1914 சந்ததி—ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
“சில வருடங்களாக இந்தச் சகாப்தம், அச்சந்தரும் குழப்பத்தின் காலத்துடன் முடிவடையப் போவதை நாங்கள் எதிர்பார்த்திருப்பதை எங்கள் வாசகர் அறிவர். நாங்கள் அது அக்டோபர் 1914-லிருந்து சீக்கிரத்திலேயே, திடீரென்றும், முழு ஆற்றலுடனும் வெளிப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.”—மே 15, 1911, உவாட்ச் டவர் மற்றும் ஹெரால்ட் ஆப் கிரைஸ்ட்ஸ் பிரசன்ஸ்.
காவற்கோபுரம், கிறிஸ்துவின் பிரசன்னத்தை அறிவிக்கிறது என்பதாக 1879-ல் அறியப்பட்டு இருந்த (இன்று காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்று அறியப்படுகிறது) பத்திரிகை அடிக்கடி பைபிள் தீர்க்கதரிசனங்களில் 1914, ஒரு குறிப்பிடத்தக்க வருடம் என்று குறிப்பிட்டு வந்தது. அந்த வருடம் நெருங்கி வர வாசகர்கள் “ஓர் அச்சந்தரும் குழப்பத்தின் காலத்தை” எதிர்பார்க்கலாம் என்று நினைப்பூட்டப்பட்டனர்.
பைபிளில் குறிப்பிட்டுள்ள “ஏழு காலங்கள்,” மற்றும் “புறஜாதியாரின் காலங்கள்” இவற்றைப் பற்றியத் தங்களின் புரிந்து கொள்ளுதலின் அடிப்படையில் இந்தத் தகவல் கிறிஸ்தவர்களால் வெகு தூரத்திற்கும், விரிவாகவும் பிரசுரிக்கப்பட்டது.a அவர்கள் இந்தக் காலம் 2,520 வருடங்கள்—எருசலேமில் பூர்வ தாவீதிய ராஜ்யம் முறியடிக்கப்பட்டது தொடங்கி அக்டோபர் 1914 முடிய—என்று புரிந்துகொண்டிருந்தனர்.b—தானியேல் 4:16, 17; லூக்கா 21:24, கிங் ஜேம்ஸ் வெர்ஷன்.
அக்டோபர் 2, 1914-ல் உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியின் அன்றையத் தலைவரான சார்ல்ஸ் டேஸ் ரஸ்ஸல் தைரியத்துடன் அறிவித்தார்: “புறஜாதியாரின் காலம் முடிவடைந்தது; அவர்களுடைய ராஜாக்கள் தங்கள் நாட்களை அடைந்து முடிந்தனர்.” அவருடைய வார்த்தைகள் எவ்வளவு உண்மையுள்ளவைகளாக நிரூபிக்கப்பட்டன! மனிதக் கண்களுக்குப் புலப்படாத விதத்தில், உலகத்தை அதிர வைக்கும் ஒரு முக்கிய நிகழ்ச்சி அக்டோபர் 1914-ல் பரலோகத்தில் நடைபெற்றது. “தாவீதின் சிங்காசனத்திற்கு” நிரந்தரமான சுதந்தரவாளியாகிய இயேசு கிறிஸ்து மனிதகுலம் எல்லாவற்றின் மீதும் ராஜாவாகத் தன் ஆட்சியைத் தொடங்கினார்.—லூக்கா 1:32, 33; வெளிப்படுத்துதல் 11:15.
‘ஆனால், கிறிஸ்து 1914-ல் ஆளத் தொடங்கினால், பூமியில் ஏன் நிலைமைகள் மோசமாயின?’ என்பதாக நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் மனிதகுலத்தின் காணக்கூடாத சத்துருவாகிய சாத்தான் இன்னமும் இருப்பதால். 1914 வரையாக சாத்தான் பரலோகத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டவனாக இருந்தான். 1914-ல் கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டதுடன் இந்த நிலைமை மாறியது. “பரலோகத்தில் யுத்தம் மூண்டது.” (வெளிப்படுத்துதல் 12:7, NW) சாத்தானும் அவனுடைய பேய்த்தூதர்களும் முறியடிக்கப்பட்டு, பூமியில் தள்ளப்பட்டனர், விளைவு மனிதகுலத்தின் மீது குழப்பமான நிலையாக இருந்தது. பைபிள் முன்னறிவித்தது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு உங்களிடத்தில் இறங்கினபடியால் உங்களுக்கு ஆபத்து வரும்.”—வெளிப்படுத்துதல் 12:12.
பொ.ச. முதல் நூற்றாண்டிலே இயேசு பூமியின் புதிய ராஜாவாகத் தம்முடைய காணக்கூடாத பிரசன்னம் காணக்கூடிய அடையாளங்களால் குறிக்கப்படும் என்பதாகச் சொன்னார்: “உம்முடைய வருகைக்கும் [வந்திருத்தலுக்கும் NW], உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்று அவர் கேட்கப்பட்டார். அவருடைய பதில்? “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.”—மத்தேயு 24:3, 7, 8.
அவ்வண்ணமாகவே, 1914-ல் தொடங்கிய அந்த யுத்தத்தோடு பயங்கரமான உணவுப்பற்றாக்குறையும் ஏற்பட்டது, ஏனென்றால் நான்கு வருடங்களுக்கும் மேலாக சாதாரணமான உணவு உற்பத்தி தடைபட்டிருந்தது. “பல இடங்களில் பூமியதிர்ச்சிகளைப்” பற்றியதென்ன? 1914-ஐ தொடர்ந்த பத்தாண்டில் பத்துக்கு குறையாத அழிவுத்தன்மை வாய்ந்த பூமியதிர்ச்சிகள் 3,50,000-க்கும் மேற்பட்ட ஆட்களைக் கொன்றது. (பெட்டியைப் பார்க்கவும்.) உண்மையில், 1914-ன் சந்ததி “வேதனைகளுக்கு ஆரம்பத்தை” அனுபவித்தது. அது முதல் இயற்கை அழிவுகள், பஞ்சங்கள், அநேகமனேகப் போர்கள் உருவில் வேதனைகள் தொடர்ந்து ஒழுங்காகத் தாக்கிவருகின்றன.
எனினும், 1914-ல் ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தி நற்செய்தியாகும். ஏனென்றால் அந்த ராஜ்யம் பூமியை அழிவிலிருந்து காப்பாற்றும். எப்படி? அது எல்லாப் பொய், மாய்மால மதங்கள், ஊழலான அரசாங்கங்கள் மற்றும் சாத்தானின் துன்மார்க்க செல்வாக்கு இவற்றை எடுத்துப் போடும். (தானியேல் 2:44; ரோமர் 16:20; வெளிப்படுத்துதல் 11:18; 18:4-8, 24) மேலுமாக, அது ‘நீதி வாசமாயிருக்கும்’ ஒரு புதிய பூமிக்கு வழிநடத்தும்.—2 பேதுரு 3:13.
முதல் உலக யுத்தத்திற்குப் பின் உடனடியாக, பைபிள் மாணாக்கர்கள், என்று அப்பொழுது அறியப்பட்டிருந்த உண்மையுள்ள யெகோவாவின் சாட்சிகள், ராஜாவாக இயேசுவின் பிரசன்னத்தைக் காட்டும் அடையாளங்களின் மற்றொரு அம்சத்தைப் பற்றியதில் தங்களுக்கு இருக்கும் சிலாக்கியத்தைப் பற்றி புரிந்து கொள்ளத் தொடங்கினர். இயேசு கிறிஸ்து முன்னுரைத்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:14.
யெகோவாவின் சாட்சிகள் 1919-ல் சிறிய தொடக்கத்திலிருந்து, இந்தச் சுவிசேஷத்தைப் பரப்புவதில் விடாது தொடர்ந்து இருக்கின்றனர். அதன் விளைவாக 200-க்கும் மேற்பட்ட தேசங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இந்தப் பிரஜைகளுக்கு என்னே ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன! அந்த ராஜ்யம் யுத்தம், பஞ்சம், குற்றச்செயல், வன்முறை ஆகியவற்றை நீக்கிப் போடும். அது வியாதியையும், மரணத்தையும்கூட மேற்கொள்ளும்!—சங்கீதம் 46:9; 72:7, 12-14, 16; நீதிமொழிகள் 2:21, 22; வெளிப்படுத்துதல் 21:3, 4.
ராஜ்ய பிரசங்கிப்பு வேலை 1914-ன் சந்ததி அழிந்து போவதற்கு முன்னே அதன் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கும். அதன் பின், “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்து கொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்,” என்று இயேசு முன்னுரைத்தார்.—மத்தேயு 24:21, 22.
ஆயிரத்துதொள்ளாயிரத்துபதினான்கிற்கு முற்பட்ட சந்ததி செய்த தவறைச் செய்யாதீர்கள். காரியங்கள் இப்பொழுது இருக்கும் வண்ணமாகவே எப்போதும் தொடர்ந்து இருக்காது. அதிர வைக்கும் மாற்றங்கள் முன்னால் இருக்கின்றன. ஆனால் ஞானத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு, மகத்தான எதிர்பார்ப்பு இருக்கின்றது.
அப்படியென்றால், முற்காலத் தீர்க்கதரிசியின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “தேசத்தின் எல்லாச் சிறுமையானவர்களே, யெகோவாவைத் தேடுங்கள் . . . நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள். அப்பொழுது ஒருவேளை யெகோவாவின் கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (செப்பனியா 2:3, NW) இந்தப் புத்திமதியை நாம் எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கலாம்? அடுத்து வரும் கட்டுரைகள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க உதவி செய்யும்.
[அடிக்குறிப்புகள்]
a சிருஷ்டிப்பின் புகைப்பட-நாடக பட்டியலின் தலைப்பு பக்கம், 1914.
b மேலுமான விவரங்களுக்கு, உவாட்ச்டவர் சங்கம் வெளியிட்டுள்ள நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தில் அதிகாரம் 16-ஐ பார்க்கவும்.
[பக்கம் 7-ன் அட்டவணை]
பூமியதிர்ச்சிகள் 1914-ஐ தொடர்ந்து வந்த பத்தாண்டில்
தேதி: இடம்: மரணங்கள்:
ஜனவரி 13, 1915 அவெசானோ, இத்தாலி 32,600
ஜனவரி 21, 1917 பாலி, இந்தோனீஷியா 15,000
பிப்ரவரி 13, 1918 க்வாங்டங் மாகாணம், சீனா 10,000
அக்டோபர் 11, 1918 போர்டோ ரீக்கோ (மேற்குப் பகுதி) 116
ஜனவரி 3, 1920 வெர்க்ரூஸ், மெக்ஸிக்கோ 648
செப்டம்பர் 7, 1920 ரிகியோ டி காலிபிரா, இத்தாலி 1,400
டிசம்பர் 16, 1920 நிங்ஸியா மாகாணம், சீனா 2,00,000
மார்ச் 24, 1923 செக்வான் மாகாணம், சீனா 5,000
மே 26, 1923 ஈரான் (வடகிழக்கு) 2,200
செப்டம்பர் 1, 1923 டோக்கியோ-யோக்கஹாமா, ஜப்பான் 99,300
ஜேம்ஸ் M. கெர் மற்றும் ஹரேஷ் C. ஷா எழுதிய டெரா நான் ஃப்ர்மா புத்தகத்தில் “உலகின் குறிப்பிடத்தக்க பூமியதிர்ச்சிகள்” என்ற பட்டியலிலிருந்து.