன. பைபிள் வேறு விதமாக சொல்கிறது. அப்போஸ்தலர்களைப் போன்ற சில மனிதர் மட்டுமே கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ஆட்சி செய்வார்கள் என்று வேதவாக்கியங்கள் தெளிவாக காட்டுகின்றன. இவர்களை “சிறு மந்தை” என்று இயேசு சொன்னார். அவர்களின் எண்ணிக்கை 1,44,000 என்று பைபிள் சொல்கிறது. (லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 14: 3, 4) யெகோவாவை உண்மையாக சேவித்து அவருடைய அங்கீகாரத்தைப் பெற்ற அநேகர், பரலோக வாழ்க்கைக்கான வழியை இயேசு திறந்து வைப்பதற்கு முன்பாக மரித்துவிட்டனர். (மத்தேயு 11:11; எபிரெயர் 10:19–21) “சிறு மந்தை” தேர்ந்தெடுப்பது முடிந்த பின்பு இலட்சக்கணக்கான மற்றவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக ஆகியிருக்கின்றனர். “சிறு மந்தை”யைச் சேராத இந்த எல்லா உண்மையுள்ள ஆட்களும் புதுப்பிக்கப்பட்ட பரதீஸிய பூமியில் முடிவில்லா வாழ்வை அடைவார்கள் என்ற எதிர்பார்ப்பை பைபிள் அளிக்கிறது. (சங்கீதம் 37:20, 29; வெளிப்படுத்துதல் 21:4, 5) ஆனால் ஏன் இப்படிப்பட்டவர்களும் அப்பத்தையும் திராட்சரசத்தையும் உட்கொள்ளுவதில்லை? கர்த்தரின் இராப்போஜன சமயத்தில் அடையாளச் சின்னங்களை உட்கொள்ளுதல், பரலோக வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் புதிய உடன்படிக்கையில் இருப்பவர்களுக்கும் மட்டுமே என்று இயேசு குறிப்பிட்டார்.

கடவுளுடைய மன்னிப்பைப் பெற்று நித்திய ஜீவனை பரதீஸிய பூமியிலோ அல்லது பரலோகத்திலோ அடைவதற்கு இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்பது அவசியம். கிறிஸ்து இதை யோவான் 6:51-54-ல் காண்பித்தார்: “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் (எவனும், NW) என்றென்றைக்கும் பிழைப்பான்; . . . நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே . . . என் மாம்சத்தை புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு.”

இயேசு அந்த வார்த்தைகளை சீஷர்களல்லாத மற்றவர்களிடமும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கதாயிருக்கிறது. அற்புதமாக ஆயிரக்கணக்கானோரை போஷித்த மறுநாளில் கப்பர்நகூமில் இயேசுவினிடத்திற்கு திரள் கூட்டம் வந்தது. இந்தக் கூட்டம் அவரோடு கொண்டிருந்த சம்பாஷணையில் யோவான் 6:51-54-லுள்ள அவருடைய வார்த்தைகள் அடங்கியிருக்கின்றன. தாம் அடையாளப்பூர்வமான “வானத்தில் இருந்து இறங்கின அப்பம்” என்றும் அது வனாந்தரத்தில் புசித்த மன்னாவைக் காட்டிலும் அதிகமான, நிலையான ஜீவனுக்குரிய எதிர்பார்ப்புகளைத் தரும் என்றும் பிரதானமாக சீஷர்களிடம் மட்டும் இயேசு சொல்லவில்லை.—யோவான் 6:24-34.

வனாந்தரத்தில் இருந்த அந்தப் பூர்வ அனுபவத்தைச் சிந்திக்கையில், எகிப்திலிருந்து வெளியேறி வனாந்தரத்திற்குள் வந்தவர்கள் யார் என்பதை திரும்ப நினைவுகூர்ந்து பாருங்கள். அதில் ‘பிள்ளைகள் தவிர கால்நடையாய் போன இஸ்ரவேல் புத்திரர் ஆறு லட்சம் பேரும், பல ஜாதியான ஜனங்களும்’ இருந்தார்கள். (யாத்திராகமம் 12:37, 38; 16:13-18) இஸ்ரவேலரை விவாகம் செய்த எகிப்தியரும் இஸ்ரவேலரோடு தங்களைச் சேர்த்துக் கொண்ட மற்ற எகிப்தியரும் இந்த “பல ஜாதியான ஜனங்களில்” அடங்கியிருந்தார்கள். உயிரோடிருப்பதற்கு இஸ்ரவேலருக்கும் “பல ஜாதியான ஜனங்களுக்கும்” மன்னா தேவைப்பட்டது. ஆனாலும், “பல ஜாதியான ஜனங்களுக்கு” இஸ்ரவேலரைப் போலவே அதே எதிர்பார்ப்புகள் இருந்தனவா? இல்லை, அது அவர்களுக்கு இல்லை. அவர்கள் இஸ்ரவேலர்கள் மத்தியில் வணங்கி, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் பிரவேசிக்கும் நம்பிக்கையோடு இருந்த போதிலும், நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் அவர்கள் அரசர்களாகவோ ஆசாரியர்களாகவோ இருக்கவே முடியாது. எனவே வனாந்தரத்தில் சொல்லர்த்தமான மன்னாவை புசித்ததானது எல்லாருக்கும் ஒரேவிதமான எதிர்பார்ப்புகளை கொடுக்கவில்லை.

யோவான் 6:51-54-லுள்ள வார்த்தைகளை இயேசு பேசியதற்கு ஒரு வருடத்துக்குப் பின்பு தம்முடைய சீஷர்களிடம் பேசின வார்த்தைகளை சிந்திக்கையில் இந்த வித்தியாசத்தை மனதில் வைத்திருப்பது அவசியமாகும். இந்தச் சமயத்தில் தம்முடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் அடையாளப்படுத்தும் அப்பத்தையும் திராட்சரசத்தையும் உட்படுத்தும் ஒரு புதிய பழக்கத்தை இயேசு விளக்கினார். கர்த்தரின் இராப்போஜன ஆசரிப்பை துவக்கி வைத்தப்போது தம்மை நெருக்கமாகப் பின்பற்றியவர்களிடம், “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” ஏன்று இயேசு சொன்னார். அதே சிறிய தொகுதியாகிய அப்போஸ்தலர்களிடம் அவர் கூடுதலாக: “மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடே கூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால் என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினது போல நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம் பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின் மேல் உட்காருவீர்கள் என்றார்.”—லூக்கா 22:20, 28-30.

இயேசுவின் மாம்சத்தையும் இரத்தத்தையும் அடையாளப்படுத்தும் சின்னங்களான உண்மையான அப்பத்தைப் புசிக்கவும் உண்மையான திராட்சரசத்தை குடிக்கவும் செய்பவர்கள், “புதிய உடன்படிக்கை”யிலிருக்கும் சீஷர்கள் என்பதை பிற்பகுதியில் வரும் வார்த்தைகளில் கவனியுங்கள். அப்படிப்பட்டவர்கள் இன்னொரு உடன்படிக்கைக்குள்ளும் இருப்பார்கள். அது “அவருடைய ராஜ்யத்தில்” ஆட்சியை பகிர்ந்துகொள்ள இயேசு அவர்களுடன் செய்யும் உடன்படிக்கையாகும். தெளிவாக, இயேசு இங்கே ‘ராஜாக்களும் ஆசாரியர்களுமாக பூமியை அரசாளுபவர்களைக்” குறிப்பிட்டுப் பேசினார். (வெளிப்படுத்துதல் 5:10) பரலோக அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் 1,44,000 பேரை கடவுள் முதல் நூற்றாண்டிலிருந்து தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்கள் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் அவர்கள் “கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்கள்” என்று வருணிக்கப்படுகின்றனர். (1 கொரிந்தியர் 1:2; ரோமர் 1:7; 8:15-17 ஒப்பிடுக.) “அவருடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையை” அர்த்தப்படுத்தும் அடையாளச் சின்னங்களாகிய அப்பத்தையும், திராட்சரசத்தையும் போற்றுதலோடு உட்கொண்டு கர்த்தரின் இராப்போஜனத்தில் இந்தப் “பரிசுத்தவான்கள்” பங்கு கொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள்.—1 கொரிந்தியர் 11:23-26.

பரலோக வாழ்க்கைக்கு கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஒரு சிறிய மீதியானோர் மட்டுமே இன்று பூமியில் உயிரோடிருக்கிறார்கள். வருடாந்தர ஞாபகார்த்த ஆசரிப்பின் போது “புதிய உடன்படிக்கையில்” இருக்கும் அப்படிப்பட்டவர்களே அடையாளச் சின்னங்களாகிய அப்பத்தையும் திராட்சரசத்தையும் உட்கொள்ள அதிகாரம் பெற்றுள்ளனர்.

ராஜ்ய ஆட்சியின் கீழ் இந்தப் பூமியில் என்றும் வாழலாம் என்று எதிர்பார்க்கும் எல்லா உண்மையான கிறிஸ்தவர்களும் இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம் இது கூடிய காரியமாகும் என்று அறிந்திருக்கின்றனர். இயேசு ஜனக்கூட்டத்திடம் சொன்னது போல, “அவரே வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம்.” (யோவான் 6:51) எனினும், பூமிக்குரிய நம்பிக்கை உடையவர்கள் சொல்லர்த்தமான ஞாபகார்த்த சின்னங்களை உட்கொள்ள வேண்டும் என்று அது அர்த்தப்படுத்தாது. ஏனெனில் அவர்கள் “புதிய உடன்படிக்கையில்” இல்லை, “கிறிஸ்துவுடைய ராஜ்யத்தில் அவருடன் சிங்காசனங்களில் உட்காரும்” உடன்படிக்கையிலும் இல்லை.

இதன் காரணமாக, பூமிக்குரிய நம்பிக்கையையுடைய இந்தப் பெரிய தொகுதி, அடையாள சின்னங்களாகிய அப்பத்தையும் திராட்சரசத்தையும் உட்கொள்ளுவதில்லை. எந்த விதத்திலும் இது இயேசுவின் சரீரத்திலும் இரத்தத்திலும் விசுவாசம் அல்லது போற்றுதல் இல்லை என்பதைக் காண்பிக்காது. உண்மை என்னவெனில், அவருடைய பலியில் ஆழ்ந்த போற்றுதலும், சந்தோஷமான பூமிக்குரிய எதிர்பார்ப்பும் இருப்பதன் காரணமாக, கர்த்தரின் இராப்போஜன ஆசரிப்பின் போது மரியாதையான பார்வையாளராக ஒவ்வொரு வருடமும் கட்டாயமாக அவர்கள் ஆஜராகின்றனர். இந்த விதத்தில் அவர்கள் தங்கள் சொந்த விசுவாசத்துக்கும், “சிறு மந்தையின்” மீதியானோரும் திரளான “வேறே ஆடுகளும்” அனலான ஐக்கியத்தில் இருக்கிறார்கள் என்பதற்கும், சந்தோஷமான அத்தாட்சியை கொடுக்கின்றனர்.—யோவான் 10:16. (w88 2⁄1)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்