உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w91 12/1 பக். 25
  • “தேவையானது” என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “தேவையானது” என்ன?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • இதே தகவல்
  • ஆராய்ச்சி எண் 6—கிரேக்க வேதாகம புத்தகங்கள்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • கோடெக்ஸ் பெசே—ஈடிணையற்ற ஒரு கையெழுத்துப் பிரதி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • ‘நான் நம்புகிறேன்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • மரியாள் “நல்ல பங்கைத்” தெரிந்துகொள்கிறாள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
w91 12/1 பக். 25

“தேவையானது” என்ன?

சுவிசேஷங்களின் இந்த W கோடெக்ஸ், இயேசு, அவருடைய நெருங்கிய நண்பனாகிய லாசருவின் சகோதரியான மார்த்தாளிடம் சொன்ன ஒரு குறிப்பின் மொழிபெயர்ப்பில் ஒரு பங்கை வகித்திருக்கிறது. இயேசு குடும்பத்தை சந்தித்த போது, மார்த்தாள் இயேசுவுக்கு ஒரு சிறந்த உணவை அளிப்பதே அதிமுக்கியமானது என்பதாக நினைத்தாள், ஆனால், இயேசு தமக்கு செவிசாய்ப்பதற்காக தம் பாதத்தருகே அமர்ந்திருந்த மரியாளின் முன்மாதிரியைப் பின்பற்றும்படியாக தயவாக அவளிடம் தெரிவித்தார். அவர் சொன்னார்: “தேவையானது ஒரு சில காரியங்களே அல்லது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள்.”—லூக்கா 10:42, NW.

இந்த வார்த்தைகள், வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் தயாரித்த 1881-ன் கிரேக்க வாசகத்தை மொழிபெயர்க்கின்றன. இதுவே புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation)-க்கு ஆதாரமாக உள்ளது. இந்தப் பைபிளின் 1984 ஒத்துவாக்கிய பதிப்பின் அடிக்குறிப்பு, இந்த வாசகம் சைனாய்டிகஸ் (א) மற்றும் வத்திக்கன் (B) கையெழுத்துப் பிரதிகளிலிருந்து பெறப்பட்டதைக் காண்பிக்கிறது, இரண்டுமே ஒரே வாசக மாதிரிகளைக் கொண்டதாயிருக்கிறது. அலெக்ஸாண்ட்ரீன் (A) கையெழுத்துப் பிரதி இவ்விதமாக வாசிக்கிறது: “ஆனால் ஒரு காரியமே தேவையானது. அவளுடைய பங்கில் . . . ” அடிக்குறிப்பு சுட்டிக் காண்பிக்கிறபடி கோடெக்ஸ் W-வும், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த செஸ்டர் பெட்டி நாணற்புல் தாளில் (P45) மற்றும் போட்மர் நாணற்புல் தாளில் (P75) எழுதப்பட்ட கையெழுத்துப்படியும் பின்கூறப்பட்ட மொழிபெயர்ப்போடு ஒத்திருக்கிறது. ஆனால் இந்த எல்லாக் கையெழுத்துப் பிரதிகளும் 1881-ம் ஆண்டில் வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் தங்கள் வாசகத்தைப் பிரசுரித்து வெகு காலமான பின்பே கண்டுபிடிக்கப்பட்டன, ஆகவே இந்த மாற்று மொழிபெயர்ப்புகளை சிந்திக்க அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமற் போனது. நாம் இன்று எந்த மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ள தெரிந்து கொண்டாலும், இயேசு ஆவிக்குரிய காரியங்களுக்கு நம்முடைய வாழ்க்கையில் முதலிடத்தைக் கொடுக்குமாறு நமக்குத் தெளிவாகச் சொல்கிறார்—நாம் பின்பற்ற வேண்டிய புத்திமதி.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்