மகா பாபிலோன் அவளின் தீர்ப்பு நிறைவேற்றம்
“இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.” “அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் [யெகோவா] வல்லமையுள்ளவர்.”
நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் நுற்றாண்டில் அப்போஸ்தலன் யோவான் எழுதிவைத்த இந்த வார்த்தைகள் எதைக் குறிக்குமென அதிசயிக்க நமக்கு உரிமையுண்டு. இந்த ‘வேசிகளின் தாய்’ யார்? கடவுள் அவளுக்கு அவ்வளவு கடுமையான தீர்ப்பு கொடுக்க அவள் எவ்வாறு அவருக்கு அவ்வளவு மிகத் தீங்குசெய்தாள்? இந்த மர்ம வேசியாகிய மகா பாபிலோனுக்கு எதிரான கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் சந்தேகமில்லாமல் பாழ்ப்படுத்துகின்றன. இது, இந்த வேசி யார், அவளுடைய விலக்கமுடியாத முடிவு நம்மை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தீர்மானிக்க நிச்சயமாகவே நமக்குக் காரணமளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 18:21.
யாரை அல்லது எதை மகா பாபிலோன் அடையாளமாய்க் குறிக்கிறது? உலக அரசர்கள் அவளோடு வேசித்தனம் பண்ணினார்களென்றும் வர்த்தகர்கள் அவளோடு வியாபாரத் தொடர்புகள் கொண்டார்கள் என்றும் பைபிளில் சொல்லியிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 18:3) இதனால், அவள் அரசியலையோ பெரும் வாணிகத்தையோ குறிக்க முடியாது. ஆகையால், இது உலகத்திலுள்ள மூன்றாவது வல்லமைவாய்ந்த பகுதி மட்டுமே, ‘வேசிகளுக்குத் தாய்’ என்ற பட்டப்பெயரை ஏற்பதற்கு பொறுத்தமானதாக்குகிறது. இவள் சாத்தானின் பொய்மத உலகப் பேரரசே தவிர வேறு எதுவுமில்லை!a
இப்பொழுது பின்வரும் கேள்விகள் மீந்திருக்கின்றன: ஏன், எவ்வாறு, மேலும் எப்பொழுது மகா பாபிலோனின்மீது தீர்ப்பு நிறைவேற்றப்படும்? அல்லது காரியங்களை வெளிப்படையாய்ச் சொல்ல: ஏன், எவ்வாறு, மேலும் எப்பொழுது பொய் மதம் இந்தப் பூமியிலிருந்து ஒழிந்துபோகும்?
கிறிஸ்தவமண்டலத்தின் கிறிஸ்தவமல்லாதப் பதிவு
பொய் மதத்தின் பதிவை நாம் கவனிக்கையில், பின்வரும் பூர்வ தீர்க்கதரிசன வசனிப்பு சரியாகவே நம் நினைவுக்குக் கொண்டுவரப்படலாம்: “அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்.” (ஓசியா 8:7) இது கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் கூறின நியமத்தோடு ஒத்திருக்கிறது: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7) ஆகவே, உலகளாவிய அளவில் பொய் மதம் என்ன விதைத்திருக்கிறது? எதை அது அறுவடை செய்யும்?
தம்மைப் பின்பற்றுவோர் தங்கள் அயலாரைமட்டுமல்ல தங்கள் சத்துருக்களையும் நேசிக்கவேண்டுமென்று இயேசு கிறிஸ்து கற்பித்தார். (மத்தேயு 5:43, 44) பவுல், எபிரெய வேத எழுத்துக்களிலிருந்து மேற்கோளெடுத்துக் காட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் பகைஞரை எவ்வாறு நடத்தவேண்டுமென்பதை விளக்கினான். அவன் சொன்னதாவது: “உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால் அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.”—ரோமர் 12:20, 21.
எனினும், கிறிஸ்தவமண்டல மதங்களின் சரித்திரம் பகையாலும் இரத்தஞ் சிந்துதலாலும் நிறைந்திருக்கிறது. கொள்ளையும், வன்முறைப்பழிச்செயல்களும், கொல்லுதலும் உட்பட்ட பூர்வகால மற்றும் தற்காலக் கிறிஸ்தவமண்டல மதப் போர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு பொருட்படுத்தாமல் விடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக அபிஸ்ஸினியாவில் பாஸிஸ்ட் இத்தாலியின் வன்முறைப்பழிச் செயல்கள் (1935) மேலும் ஸ்பானிய உள்நாட்டுக் கலகத்தின்போது ஃபிராங்கோவின் “சிலுவைப் போர்” (1936-39) ஆகியவை கத்தோலிக்கச் சர்ச்சின் உயர்பதவியாளர்களால் ஆசீர்வதிக்கப்பட்டன.
மக்களைக் கழுமரத்தில் கட்டி எரிப்பதால் மதக் கொள்கைகளைப் பற்றிய வேறுபாடுகள் தீர்க்கப்பட்டன. பைபிள் மொழிபெயர்ப்பாளன் உவில்லியம் டின்டேலை, அவன் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த “புதிய ஏற்பாட்டை” பிரசுரித்தப் பின், 1536-ல் கழுமரத்தில் தூக்கிலிட்டு அவன் உடலை எரித்தனர். அதற்கு முன்னால், போப் மார்ட்டின் V-ன் கட்டளையின்பேரில், மத அதிகாரிகள், பழிவாங்கும் ஆவியால் தூண்டிவெறியூட்டப்பட்டு, பைபிள் மொழிபெயர்ப்பாளன் உவைக்ளிஃப்பின் எலும்புகளை எரிக்கும் இன்பத்தைப் பெறும்படி, அவன் மரித்து 44 ஆண்டுகளுக்குப் பின் அவற்றைத் தோண்டியெடுத்தனர். மதபேதக் கோட்பாட்டினரை ஒடுக்குவதற்கான கத்தோலிக்க விசாரணை மன்றம் இருந்துவந்த காலத்தில், ஆயிரக்கணக்கான யூதர்களும் “மதபேதக் கோட்பாட்டினரும்” தங்கள் உடைமைகள் முழுவதும் பிடுங்கப்பட்டு, வதைத்து, கழுமரத்தில் எரிக்கப்பட்டனர்—எல்லாம் கிறிஸ்துவின் பெயரில் செய்ததாகப் பாராட்டிக்கொள்ளப்பட்டது! ரோமன் கத்தோலிக்கராலும் புராட்டஸ்டண்டினராலும் ஒன்றுபோல் துன்புறுத்தப்பட்ட மதஞானி மைக்கல் செர்வெட்டஸை, புராட்டஸ்டண்ட் ஜான் கால்வினின் கட்டளைகளின்பேரில் கழுமரத்தில் எரித்தனர். இந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களில், “கிறிஸ்தவ” பாதிரிமார் இராணுவப் படைகளை ஆசீர்வதித்தனர், நாட்டுப்பற்றுள்ள குருமார் கொல்லும்படி படைவீரர்களை ஊக்கப்படுத்தினர்.
இது உண்மையான கிறிஸ்தவத்துக்கு எத்தகைய மாறுபாடு! அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “கடவுளினுடையவர்களாகிய தெரிந்தெடுக்கப்பட்டவர்களும் பரிசுத்தரும் பிரியருமான நீங்கள் [கனிவான உள்ளன்புடைய] இரக்கமுள்ள மனது, தயாளம், தாழ்மை, சாந்தம், நீடியபொறுமை இவற்றைத் தரித்துக்கொண்டு ஒருவரையொருவர் பொறுத்து ஒருவன்மேல் ஒருவனுக்குக் குறையுண்டானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; ஆண்டவர் [யெகோவா, NW] உங்களுக்கு மன்னித்ததுபோலவே நீங்களும் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:12-14, தி.மொ.
ரோமிலிருந்தக் கிறிஸ்தவர்களுக்குப் பவுல் எழுதினதாவது: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள், எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்யக் கருத்தாயிருங்கள், கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். பிரியமானவர்களே, பழிவாங்குவது என் காரியம், பதிற்செய்வதும் நானே என்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறாரென்று எழுதியிருக்கிறபடியால் நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” (ரோமர் 12:17-19) அப்படியானால், கிறிஸ்தவ நியமங்களைத் துணைக்கொண்டு பார்க்கையில், கிறிஸ்தவமண்டலம் தவறிவிட்டது. அது பகையையும் பாசாங்குத்தனத்தையும் விதைத்திருக்கிறது அழிவை அறுவடைசெய்யும்.
கிறிஸ்தவமல்லாத மதங்கள்—அவற்றின் பதிவு
ஆனால் மகா பாபிலோன் கிறிஸ்தவ மதங்களைப் பார்க்கிலும் அதிகமானவற்றைக் கொண்டிருக்கிறது. இழிவான பெயர்பெற்ற இந்த வேசியின் இரத்தப் பழியில் இவ்வுலகப் பெரும் மதங்கள் யாவும் பங்குகொள்கின்றன. உதாரணமாக, ஜப்பானின் ஷின்டோ மதம், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய இராணுவம் காட்டின மதவெறிக்கும் கொடுமை-விருப்ப மனப்பான்மைக்கும் ஒரு பங்கு பழியைத் தாங்கவேண்டும். ஐரோப்பிய நடத்தை தராதரங்கள் மேம்பட்டுநிற்கும் “கடுமையான போட்டியிடும் உலகத்தில் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள, ஷின்டோவும் பஷிடோவும் [“போர்வீரனின் போக்கு”] என்றறியப்படும் அரசாங்க மதத்தையும் ஆளும் ஒழுக்கமுறையையும்” புதிதாக உருவாக்குவது அவசியமென அவர்கள் கண்டனர். . . . தவறாது செய்யும் பேரரசன்-வணக்கம் சட்டப்படி நிறுவப்பட்டது, முக்கியமாய் படைக்கலம்பூண்ட படைவீரர் குழுக்களில் அவ்வாறு செய்யப்பட்டது, மேலும் 1920-ம் பத்தாண்டுகள் முதற்கொண்டு ஒரு தேசீய ஒழுக்கவியல் தொகுப்பு, கோக்குமின் டோட்டுக்கு, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் கற்பிக்கப்பட்டது.” இதன் விளைவென்ன? ஜப்பான் பெர்ல் துறைமுகத்தை வெடிகுண்டுகளால் தாக்கி இவ்வாறு இரண்டாம் உலகப் போருக்குள் பிரவேசித்தபோதான 1941-க்குள், “ஷின்டோ . . . பழம்பாணியான, புறக்கணிக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையரின் வழிபாட்டு மரபாயிருந்ததிலிருந்து நவீன, சர்வாதிகார அரசாங்கத்தின் மதமாகச் சட்டப்பூர்வமாய் மாற்றப்பட்டது, ஆகவே, தனியியல்பான வெறுக்கத்தக்க முரண்நகைச்சுவையாக, இந்தச் சகாப்தத்தின் உலகப்பிரகாரமான திடுக்கிடச் செய்யும் காரியங்களை எதிர்ப்பதற்குச் சேவிக்கவேண்டிய மதம், அவற்றிற்குக் குற்றமற்றத் தோற்றம் வழங்க பயன்படுத்தப்பட்டது,” என்று சரித்திராசிரியர் பால் ஜான்சன் வலியுறுத்துகிறார்.
1947-ல், மத வேறுபாடுகள் ஒரு காரணமாயிருந்த, இந்தியாவின் பகுதி பிரித்தலைக் குறித்து, சரித்திராசிரியர் ஜான்சன் பின்வருமாறு சொல்லுகிறார்: “ஏறக்குறைய 50-60 இலட்ச ஜனங்கள் தங்கள் உயிரைக் காப்பதற்கு ஒவ்வொரு திசையிலும் ஓடினர். . . . அந்தச் சமயத்தில் செத்தவர்களின் மதிப்பீடு 10-20 இலட்சம் வரையாக ஏறிற்று. தற்போதைய சமீபகாலக் கணக்குகள் 2,00,000-லிருந்து 6,00,000-க்கு எட்டுகின்றன.” மதக் காரணத்தால் தூண்டப்பட்டுக் கொல்லுதலும் சிறுமைப்படுத்துதலும் இந்நாள்வரையில் இந்து சமுதாயத்தில் நடக்கிறது. அடிக்கடி ஹரிஜன்கள், அல்லது முன்னால் தீண்டப்படாதவர் எனப்பட்ட கீழ்மக்கள், செல்வந்தரான ஜமீந்தார்கள் ஏற்பாடுசெய்யும் கும்பல் கொலைக்கு ஆளாகிறார்கள்.
இந்துமதம் ஆவியுலகத் தொடர்புகொள்ளும் பழக்கங்களோடு இணைந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 18:23) இந்திய எழுத்தாளர் சுதீர் காக்கர் “மாய மந்திரத்துக்கும் அதை அப்பியாசிப்போருக்கும் சாதாரண இந்துக்கு இருக்கும் வசீகரத்தையும் மரியாதையையும்” பற்றிப் பேசி பின்வருமாறு மேலும் கூட்டுகிறார்: “சோதிடர், குறிசொல்வோர், ஞானதிருஷ்டிக்காரர், சாதுக்கள் [துறவிகளான “புனித” மனிதர்], பக்கிரிகள் [மாயவித்தை நடப்பிக்கும் இரவலர்] இன்னும் மற்ற தெய்வ-மனிதர் மிக ஆழ்ந்தவண்ணம் மதிக்கப்படுகின்றனர் ஏனெனில் அவர்கள் மேலுலக மெய்ம்மையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக எண்ணப்படுகின்றனர்.”—India Today, ஏப்ரல் 30, 1988.
மேலும், இந்துக்களுக்கும், சீக்கியருக்கும், இன்னும் மற்றக் கிழக்கத்திய மதங்களுக்கும் இடையில் அடிக்கடி போராட்டங்கள் இருந்துவருகின்றன. இந்தப் போராட்டங்களோடு, ஒவ்வொரு மதமும் அதன் பங்கான பகையையும், சண்டையையும், கொலையையும் கூட்டுகிறது. இது மகா பாபிலோனின் கனியின் மற்றொரு அம்சமேயாகும்.
மேலும், போர், கொல்லுதல், மற்றும் அடக்கி ஒடுக்குதல் ஆகியவற்றின் தற்கால சரித்திரம் யூத மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு எந்த ஆதரவும் தருகிறதில்லை. யூதமத ஹாசிடிக் பிரிவினரின் உறுப்பினர் மற்ற யூதமதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடமும் புறமதத்தினரிடமும் சிலசமயங்களில் வெளிப்படுத்திக்காட்டும் வன்முறைச் செயல்கள் கடவுளுடைய பார்வையில் சற்றும் சிபாரிசுக்குரியதாக இல்லை.
உலகளாவிய மதப் பேரரசின் சரித்திரத்தை நாம் ஆராய்கையில், மகா பாபிலோனின்மீது அழிவு தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு ஈடற்ற உன்னத நியாயாதிபதிக்குத் தக்கக் காரணம் இருப்பதை நாம் எளிதில் காணலாம். ஆம், “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 18:24) உள்நாட்டு மற்றும் உலகப் போர்களில் பொய்மதம் தன்னை உட்படுத்திக் கொண்டது, “பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய” இரத்தத்துக்காகக் கடவுளுடைய பார்வையில் தன்னை இரத்தப் பழியுள்ளதாக்கியிருக்கிறது.”
உலக அதிபதிகளோடு அதன் ஆவிக்குரிய வேசித்தனம், போர்களில் அதன் இரத்தப் பழி, அதன் ஆவியுலகத் தொடர்பு பழக்கங்கள் ஆகியவற்றின் சரித்திரப் பதிவின் காரணத்தால், பைபிளின் சட்ட முறைமையின்படி மகா பாபிலோன் அழிவுக்குத் தகுதியுள்ளதெனத் தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆகையால், சாத்தானின் பொய்மத உலகப் பேரரசு முடிவு செய்யப்படவேண்டுமென யெகோவா தேவன் நியாயத் தீர்ப்பு செய்துவிட்டார்.—வெளிப்படுத்துதல் 18:3, 23, 24.
பொய்மதம் எவ்வாறு அழியும்
மகா பாபிலோனின் அழிவை, வெளிப்படுத்துதலின் புத்தகம், மிக உயர்ந்த அடையாள மொழிநடையில் விவரிக்கிறது. வெளிப்படுத்துதல் 17:16-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “நீ கண்ட பத்துக் கொம்புகளும் மிருகமுமான அவர்கள் அந்த வேசியைப் பகைத்து அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி அவள் மாம்சத்தைப் பட்சித்து அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள்.” (தி.மொ.) அந்தப் “பத்துக் கொம்புகள்” இப்பொழுது உலகக் காட்சியில் இருப்பவையும், அந்தச் “சிவப்பு-நிற மூர்க்க மிருகம்” ஆகிய ஐக்கிய நாட்டுச் சங்கத்தை ஆதரிப்பவையுமான எல்லா அரசியல் வல்லரசுகளையும் அடையாளமாய்க் குறிக்கின்றன; அந்தச் ‘சிவப்பு-நிற மிருகந்தானேயும்’ பிசாசின் இரத்தக் கறைப்பட்ட அரசியல் ஒழுங்குமுறையின் சொரூபமாகும்.—வெளிப்படுத்துதல் 16:2; 17:3, NW.b
பைபிள் தீர்க்கதரிசனத்தின் பிரகாரம், ஐக்கிய நாட்டுச் சங்கத்தில் சேர்ந்துள்ள அந்த அரசியல் வல்லரசுகள் பொய்மத உலகப் பேரரசுக்கு எதிராக எழும்பி அதைப் பாழாக்கிப் போடும். பொய்மதங்கள் யாவும் பாதிக்கப்படும். அரசியல் மற்றும் சமுதஜய துறைகளில் பொய்மதம் தலையிடுவதைக் குறித்து சில அரசியல் ஒழுங்குமுறைகள் ஏற்கெனவே தங்கள் எரிச்சலைக் காட்டியிருக்கின்றன. பொதுவுடைமைவாதி நாடுகள் சில நாத்திகத்தின் சார்பாக நிலைநிற்கைகொண்டு மதத்தை, அல்பேனியாவில் இருப்பதுபோல், நடைமுறையளவில் இல்லாமற்போனதாக அடக்கிப் போட்டிருக்கின்றன, அல்லது ருஷியாவிலும் சீனாவிலும் இருப்பதுபோல் காரியத்துக்குப் பயன்படுத்தும் வேலைக்காரி என்ற அளவுக்கு அடக்கிவைத்திருக்கின்றன. வேறு இடங்களில், ஏழ்மையான நாடுகளில் கத்தோலிக்கக் குருக்கள் சிலரின் விடுவிப்பு வேதாந்தக் கொள்கைக்குக் கடுங்கோபம் தெரிவிக்கின்றன. இன்னும் மற்றவை ஜாதிசம்பந்தக் காரியங்களில் உட்படும் மதங்களை அடக்கி ஒடுக்குகின்றன. முற்போக்கு நாடுகள் எனப்படுபவற்றிலும், மத குருக்கள் அரசியலிலும் சமுதாய விவாதங்களிலும் தலையிடுவதைக் கோபத்துடன் எதிர்க்கின்றன.
உலகமெங்கும் அரசியல் மூலப்பகுதிகள் பொய்மதத்துக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும்படி மேலுமான என்ன விவாதங்கள் கோபத்தைத் தூண்டிவிடுமென்பதைக் காத்திருந்தே காணவேண்டும். ஆனால் ஒரு காரியம் வெகு நிச்சயம்—இந்த ஏதுக்கள் மகா பாபிலோனின் அழிவு தீர்ப்பை நிறைவேற்றுவது அவற்றின் சொந்தச் சித்தம் மாத்திரமேயல்ல கடவுளின் சித்தமுமாகும். வெளிப்படுத்துதல் 17:17 பின்வருமாறு கூறுகிறது: “தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.”—எரேமியா 51:12, 13-ஐ ஒப்பிடவும்.
புரிந்துகொள்ளுதலில் தவறுசெய்துவிடாதேயுங்கள். மகா பாபிலோனின் தீர்ப்பு நிறைவேற்றம், மத அகந்தை மற்றும் தலையிடுதலுக்கு எதிராக வெறும் அரசியல் பகையின் வெளிக்காட்டாகத்தானே இராது. இந்த அரசியல் அதிபதிகள், உலகமெங்கும் பொய்வணக்கத்தை அழிப்பதற்குக் கடவுள் பயன்படுத்தும் தாங்களாக இயங்காதக் கருவிகளாயிருப்பர். ஆம், “அவள் பாவங்கள் வானமட்டும் குவிந்துநின்றன. அவள் அநியாயச் செயல்களைக் கடவுள் நினைவுகூர்ந்தார்.”—வெளிப்படுத்துதல் 18:5, NW.
அகந்தையுள்ள பொய்மதம் தாழ்த்தப்படவேண்டுமென யெகோவா தீர்ப்பு செய்துவிட்டார். தீர்க்கதரிசனம் பின்வருமாறு கூறுகிறது: “அவள் தன்னை மகிமைப்படுத்திச் சுகபோகமாய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுத்துவிடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன், நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதேயில்லையென்று அவள் தன் இருதயத்தில் சொல்லுகிறாளே. இதினிமித்தம் சாவு துக்கம் பஞ்சமாகிய வாதைகள் அவளுக்கு ஒரேநாளில் வரும்; அவள் அக்கினியினால் சுட்டெரிக்கப்படுவாள்; அவளை நியாயந்தீர்க்குங் கடவுளாகிய ஆண்டவர் [யெகோவா, NW] வல்லமையுள்ளவர்.”—வெளிப்படுத்துதல் 18:7, 8, தி.மொ.
தீர்ப்பு நிறைவேற்றம் எப்பொழுது?
அந்த “ஒரேநாள்,” அல்லது குறுகிய காலத்தில் திடீர் அழிவு நிறைவேற்றம், இப்பொழுது நெருங்கியுள்ளது. உண்மையில் மகா பாபிலோனின் அழிவு “நமது கடவுள் பழிவாங்கும் நாளை” வரவேற்கிறது. (ஏசாயா 61:2, தி.மொ.) அதன்பின், கடவுளுடைய நீதியுள்ள அர்மகெதோன் போர் நம்மீது வரும். 1914 முதற்கொண்டு உலக நிகழ்ச்சிகளின் எல்லா அத்தாட்சிகளும் சாத்தானின் காரிய ஒழுங்குமுறைக்குக் காலம் முடிவடைந்துகொண்டிருக்கிறதென குறித்துக் காட்டுகின்றன. ஆகையால், கடவுளுடைய ராஜ்யத்தின் ஆளுகை சமீபித்திருக்கிறது.—லூக்கா 21:32-36; வெளிப்படுத்துதல் 16:14-16.
மகா பாபிலோனின் அழிவுக்கு உண்மை வணக்கத்தார் எவ்வாறு பிரதிபலிப்பார்கள்? வெளிப்படுத்துதல் பின்வருமாறு சொல்லுகிறது: “பரலோகமே, பரிசுத்தவான்களே, அப்போஸ்தலர்களே, தீர்க்கதரிசிகளே, அவள் நிமித்தம் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் கடவுள் அவளிடம் [நீதிமுறைப்படி, NW] பழிவாங்கினார்.” (வெளிப்படுத்துதல் 18:20, தி.மொ.) யெகோவாவின் நோக்கம் நிறைவேற்றப்பட்டு அவருடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்படுகையில் சர்வலோகம் முழுவதிலும் களிகூருதலுண்டாகும். தீர்க்கதரிசனத்தில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள் அல்லேலூயா [யா-வைத் துதியுங்கள்], இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.”—வெளிப்படுத்துதல் 19:1, 2.
மகா பாபிலோனைப் பாழ்ப்படுத்தினதைப் பின்தொடர்ந்து சாத்தானின் ஒழுங்குமுறையின் மீந்துள்ள மூலப் பகுதிகளுக்குக் கடவுள் அழிவு தீர்ப்பை நிறைவேற்றுவது, இங்கே பூமியில் உயிர்த்தெழுப்பப்படவிருக்கும் பலர் உட்பட, கடவுளை உண்மையாய் வணங்குவோருக்கு முடிவற்ற ஆசீர்வாதங்களைக் குறிக்கும். இத்தகைய எல்லாருக்கும் இயேசு வாக்குக்கொடுத்தபடி: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:31, 32; வெளிப்படுத்துதல் 19:11-21.
பல யுகங்களாகக் கடவுளை நிந்தித்து வந்துள்ள பொய்மதப் போதகங்களிலிருந்து உண்மையான வணக்கத்தார் ஏற்கெனவே விடுதலையாகியிருக்கிறார்கள். வாக்குப்பண்ணப்பட்ட நீதியுள்ள புதிய உலகத்தில், மரண பயம் இல்லாமல் அவர்கள் விடுதலையாயிருப்பார்கள், ஏனெனில் “கடவுள்தாமே அவர்களோடிருப்பார். அவர்கள் கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமிராது, துக்கமும் அலறுதலும் வேதனையும் இனி இரா; முந்தினவை ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4, தி.மொ.) ஒழிந்துபோன முந்தினவற்றில், சாத்தானின் பொய்மத உலகப் பேரரசான, மகா பாபிலோனும் அடங்கியிருக்கும். (w89 5⁄15)
[அடிக்குறிப்புகள்]
a மகா பாபிலோனை அடையாளங்காட்டும் மேலுமான நுட்பவிவர சான்றுக்கு, ஏப்ரல் 1, 1989-ன் காவற்கோபுரத்தைப் பாருங்கள்.
b வெளிப்படுத்துதலிலுள்ள இவற்றின் மற்றும் வேறு அடையாளங்களின் விளக்கங்களுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்துள்ள வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக் கட்டம் சமீபித்திருக்கிறது! என்ற ஆங்கில புத்தகத்தைப் பாருங்கள்.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
“தனியியல்பான வெறுக்கத்தக்க முரண்நகைச்சுவையாக, இந்தச் சகாப்தத்தின் உலகப்பிரகாரமான திடுக்கிடச் செய்யும் காரியங்களை எதிர்ப்பதற்குச் சேவிக்கவேண்டிய மதம், அவற்றிற்குக் குற்றமற்றத் தோற்றம் வழங்க பயன்படுத்தப்பட்டது”
[பக்கம் 4-ன் படம்]
பைபிளை மொழி பெயர்த்ததற்காக உவைக்ளிஃப்பும் டின்டேலும் துன்புறுத்தப் பட்டனர்