எந்தக் கடவுளை வணங்குவது?
விலங்குகளைப் போலில்லாமல், மனிதர்களாகிய நாம் வணங்குவதற்கு திறமை பெற்றவர்களாக இருக்கிறோம். இது பிறப்பிலிருந்தே நம்முடைய இயல்பின் ஒரு பாகமாக இருந்துவருகிறது. நாம் ஓர் ஒழுக்க உணர்வை, எது சரி, எது தவறு என்பதைக் குறித்து நம்மை வழிநடத்த ஒரு மனச்சாட்சியையும்கூட கொண்டிருக்கிறோம். வித்தியாசமான வழிகளில் நாம் அனைவருமே அந்த மனச்சாட்சிகளைப் பின்பற்றுகிறோம். அவ்விதமாகச் செய்கையில் அநேகர் வழிநடத்துதலுக்காக ஒரு கடவுளை அல்லது கடவுட்களை நோக்கியிருக்கிறார்கள்.
கடந்த ஓரிரண்டு நூற்றாண்டுகளின் போது, ஒரு சில உலகப்பிரகாரமான அறிஞர்கள் சர்வ வல்லமையுள்ள ஒரு கடவுள் அல்லது சிருஷ்டிகர் இருப்பதை மறுத்துப் பேசியிருக்கிறார்கள். 1844-ல் “மதம் மக்களின் அபினி” என்று காரல் மார்க்ஸ் அறிவித்தார். பின்னர் சார்லஸ் டார்வின் பரிணாமக்கோட்பாட்டை அறிமுகப்படுத்தினர். பின்னர் ருசிய நாட்டுப் புரட்சி ஏற்பட்டது. கிழக்கு ஐரோப்பாவில் நாத்திகம் ஆதாரப்பூர்வமான அரசு கொள்கையாயிற்று. 1917-ன் தலைமுறையோடு மதம் படிப்படியாக மறைந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த நாத்திகர்களால் மனிதன் உண்டாக்கப்பட்ட விதத்தை மாற்ற முடியவில்லை. கிழக்கு ஐரோப்பாவில் இப்பொழுது, மதம் புத்துயிர் பெற்று எழுந்திருப்பது இதைதானே காண்பிக்கப்படுகிறது.
என்றபோதிலும், “வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் அநேகர் உண்டு” என்று பைபிள் சொல்லுகிற வண்ணமாகவே அநேக ‘தேவர்களும்’ அநேக “கர்த்தாக்களும்’ இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 8:5) தலைமுறை தலைமுறையாக மனித குலம் எண்ணிலடங்கா கடவுட்களை வணங்கி வந்திருக்கிறது. கருவளத்துக்கும், காதலுக்கும் கடவுட்கள் இருந்திருக்கிறார்கள். இந்து மதத்தில் மாத்திரமே கடவுட்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் செல்கின்றது.
பாபிலோன், அசீரியா மற்றும் எகிப்திலும் புத்தமத தேசங்களிலும் திரித்துவ கடவுட்கள் தழைத்தோங்கியிருக்கின்றன. கிறிஸ்தவமண்டலமும்கூட அதன் “பரிசுத்த” திரித்துவத்தை கொண்டிருக்கிறது. இஸ்லாமிய மதம் திரித்துவத்தை மறுக்கையில், “அல்லாவைத் தவிர வேறு கடவுட்களை கொண்டில்லை,” மேலுமாக கண்ணுக்குப் புலப்படாத சர்வ வல்லமைப் படைத்த ஒரு கடவுளைப் பற்றிய கருத்தை பரிகாசம் செய்பவர்களும்கூட தங்கள் சொந்த கடவுட்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, பிலிப்பியர் 3:19-ல் பொருள் சம்பந்தமான நாட்டங்களில் சிக்குண்டிருப்பவர்களைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்லுகிறது: அவர்களுடைய தேவன் வயிறு.”
பெரும்பாலான மக்கள் தாங்கள் பிறக்க நேரிட்டிருக்கும் அந்தத் தேசத்தின் அல்லது சமுதாயத்தின் கடவுளை அல்லது கடவுட்களை வணங்குகிறார்கள். இது கேள்விகளை எழுப்புகிறது. எல்லா வணக்கமுறைகளுமே ஒரே இடத்துக்கு வழிநடத்திச் செல்கின்றனவா—மலைப்பாதைகள் அனைத்தும் மலை உச்சிக்குக் கொண்டு செல்வது போல? அல்லது அநேக மதங்களின் புரிந்து கொள்ள முடியாத பாதைகள் அழிவுக்கு கொண்டுசெல்கிறதா—செங்குத்தான பாறைக்குக் கொண்டு செல்லும் வழிநடைபாதைகள் போல? வணங்குவதற்கு சரியான வழிகள் பல இருக்கின்றனவா அல்லது ஒன்று மட்டுமே இருக்கின்றதா? புகழுக்குரிய அநேக கடவுட்கள் இருக்கின்றனரா அல்லது நம்முடைய தனிப்பட்ட பக்திக்கு வணக்கத்துக்கும் பாத்திரமுள்ள ஒரே ஒரு சர்வவல்லமையுள்ள கடவுள் மட்டுமே இருக்கிறாரா?
பொய்க் கடவுட்களின் எழுச்சி
மேற்கூறப்பட்ட கேள்வி நாம் கவனமாக ஆய்வு செய்ய தகுதியுள்ளதாயிருக்கிறது. ஏன்? ஏனென்றால், மதத்தின் பேரில், மிகப் பழைமையான எழுத்துருவிலுள்ள அதிகாரமா பெற்ற நூலான பைபிள், சர்ப்பத்தின் மூலம் செயல்பட்ட ஒரு பொய்க் கடவுள் எவ்விதமாக நம்முடைய முதல் மூதாதையரை அழிவுக்குப் போகும் பாதையினுள் வசீகரித்து இழுத்துக்கொண்டது. என்பதை விளக்குகிறது. அவனுடைய தந்திரத்தின் துயரமான விளைவுகளை இன்று வரையாக அனுபவித்து வருகிறோம். (ஆதியாகமம் 3:1-13, 16-19; சங்கீதம் 51:5) “கடவுளுடைய குமாரனாகிய” இயேசு அந்தக் கலகக் கடவுளை “இந்த உலகத்தின் அதிபதி” என்று குறிப்பிட்டார். இயேசுவினுடைய அப்போஸ்தலர்களில் ஒருவர் அவனை “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுள்” என்றழைத்தார். (யோவான் 1:34;12:31;16:11; 2 கொரிந்தியர் 4:4,NW) வெளிப்படுத்துதல் அதிகாரம் 12 வசனம் 9-ல் அவன் “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பு” என்பதாக வருணிக்கப்பட்டிருக்கிறான். ஒரு பொய் மத உலக பேரரசு, சாத்தானின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவருகிறது.
சாத்தான் பிரதான மோசக்காரன். (1 தீமோத்தேயு 2:14) அநேக விதமான தெய்வங்களை—மூதாதையரின் ஆவிகள், விக்கிரகங்கள், உருவங்கள், கன்னிமேரியின் சிலைகள்—உயர்த்துவதன் மூலம் வணங்குவதற்கு மனிதனுக்கிருக்கும் அந்த உள்ளான ஆசையைத் தந்திரமாக அவன் பயன்படுத்திக் கொள்கிறான். வல்லமைவாய்ந்த ஆட்சியாளர்கள், வெற்றி சிறந்த படைப்பெருந்தலைவர்கள், திரைப்பட மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் போன்ற மனித கடவுட்களின் வணக்கத்தையும்கூட அவன் ஊக்குவிக்கிறான். (அப்போஸ்தலர் 12:21-23) நாம் எச்சரிக்கையாயிருந்து உண்மையில் “நம்மில் ஒருவருக்கும் தூரமானவராயிராத” ஒரே மெய்க் கடவுளைத் தேடி அவரை வணங்க தீர்மானமாயிருப்பது நமக்கு நன்மை பயப்பதாயிருக்கும்.—அப்போஸ்தலர் 17:27.
அப்படியென்றால் நாம் வணங்க வேண்டிய இந்த ஈடிணையற்ற கடவுள் யார்? சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பாக, பைபிளின் சங்கீதக்காரன் அவரை “நான் நம்பியிருக்கிற என் தேவன். . .உன்னதமானவர். . .சர்வவல்லவர்” என்பதாக விவரித்து, அவரை “யெகோவா” என்ற சிறப்பு வாய்ந்த பெயரால் அழைத்தார். (சங்கீதம் 91:1, 2) இதற்கு முன்பு, மோசே அவரைக் குறித்து இவ்வாறு சொல்லியிருந்தார்: “நம்முடைய தேவனாகிய யெகோவா ஒருவரே யெகோவா” (உபாகமம் 6:4) மேலுமாக ஏசாயா தீர்க்கதரிசி கடவுள் தாமே சொல்வதாக இவ்வாறு சொன்னார்: “நான் கர்த்தர். [யெகோவா, NW] இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.”—ஏசாயா 42:8.
யெகோவா தேவன், பொய் கடவுளாகிய சாத்தான் தம்முடைய பெயரின் மீது பூசியிருக்கும் எல்லா நிந்தையையும் அகற்றிப்போட நோக்கங்கொண்டிருக்கிறார். அவர் பொ.ச.மு 1513-ல் இஸ்ரவேல் ஜனத்தை எகிப்திய அடிமைத்தன நுகத்திலிருந்து விடுவிப்பதற்காக தம்முடைய தீர்க்கதரிசியாகிய மோசேயை பயன்படுத்தியபோது இதை எவ்விதமாகச் செய்வார் என்பதை அவர் விளக்கினார். அந்தச் சமயத்தில், அவர் யெகோவா என்ற தம்முடைய பெயரை இந்த வார்த்தைகளோடு தொடர்புபடுத்தி பேசினார்: “நான் எதை நிருபிக்கவேண்டுமோ அதை நான் நிரூபிப்பேன்” யாத்திராகமம் 3:14, 15) எகிப்திய பார்வோனுக்கு எதிராக அவர் தம்மை நிரூபிப்பார். ஆனால் அந்தப் பொல்லாத அரசனிடம் அவர் முதலில் இவ்விதமாகச் சொன்னார் “என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன்.” யாத்திராகமம்—9:16
இன்று நிலைமை அதேவிதமாக இருக்கிறது. பூர்வ காலங்களிலிருந்த பார்வோனைப் போல, இந்த உலகத்தின் கடவுளாகிய சாத்தான் யெகோவா தேவனை எதிர்த்து நீதியையும் சத்தியத்தையும் நேசிக்கும் மனிதர்களுக்கு எதிராக ஆவிக்குரிய போரைத் தந்திரமாக தொடுத்து வருகிறான். (எபேசியர் 6:11, 12, 18) மறுபடியுமாக, சாத்தானுடைய எதிர்ப்பு இருந்தபோதிலும் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்திட கடவுள் நோக்கங் கொண்டிருக்கிறார். என்றபோதிலும் சாத்தானையும் அவனுடைய எல்லாக் கிரியைகளையும் அழிப்பதன் மூலம் தம்முடைய வல்லமையை காண்பிப்பதற்கு முன்பாக, யெகோவா பூமி முழுவதிலும் தம்முடைய நாமத்தை அறிவிக்க தம்முடைய வணக்கத்தாரை எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறார். அவருடைய நாமத்துக்கு இவ்விதமாக சாட்சி கொடுப்பது மெய்வணக்கத்தின் இன்றியமையாத ஒரு பாகமாகும்.
பொருத்தமாகவே, இந்த வணக்கத்தார் தம்முடைய சாட்சிகளாக, யெகோவாவின் சாட்சிகளாக இருப்பார்கள் என்பதை கடவுள்தாமே சொல்லியிருக்கிறார்: “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லி வருகிறார்கள்? அவர்கள் வெளியரங்கமாக வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கித்தும் கற்பித்தும் வருகிறார்கள். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் ஆளுகைச் செய்யப்படும் யெகோவாவின் ராஜ்யம் கீழ்படிதலுள்ள மனித குலத்துக்கு இந்த பூமியின் மீது நித்திய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்ற நற்செய்தியை அறிவித்து வருகிறார்கள். இவ்விதமாக அவர்கள் முதல் நூற்றாண்டில் மெய்க் கிறிஸ்தவர்கள் செய்த வண்ணமாகவே. “இடைவிடாமல்” கடவுளை வணங்குகிறார்கள். (அப்போஸ்தலர் 5:42; 20:20, 21) இதில் அவர்கள் தெய்வீக ஆசீர்வாதத்தை அனுபவித்திருக்கிறார்களா? பின்வரும் பக்கங்கள் பதிலளிக்கும்.