யெகோவாவுடன்கூட உண்மைத்தன்மையோடு வேலைசெய்தல்
“தேவனே, என் சிறுவயது முதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.”—சங்கீதம் 71:17.
1. வேலை யெகோவாவிடம் இருந்து பெற்றிருக்கும் ஓர் ஈவு என்பதாக நாம் ஏன் சொல்லலாம்?
வேலை கடவுள் மனிதனுக்குக் கொடுத்திருக்கும் ஈவுகளில் ஒன்று. “பூமியை நிரப்பி அதைக் கீழ்ப்படுத்துங்கள்,” என்று யெகோவா நம்முடைய ஆதி பெற்றோராகிய ஆதாம் ஏவாளிடம் சொன்னார். அது ஒரு சவால் மிகுந்த வேலை நியமிப்பாயிருந்தது, ஆனால் அவர்களுடைய திறமைகளுக்கு உட்பட்டதாகவே இருந்தது. தேவைப்பட்ட உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட முயற்சி அவர்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை அதிகரிக்கும், அது அவர்களுடைய பூகோள வீட்டில் உடன் வாழும் விலங்குகள் அனுபவிப்பதைக் காட்டிலும் அப்பாற்பட்ட ஒன்றாயிருக்கும்.—ஆதியாகமம் 1:28.
2, 3. (எ) வேலை இன்று பலருக்கு என்னவாக ஆகிவிட்டிருக்கிறது? ஏன்? (பி) ஒரு விசேஷ வேலை செய்வதற்கான என்ன வாய்ப்பை நாம் சிந்திக்க வேண்டும்?
2 நம்முடைய அபூரண நிலையிலும், “நன்மையில்” விளைவடையும் “கடின உழைப்பு” சாலொமோன் எழுதியபடி “கடவுளுடைய ஈவு.” (பிரசங்கி 3:13) மனிதன் இன்னும் தன்னுடைய மனம் மற்றும் சரீர திறமைகளுக்கு வேலை கொடுக்க வேண்டும். வேலை இல்லாமல் இருப்பது மனச்சோர்வு உண்டாக்கும் ஒன்று. என்றபோதிலும், எல்லா வேலைகளுமே ஆரோக்கியமான அல்லது பயனுள்ளதாயிருப்பதில்லை. பலருக்கு, வேலை சுவையற்ற ஒன்று, பிழைப்புக்காகப் பிறந்தது.
3 என்றபோதிலும், எல்லாருமே பங்குகொள்வதற்காக அழைக்கப்படும் உண்மையிலேயே பலன் மிகுந்த ஒரு வேலை உண்டு. ஆனால் அதில் பங்கு கொள்கிறவர்கள் மேற்கொள்ளவேண்டிய அநேக எதிர்ப்பாளரும் பிரச்னைகளும் உண்டு. இந்த வேலைக்கு நாம் தகுதிபெற வேண்டியது ஏன் முக்கியம்? அதை நாம் எவ்விதம் செய்கிறோம்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு முன்பாக, நாம் முதலாவது சிந்திக்க வேண்டியது:
நாம் யாருக்கு வேலை செய்கிறோம்?
4. இயேசுவுக்கு எப்படிப்பட்ட வேலை மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொண்டுவந்தது?
4 இயேசு கிறிஸ்து சொன்னார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து, அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” (யோவான் 4:34) யெகோவாவுக்கு உண்மைத்தன்மையோடு வேலை செய்தது இயேசுவுக்கு அதிக மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொண்டுவந்தது. அது வாழ்க்கையில் ஒரு நோக்கத்தை அளித்தது. அவருடைய மூன்றரை ஆண்டு ஊழியத்தின் கடைசியில் தம்முடைய பரம பிதாவிடம் உண்மையோடு இப்படிச் சொல்ல முடிந்தது: “பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.” (யோவான் 17:4) சரீர உணவு எவ்விதம் நம்மைப் பேணிக் காக்கிறதோ, அதுபோன்றே ஆவிக்குரிய எல்லைப்பரப்புடைய வேலையும் இருக்கிறது. இதை இயேசு இன்னொரு சமயத்தில் அறிவுறுத்தினார். அவர் சொன்னார்: “அழிந்துபோகிற போஜனத்துக்காக அல்ல, நித்திய ஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்.” (யோவான் 6:27) மாறாக, ஆவிக்குரிய பிரகாரமாய் பலன்கொடாத வேலை மனச்சோர்வுக்கும் மரணத்துக்கும் வழிநடத்துகிறது.
5. இயேசு செய்த நல்ல வேலையை எதிர்த்தது யார்? ஏன்?
5 “என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன்.” 38 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு மனிதனை இயேசு ஓய்வு நாளில் சுகப்படுத்தியதற்காக தம்மைக் குற்றப்படுத்திக்கொண்டிருந்த யூதர்களிடமாக அவர் இப்படிக் கூறினார். (யோவான் 5:5–17) இயேசு யெகோவாவின் வேலையைச் செய்துகொண்டிருந்த போதிலும், மத விரோதிகள் அந்த உண்மையை ஏற்க மறுத்து, அதைச் செய்வதிலிருந்து அவரை நிறுத்துவதற்காகத் தங்களாலான அனைத்தையும் செய்தார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் தங்களுடைய பிதாவாகிய பிசாசாகிய சாத்தானால் உண்டானவர்கள்; இவன் எப்பொழுதுமே யெகோவாவின் வேலையை எதிர்த்து வந்திருக்கிறான். (யோவான் 8:44) சாத்தான் “அநீதியினால் உண்டாகும் சகல வித வஞ்சகத்தோடு” ‘ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்ளக்கூடுமாதலால்,’ அவனுடைய வேலை என்னவாக இருக்கிறது என்பதை கண்டுணர்ந்துகொள்ள நமக்கு ஆவிக்குரிய தெளிந்துணர்வும் தெளிவான யோசனையும் அவசியம். இல்லாவிட்டால், நாம் யெகோவாவுக்கு விரோதமாக வேலைசெய்து கொண்டிருப்பதைக் காண்போம்.—2 கொரிந்தியர் 11:14; 2 தெசலோனிக்கேயர் 2:9, 10.
விரோதிகள் கிரியைசெய்து கொண்டிருக்கிறார்கள்
6. விசுவாச துரோகிகள் ஏன் “கபடமுள்ள வேலையாட்கள்”? விளக்குங்கள்.
6 சிலர், இன்று சில விசுவாசதுரோகிகளைப் போன்று, கிறிஸ்தவ சபையோடு புதிதாய்க் கூட்டுறவு கொள்ளுகிறவர்களுடைய விசுவாசத்தை மட்டுப்படுத்துவதற்காக உண்மைத்தன்மை அற்றவர்களாய் சாத்தானின் கையாட்களாக வேலை செய்கிறார்கள். (2 கொரிந்தியர் 11:13) உண்மையான போதனைகளுக்கு பைபிளை ஆதாரமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation of the Holy Scriptures) மதிப்பற்றதென காண்பிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். யெகோவாவின் சாட்சிகள் ஆதாரத்திற்காக அதை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கிறார்கள் என்பதாக நினைத்து அப்படிச் செய்கின்றனர். ஆனால் காரியம் இப்படியாக இல்லை. ஒரு நூற்றாண்டின் மிகச் சிறந்த காலப்பகுதியினூடே சாட்சிகள் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு மற்றும் ரோமன் கத்தோலிக்கரின் டூவே மொழிபெயர்ப்பு அல்லது தங்களுடைய மொழியில் எந்த மொழிபெயர்ப்பு கிடைப்பதாய் இருந்ததோ அவற்றையே யெகோவாவையும் அவருடைய நோக்கத்தையும் பற்றிய சத்தியங்களைக் கற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்தினார்கள். மரித்தோரின் நிலை, கடவுளுக்கும் அவருடைய குமாரனுக்கும் இடையிலான உறவு, ஏன் ஒரு சிறு மந்தை மட்டுமே பரலோகத்திற்குச் செல்கிறது ஆகிய காரிங்களைக் குறித்த சத்தியத்தை அறிவிப்பதற்கு அவர்கள் இந்தப் பழைய மொழிபெயர்ப்புகளையே பயன்படுத்தினர். யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய உலகளாவிய சுவிசேஷ வேலையில் தொடர்ந்து அநேக மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்திவருகின்றனர் என்பது தகவலறிந்த ஆட்களுக்குத் தெரியும். என்றபோதிலும், 1961 முதல், அவர்கள் காலத்துக்கு ஒத்த, திருத்தமான மொழிபெயர்ப்பு கொண்ட, வாசிப்பதற்கு அருமையாக இருக்கும் புதிய உலக மொழிபெயர்ப்பை (New World Translation) பயன்படுத்துவதில் கூடுதல் மகிழ்ச்சியை அனுபவித்துவந்திருக்கின்றனர்.
7. (எ) தம்மில் விசுவாசம் கொண்டிருப்பதாக உரிமைப்பாராட்டும் அநேகரை இயேசு ஏன் மறுதலிக்கிறார்? (பி) 1 யோவான் 4:1-லுள்ள புத்திமதிக்குச் செவிகொடுப்பது ஏன் முக்கியம்?
7 தம்மில் விசுவாசம் வைத்திருப்பதாக உரிமைபாராட்டும் பலரை தாம் மறுதலித்திடுவார் என்று இயேசு சொன்னார். அவர்கள் தம்முடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள், பிசாசுகளைத் துரத்துவார்கள், “அநேக வல்லமையான செயல்களைச் செய்வார்கள்” என்பதை இயேசு ஒப்புக்கொண்டார். இருந்தாலும், இவை “அக்கிரமச்” செயல்கள் என்பதாக அவர் அடையாளங்காட்டுகிறார். (மத்தேயு 7:21–23, NW) ஏன்? .ஏனென்றால் அவர்கள் தம்முடைய பரலோகப் பிதாவின் சித்தத்தைச் செய்துகொண்டில்லை, யெகோவாவைக் குறித்ததில் அவர்கள் தகுதியற்றவர்கள். இன்று அசாதாரணமான, அற்புதமாகத் தென்படும் செயல்களுங்கூட பிரதான வஞ்சகனாகிய சாத்தானிடமிருந்து தோன்றக்கூடும். இயேசு மரித்து உயிர்த்தெழுந்து 60 ஆண்டுகளுக்கு மேல் கடந்த பின்னர், அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய முதல் பொது கடிதத்தை எழுதினபோது, கிறிஸ்தவர்கள் “எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறிய” வேண்டும் என்று ஆலோசனைக் கொடுத்தான். நாமும் அதையே செய்ய வேண்டும்.—1 யோவான் 4:1.
பலனற்ற வேலைகள்
8. மாம்சத்தின் கிரியைகளைக் குறித்து நாம் எவ்விதம் உணர வேண்டும்?
8 நாம் ஆவிக்குரியபிரகாரமாய் எதிர்ப் பலன் தரும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிராவிட்டாலும், நம்முடைய உழைப்பு வீழ்ந்த மாம்ச இச்சைகளைப் பூர்த்திசெய்துகொண்டிருக்குமானால் அவை பயனற்றவையே. நாம் “புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்து . . . காமவிகாரத்தையும், துர்இச்சைகளையும், நடப்பித்து, மதுபானம் பண்ணி, களியாட்டுச் செய்து, வெறி கொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச்” செய்துவந்ததில் வெகு காலம் கடத்திவிட்டோம் என்று பேதுரு அப்போஸ்தலன் கூறினான். (1 பேதுரு 4:3, 4) உண்மைதான், இப்பொழுது ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் எல்லாருமே அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதை இது அர்த்தப்படுத்தாது, ஆனால் அப்படிச் செய்தவர்களின் மனப்பான்மை அவர்களுடைய ஆவிக்குரிய பார்வை விருத்தியடைகையில் வேகமாக மாறியிருக்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. அவர்களுடைய மாற்றத்தைக் கண்டு உலகம் அவர்களைப் பற்றி ஏளனமாகப் பேசும்; அதை எதிர்பார்க்க வேண்டும். என்றாலும், யெகோவாவின் வேலையில் உண்மைத்தன்மையுள்ள வேலையாட்களாக ஆக வேண்டுமானால் அவர்கள் மாறத்தான் வேண்டும்.—1 கொரிந்தியர் 6:9–11.
9. ஓர் இசை நாடகப் பாடகராகும் பயிற்சியைப் பெற ஆரம்பித்த ஒரு சாட்சியின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
9 யெகோவா நம்முடைய மகிழ்ச்சிக்காக அநேக ஈவுகளைக் கொடுத்திருக்கிறார். அவற்றில் இசையும் ஒன்று. என்றபோதிலும், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் [பிசாசாகிய சாத்தான்] கிடக்கிறது” என்பதால் இது இசை உலகத்தை உட்படுத்தாதா? (1 யோவான் 5:19) ஆம், சில்வானா கண்டுபிடித்ததுபோல், இசை வஞ்சிக்கும் ஒரு கண்ணியாக இருக்கக்கூடும். அவள் ஃப்ரான்சில் ஓர் இசை நாடகப் பாடகியாக பயிற்சி பெறும் வாய்ப்பைக் கொண்டிருந்தாள். “யெகோவாவை சேவிக்க வேண்டும் என்ற ஒரு பலமான ஆசை எனக்கு இன்னும் இருந்தது,” என்று அவள் விளக்குகிறாள். “நான் துணைப்பயனியர் சேவையை மகிழ்ச்சியோடு அனுபவித்துக்கொண்டிருந்தேன். இந்த இரண்டு காரியங்களையும் என் வாழ்க்கையில் ஒப்புரவாக்க எண்ணினேன். ஆனால் என்னுடைய வாழ்க்கைப் பணியில் நான் எதிர்ப்படவேண்டிய முதல் பிரச்னை ஒழுக்கக்கேடு. ஆரம்பத்தில், என் கூட்டாளிகளின் ஒழுக்கங்கெட்ட பேச்சிலும் நடத்தையிலும் நான் அவர்களோடு இணங்கிச் செல்லாமல் இருந்த சமயத்தில் அவர்கள் என்னை சூதுவாதறியாத ஒருத்தியாக நோக்கினார்கள். பின்னர், மோசமான அந்தச் சூழல் என் உணர்வுகளை மரத்துப்போகச் செய்ய ஆரம்பித்தது. யெகோவா வெறுக்கும் காரியங்களை நான் பொறுத்துக்கொள்ளும்படிச் செய்தது. பாடுவதையே என் மதமாக்கிக்கொள்ளும்படி என்னுடைய ஆசிரியரில் ஒருவர் என்னை ஊக்குவித்துக்கொண்டிருந்தார். மேடையில் மூர்க்கமாய் இருக்கும்படியாகவும் எல்லாரிலும் மேலானவளாக எண்ணும்படியும் கற்றுக்கொடுக்கப்பட்டேன். இந்த எல்லாக் காரியங்களுமே எனக்கு அசெளகரிய உணர்வை ஏற்படுத்தியது. கடைசியில் நான் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு ஆயத்தமாக வேண்டியிருந்தது. நான் எந்தப் பக்கமாகச் செல்ல வேண்டும் என்பதை எனக்குத் தெளிவுபடுத்தும்படி யெகோவாவிடம் ஜெபித்தேன். நான் நன்றாகப் பாடின போதிலும், நம்பிக்கையாக இருந்தபோதிலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நான் இடம்பெறவில்லை. அதற்குக் காரணத்தைப் பின்னர் தெரிந்துகொண்டேன்—போட்டிக்கு வெகு முன்னரே தேர்வுகள் இரகசியமாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டன. ஆனால் என்னுடைய ஜெபத்திற்கு ஒரு தெளிவான விடை கிடைத்தது, வீட்டில் பாட்டு சொல்லிக் கொடுப்பதற்காக நான் இசை நாடக மேடை உலகை விட்டுவிட தீர்மானித்தேன்.” இந்தச் சகோதரி பின்னர் ஒரு கிறிஸ்தவ சபை மூப்பரை விவாகம் செய்தாள், இப்பொழுது அவர்கள் இருவருமே அங்கு ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதில் உண்மைத்தன்மையுடன் சேவித்துவருகிறார்கள்.
10. யோவான் 3:19–21-லுள்ள இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நீங்கள் என்ன முடிவுக்கு வருகிறீர்கள்?
10 இயேசு சொன்னார்: “பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.” மறுபட்சத்தில், “சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.” (யோவான் 3:19–21) யெகோவாவின் சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் இசைவாக வேலை செய்துகொண்டிருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! ஆனால் அதை வெற்றிகரமாய்ச் செய்வதற்கு நம்முடைய கிரியைகள் கடவுளுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் ஆய்வு செய்யப்படுவதற்கு நாம் எப்பொழுதுமே அனுமதிக்க வேண்டும். நாம் வயது கடந்தவர்களும் அல்ல, நம்முடைய வாழ்க்கை வழியை மாற்றுவதற்கும் யெகோவாவின் பயனுள்ள சேவையை எடுப்பதற்கான அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கும் காலம் அதிக பிந்தியாகிவிடவும் இல்லை.
இன்று “நல்ல வேலைகள்” செய்தல்
11. “நல்ல வேலைகள்” என்று அநேகர் தொடருவது என்ன? அவை ஏன் சலிப்புக்கு வழிநடத்தக்கூடும்?
11 இன்று பயனுள்ள வேலை என்பது காலங்களின் அவசரத் தன்மையைப் பிரதிபலிக்க வேண்டும். பொதுவாக மனிதகுலத்தின் நன்மைக்காகச் செய்யப்படும் அல்லது ஒரு குறிப்பிட்ட இலட்சியத்திற்காகச் செய்யப்படும் “நல்ல வேலைகள்” என்று விவரிக்கப்படும் வேலைகளைச் செய்ய அநேக உண்மை மனதுள்ள ஆட்கள் ஒப்புக்கொள்கிறார்கள் மற்றும் அவற்றில் சுறுசுறுப்பாக ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். என்றபோதிலும், இப்படிப்பட்ட வேலை எவ்வளவு சலிப்பூட்டுவதாய் இருக்கக்கூடும்! பிரிட்டனில், CAFOD (அயல் நாடுகளின் வளர்ச்சிக்கான கத்தோலிக்கர் நிதி), அதன் பஞ்ச நிவாரணத் திட்டம் குறித்து அறிக்கை செய்கையில் இப்படியாகச் சொன்னது: “நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் . . . நிவாரண நிதிக்காக லட்சக்கணக்கான பவுண்டுகள் பணமாக சேர்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. இப்பொழுது அந்த உயிர்கள் மீண்டும் ஆபத்தில் இருக்கின்றன . . . ஆனால் ஏன்? என்ன தவறு ஏற்பட்டுவிட்டது?” அதன் விளக்கத்தைத் தொடரும் வகையில் CAFOD பத்திரிகை சொல்வதாவது, நீண்ட காலப் பிரச்னைகள் ஒருபோதும் கையாளப்படவில்லை, மற்றும் “மானிட வளர்ச்சிக்கு அத்தியாவசியமாயிருக்கும் மூலப்பொருட்கள் போராட்டத்தை [உள் நாட்டுப் போரை] ஊட்டி வளர்க்க பயன்படுத்தப்பட்டது.” இதையொத்த உணர்ச்சிக் குரல்கள் இப்படிப்பட்ட பணியில் ஈடுபட்ட தர்ம ஸ்தாபனங்களால் ஒலிக்கப்படுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.
12. இன்று உலகத்தை எதிர்ப்படும் பிரச்னைகளுக்கு என்ன ஒரே விடை இருக்கிறது?
12 பஞ்சம் ஓர் அவசரப் பிரச்னை. என்றபோதிலும், இன்றைய துயர சம்பவங்களாகிய பஞ்சமும் போரும் தற்போதைய ஒழுங்குமுறையின் முடிவைக் குறிப்பிட்டுக் காட்டும் இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக அடையாளங்காட்டுவது யார்? (மத்தேயு 24:3, 7) இந்தச் சம்பவங்களை பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல், 6-ம் அதிகாரத்தில் வெளிப்படையாய் சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு குதிரை வீரர்களுடன் இணைத்து அத்தாட்சியைப் பிரசுரித்திருப்பது யார்? பொருத்தமாகவே, இந்தப் பத்திரிகையில் யெகோவாவின் சாட்சிகள் உண்மைத்தன்மையோடு அதைச் செய்திருக்கிறார்கள். ஏன்? எந்தவித நிரந்தர பரிகாரத்தைத் திட்டமிடுவது மனிதனுடைய சக்திக்கு மிஞ்சியது என்பதைக் காட்டுவதற்கு. உலகப் பிரச்னை குறித்து கிறிஸ்தவர்கள் அக்கறையற்றிருக்கிறார்கள் என்பதை இது குறிக்காது. இல்லை. அவர்கள் இரக்கமுள்ளவர்கள், துயரத்தைக் குறைப்பதற்குத் தங்களாலானதையெல்லாம் செய்வார்கள். இருந்தாலும், தெய்வீக தலையிடுதலின்றி உலகப் பிரச்னைகள் ஒருபோதும் தீர்க்கப்படாது என்ற உண்மையை அவர்கள் உண்மைநிலையில் காண்கிறார்கள். பிசாசாகிய சாத்தான் இந்த உலகத்தின் அதிபதியாக இருக்க அனுமதிக்கப்படும்வரை, இந்தப் பிரச்னைகள், ஏழைகள் இருப்பதுபோன்று, தொடர்ந்து இருக்கும்.—மாற்கு 14:7; யோவான் 12:31.
மிகவும் மதிப்புவாய்ந்த வேலை
13. இன்று இருக்கும் மிகவும் அவசரமான அந்த வேலை என்ன? அதை யார் செய்துவருகிறார்கள்?
13 இன்று மிகவும் அவசரத் தேவையாக இருப்பது, யெகோவா தேவனின் ராஜ்யம் உலக அரசாங்கங்கள் அனைத்தையும் மாற்றி, கடவுள் பயமுள்ள மக்கள் வாஞ்சிக்கும் விடுதலையைக் கொண்டு வரும் என்ற நற்செய்தியைப் பிரசங்கிப்பதாகும். (தானியேல் 2:44; மத்தேயு 24:14) இயேசு கிறிஸ்து பரலோக ராஜ்யத்தைப் பிரசங்கிக்கும் காரியத்தை பலஸ்தீனா தேசத்திற்கு மட்டும் மட்டுப்படுத்திய போதிலும் அதைத் தன்னுடைய வாழ்க்கையின் பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தார். இன்று இந்தப் பிரசங்கிக்கும் வேலை இயேசு சொன்ன விதமாகவே உலகளாவிய விதத்தில் நடைபெறுகிறது. (யோவான் 14:12; அப்போஸ்தலர் 1:8) கடவுளுடைய வேலையில் ஒரு பங்கைக் கொண்டிருப்பது, சிறிய அளவில் இருந்தாலும், ஒப்பற்ற ஒரு சிலாக்கியமாய் இருக்கிறது. தாங்கள் ஒருகாலத்தில் நற்செய்தியின் பிரசங்கிகளாக இருப்பர் என்று சற்றும் நினைத்துப்பாராத ஆண்களும் பெண்களும், வயோதிபரும் இளைஞரும் இன்று யெகோவாவின் சாட்சிகளால் செய்யப்பட்டுவரும் சுவிசேஷக வேலையில் முன் நிலையில் இருக்கிறார்கள். இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கு ஒரு முகவுரையாக, நோவாவையும் அவனுடைய குடும்பத்தையும் போன்று, கடவுளுடைய கட்டளையின் பேரில் அவருடைய வேலையை உண்மைத்தன்மையோடு அவருடைய பலத்தில் சார்ந்தவர்களாய்ச் செய்துவருகிறார்கள்.—பிலிப்பியர் 4:13; எபிரெயர் 11:7.
14. பிரசங்கிப்பது ஏன் ஜீவனைக் காக்கும் வேலையாகவும் அதே சமயத்தில் ஒரு பாதுகாப்பாகவும் இருக்கிறது?
14 யெகோவாவின் சாட்சிகள் இந்தக் கடைசி நாட்களில் செய்துவரும் இந்தச் சாட்சி வேலை, நற்செய்திக்குச் செவிகொடுத்து அதன்பேரில் செயல்படுகிறவர்களுக்கு ஜீவனைக் காக்கும் ஒன்றாயிருக்கிறது. (ரோமர் 10:11–15) பிரசங்கிப்போருக்கும் அது ஒரு பாதுகாப்பாக இருக்கிறது. நம்முடைய சொந்தப் பிரச்னையைவிட அதிக பிரச்னைகளையுடைய மக்களுக்கு உதவுவதில் உண்மையிலேயே அக்கறையுடையவர்களாக இருப்பதன் மூலம், நமக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளைக் குறித்து அதிக கவலைப்படும் வாய்ப்பு குறைவாயிருப்பது சாத்தியம். கீழ்த்தரமான தராதரங்களையுடைய இந்த உலகம் அதனுடைய வழிகளுக்கு நம்மை இணங்கிப் போகும்படி செய்விக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எனவே பிரசங்க வேலையின் போது நம் மனதைக் கடவுளுடைய நினைவுகளால் நிரப்புவது விசுவாசத்தைப் பலப்படுத்துவதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்கிறது; அது நம்முடைய மிகச் சிறந்த நன்மைக்காக இருக்கிறது. ஒரு சாட்சி இவ்விதமாகச் சொன்னார்: “நான் சந்திக்கும் மக்களை மாற்ற முயலவில்லை என்றால், அவர்கள் என்னை மாற்றிவிடக்கூடும்!”—2 பேதுரு 2:7–9-ஐ ஒப்பிடவும்.
சபையோடு வேலைசெய்தல்
15. உதவிமேய்ப்பர்களுக்கு இன்று என்ன பொறுப்பு இருக்கிறது? 1 தீமோத்தேயு 3:1-ஐ நோக்குமிடத்து, சபையிலிருக்கும் ஆண் உறுப்பினர்கள் எவ்வாறு உணர வேண்டும்?
15 புதிதாக அக்கறை காண்பிக்கும் ஆட்கள் சபைக்கு வரும்போது, அவர்கள் உன்னத மேய்ப்பராகிய யெகோவா தேவன் மற்றும் நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்து ஆகியவர்களின் அரவணைப்பின்கீழ் வருகிறார்கள். (சங்கீதம் 23:1; யோவான் 10:11) இந்தப் பரலோக மேய்ப்பர்கள் பூமியில் உண்மைத்தன்மை கொண்ட மந்தையின் உதவிமேய்ப்பர்களால், சபைகளில் நியமிக்கப்பட்ட ஆண்களால் பிரநிதித்துவஞ்செய்யப்படுகிறார்கள். (1 பேதுரு 5:2, 3) இப்படிப்பட்ட ஒரு பொறுப்பில் இருப்பது இந்தக் கடைசி நாட்களில் ஒரு விலைமதிக்க முடியா சிலாக்கியம். மேய்ப்பர்களின் வேலை உத்தரவாதம் மிகுந்த ஒன்று. சபையில் போதிப்பதிலும் பிரசங்கிப்பதிலும் முன்நின்று காரியங்களைச் செய்வதில் மட்டுமல்ல, மந்தையை ஆவிக்குரிய ஓநாய்களிடமிருந்தும் நாம் வாழும் இவ்வுலகின் புயல் போன்ற சூழமைவின் தாக்குதலிலிருந்தும் பாதுகாப்பதையும் உட்படுத்துகிறது. வளர்ந்துவரும் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களின் ஆவிக்குரிய நலனைக் கவனிக்க உதவுவதைவிட சபையின் ஆண் உறுப்பினருக்கு அதிக பிரயோஜனமான வேலை வேறு எதுவும் இருக்க முடியாது.—1 தீமோத்தேயு 3:1; ஏசாயா 32:1, 2 ஒப்பிடவும்.
16 என்றபோதிலும், அப்படிப்பட்ட மேய்ப்பர்கள் மனிதரே, மந்தையிலிருக்கும் மற்றவர்களைப் போலவே வித்தியாசமான ஆள்தன்மை உடையவர்கள் மற்றும் குறைபாடுடையவர்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. மேய்க்கும் காரியத்தில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் சிறந்து விளங்கக்கூடும், மற்றொருவருக்கு இருக்கும் ஈவு சபைக்கு இன்னொரு கோணத்தில் நன்மை பயப்பதாயிருக்கும். கிறிஸ்தவ மூப்பர்களாக அவர்களுடைய வேலைகள் சபையைப் பலப்படுத்துவதற்காக இணைந்து நிறைவு செய்வதாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 12:4, 5) அவர்களுக்குள் போட்டி ஆவி வந்துவிடக்கூடாது. அவர்கள் யெகோவாவிடம் ஜெபத்தில் “பரிசுத்தமான கைகளை உயர்த்தி” தங்களுடைய எல்லா வேலைகளிலும் தீர்மானங்களிலும் அவருடைய ஆசீர்வாதத்தை நாடுகிறவர்களாய் ராஜ்ய அக்கறைகளை பாதுகாக்கவும் முன்னேற்றுவிக்கவும் ஒன்றுசேர்ந்து உழைக்கிறார்கள்.—1 தீமோத்தேயு 2:8.
17. (எ) நமக்கு என்ன கடமை இருக்கிறது? (பி) நம்முடைய கடமையைச் சரிவர நிறைவேற்ற வேண்டுமானால், நாம் தவிர்க்கவேண்டிய காரியங்கள் என்ன?
17 சாத்தானுடைய பேரரசின் முடிவு சமீபித்து வருவதால் பிரசங்கிக்கும் வேலை புதியதோர் வேகத்தை எடுத்திருக்கிறது. யெகோவா தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தைப் பெற்றிருக்கும் அவருடைய சாட்சிகளாக நற்செய்தியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பரப்பிடும் கடமை நமக்கு இருக்கிறது. கைவசம் இருக்கும் வேலை முடிவுவரையாக நம்மை சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கு போதுமான அளவுக்கு மேல் இருக்கிறது. பேய்த்தன ஒழுக்கங்கெட்ட சிற்றின்பம் நம்மை வழிவிலகச் செய்யவோ அல்லது பொருளாசையால் பாரமடைந்துவிடுவதற்கோ நம்மை அனுமதிக்கக்கூடாது. நாம் ஊகிப்பதிலோ, வார்த்தைகளின்பேரில் வாதிடுவதிலோ உட்பட்டுவிடக்கூடாது, ஏனென்றால் இது பயனற்றதும் நேரத்தை வீணடிப்பதுமாக இருக்கும். (2 தீமோத்தேயு 2:14; தீத்து 1:10; 3:9) சீஷர்கள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்?” என்று கேட்ட போது, இயேசு மிக அண்மையில் செய்யப்படவேண்டிய முக்கியமான வேலையினிடமாக அவர்களுடைய யோசனையைத் திருப்பினார். அவர் சொன்னார்: “நீங்கள் . . . எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” அந்தக் கட்டளை இந்நாள் வரை நீடிக்கிறது.—அப்போஸ்தலர் 1:6–8.
18. யெகோவாவுடன் வேலை செய்வது ஏன் அதிக பலனுள்ளதாயிருக்கிறது?
18 இன்று யெகோவாவுடன் வேலை செய்வது, அவருடைய உலகளாவிய சபையோடு சேர்ந்து பிரசங்கிப்பது, மகிழ்ச்சி, திருப்தி மற்றும் நம்முடைய வாழ்க்கைக்கு உண்மையான நோக்கத்தைத் தருகிறது. யெகோவாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய பக்தியையும் உண்மைத்தன்மையையும் காண்பிப்பதற்கு இது ஒரு சந்தர்ப்பமாயிருக்கிறது. இந்த வேலை அதன் பல அம்சங்களுடன் ஒருபோதும் திரும்பவும் செய்யப்படாது. நித்திய ஜீவன் என்ற எதிர்பார்ப்பை நம்முடைய மனதில் தெளிவாக வைத்திருப்பதன் மூலம், அவருக்குத் துதியுண்டாகவும் நமக்கு இரட்சிப்புண்டாகவும் “தேவ பயத்தோடும் பக்தியோடும் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்வதில்” நாம் உண்மைத்தன்மையோடு தொடர்வோமாக.—எபிரெயர் 12:28. (w90 8/15)
உங்களுடைய விடைகள் என்ன?
◻ இயேசு எந்த வேலையில் மகிழ்ச்சியும் திருப்தியும் கண்டார்?
◻ யெகோவாவின் வேலைக்கு விரோதமாக இருப்பவர்கள் யார்? ஏன்?
◻ உலகப்பிரகாரமான “நல்ல வேலைகளும்” கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதும் ஒப்பிடப்படுகையில் எவ்வாறு இருக்கிறது?
16. கிறிஸ்தவ மேய்ப்பர்கள் எவ்வழிகளில் ஒருவருக்கொருவர் இணைந்து நிறைவுசெய்கிறவர்களாக இருக்க வேண்டும்?
[பக்கம் 24-ன் படம்]
போய்ப் பிரசங்கிக்கும்படியாக இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார்