‘தேவனே, என்னை ஆராய்ந்து பாரும்’
“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும். . . . நித்திய வழியிலே என்னை நடத்தும்.”—சங்கீதம் 139:23, 24.
1. யெகோவா தம்முடைய ஊழியர்களை எவ்வாறு கையாளுகிறார்?
நாம் எல்லாருமே, நம்மைப் புரிந்துகொள்ளும் ஒருவரால், நம்முடைய சூழ்நிலைகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் ஒருவரால், நாம் தவறு செய்யும்போது நமக்கு உதவும் ஒருவரால், நம்மால் செய்ய முடிவதற்கும் அதிகத்தை நம்மிடம் கேட்காத ஒருவரால் கையாளப்பட வேண்டுமென விரும்புகிறோம். யெகோவா தேவன் தம்முடைய ஊழியர்களை அந்தவிதமாகவே கையாளுகிறார். சங்கீதம் 103:14 சொல்லுகிறது: “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” மேலும் தம்முடைய தந்தையை முழுமையாகப் பிரதிபலிக்கும் இயேசு கிறிஸ்து, இந்த அன்பான அழைப்பை விடுக்கிறார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு [அல்லது, “என்னுடன்கூட என் நுகத்தின்கீழ் வாருங்கள்,” அடிக்குறிப்பு, NW], என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”—மத்தேயு 11:28-30.
2. (அ) இயேசு கிறிஸ்துவைக் குறித்ததிலும், (ஆ) கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களைக் குறித்ததிலும் மனிதருடையதிலிருந்து யெகோவாவின் நோக்கிலுள்ள வேறுபாட்டைக் குறிப்பிடுங்கள்.
2 தம்முடைய ஊழியர்களைப்பற்றிய யெகோவாவின் நோக்கு மனிதருடையதைக்காட்டிலும் அடிக்கடி மிகவும் வித்தியாசப்பட்டதாய் இருக்கிறது. அவர் ஒரு வித்தியாசமான நோக்குநிலையிலிருந்து காரியங்களைப் பார்க்கிறார்; மேலும் மற்றவர்கள் ஒன்றுமே அறிந்திராத அம்சங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறார். இயேசு கிறிஸ்து பூமியில் நடமாடியபோது, அவர் “அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரு”மாய் இருந்தார். மேசியாவாக அவர்மேல் விசுவாசம் வைக்காதவர்கள் “அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.” (ஏசாயா 53:3, NW; லூக்கா 23:18-21) இருப்பினும், கடவுளுடைய பார்வையில், அவர் “[கடவுளுடைய] நேசகுமாரன்,” அவரிடமே பிதா கூறினார்: “நான் உம்மை அங்கீகரிக்கிறேன்.” (லூக்கா 3:22, NW; 1 பேதுரு 2:4) பொருளாதாரவிதத்தில் ஏழைகளாக இருந்து அதிக உபத்திரவத்தைச் சகிப்பதன் காரணத்தால் தாழ்வாக நோக்கப்படும் மக்களும் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்குள் இருக்கின்றனர். இருந்தாலும், யெகோவா மற்றும் அவருடைய குமாரனின் பார்வையில், அப்படிப்பட்டவர்கள் செல்வந்தராய் இருக்கக்கூடும். (ரோமர் 8:35-39; வெளிப்படுத்துதல் 2:9) நோக்குநிலையில் ஏன் இந்த வித்தியாசம்?
3 எரேமியா 11:20 பதிலளிக்கிறது: ‘யெகோவா, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிறார்.’ நாம் உள்ளுக்குள் என்னவாக இருக்கிறோம் என்பதை, மற்றவர்களுடைய கண்களுக்கு மறைவாக இருக்கும் நம்முடைய ஆளுமையின் அம்சங்களையுங்கூட அவர் பார்க்கிறார். அவருடைய ஆய்வில், தம்மோடு ஒரு நல்ல உறவைக் கொண்டிருக்க அத்தியாவசியமானவையும், நமக்கு மிக நிரந்தரமாகப் பயனளிப்பவையுமாய் இருக்கும் குணங்களுக்கும் நிலைமைகளுக்கும் அவர் முக்கிய அழுத்தம் கொடுக்கிறார். அதை நாம் அறிந்திருப்பது நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது; அமைதியளிப்பதாயும் இருக்கிறது. நாம் உள்ளுக்குள் என்னவாக இருக்கிறோம் என்பதற்கு யெகோவா கவனம் செலுத்துவதால், தம்முடைய புதிய உலகில் அவர் விரும்பக்கூடிய விதமான ஆட்களாக நம்மை நிரூபிப்பதற்கு, நாம் உள்ளுக்குள் என்னவாக இருக்கிறோம் என்பதை ஆராய்வது முக்கியமாக இருக்கிறது. அத்தகைய ஒரு சோதனையைச் செய்வதற்கு அவருடைய வார்த்தை உதவுகிறது.—எபிரெயர் 4:12, 13.
கடவுளுடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை!
4. (அ) கடவுளுடைய எண்ணங்கள் தனக்கு அருமையானவை என்று அறிவிக்கும்படி சங்கீதக்காரனைத் தூண்டியது எது? (ஆ) அவை ஏன் நமக்கு அருமையானவையாக இருக்கவேண்டும்?
4 தம்முடைய ஊழியர்களைப்பற்றிய கடவுளுடைய அறிவின் அகலத்தையும் ஆழத்தையும், மேலும் அவர்களுக்குத் தேவையான எந்த உதவியையும் அளிப்பதற்கு கடவுளுடைய அளவுக்கதிகமான திறமையையும்பற்றி தியானித்த பிறகு, சங்கீதக்காரன் தாவீது எழுதினார்: “உமது ஆலோசனைகள் [எண்ணங்கள், NW] எனக்கு எத்தனை அருமையானவைகள்.” (சங்கீதம் 139:17அ) மனிதரின் கருத்துகள் எவ்வளவு அறிவுகூர்மையானதாகத் தோன்றினாலும், அவருடைய எழுதப்பட்ட வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய எண்ணங்கள் மனிதரிடமிருந்து வரும் எதைக்காட்டிலும் மிக உயர்வானவையாக இருக்கின்றன. (ஏசாயா 55:8, 9) வாழ்க்கையில் உண்மையிலேயே முக்கியமாக இருக்கும் காரியங்களுக்குக் கவனம் செலுத்தி அவருடைய சேவையில் வைராக்கியமாக இருப்பதற்குக் கடவுளுடைய எண்ணங்கள் நமக்கு உதவி செய்கின்றன. (பிலிப்பியர் 1:9-11) காரியங்களைக் கடவுள் நோக்கும் விதத்தில் எப்படி நோக்குவது என்று அவை நமக்குக் காண்பிக்கின்றன. அவை நம்மிடம் நாம் நேர்மையாக இருக்கும்படி, நாம் இருதயத்தில் என்னவிதமான ஆளாக இருக்கிறோமோ அதை ஒத்துக்கொள்ளும்படி நமக்கு உதவி செய்கின்றன. நீங்கள் அதைச் செய்ய மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?
5. (அ) ‘எல்லாவற்றிற்கும் மேலாக’ எதைக் காத்துக்கொள்ளும்படி கடவுளுடைய வார்த்தை உந்துவிக்கிறது? (ஆ) காயீனைக்குறித்த பைபிள் பதிவு எப்படி நமக்கு நன்மை பயக்கும்? (இ) நாம் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லாதபோதிலும், யெகோவாவைப் பிரியப்படுத்துவது எது என்பதைப் புரிந்துகொள்ள அது எவ்வாறு உதவி செய்கிறது?
5 மனிதர்கள் வெளிப்படையான தோற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனச்சாய்வைக் கொண்டிருக்கின்றனர்; ஆனால் வேதவார்த்தைகள் நமக்கு ஆலோசனை கொடுக்கின்றன: “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” (நீதிமொழிகள் 4:23) கட்டளைகள் மற்றும் உதாரணங்கள் மூலம், அதைச் செய்யும்படி பைபிள் உதவி செய்கிறது. காயீன் கடமைக்காகக் கடவுளுக்குப் பலிகளைச் செலுத்தினான்; ஆனால் தன்னுடைய இருதயத்தில் வன்மத்துடன் குமுறிக்கொண்டும், பின்னர் பகைமை உணர்ச்சியையும் தன் சகோதரனாகிய ஆபேலிடமாகக் கொண்டிருந்தான் என்று அது நமக்குச் சொல்கிறது. நாம் அவனைப்போல் இராதபடி அது நம்மை உந்துவிக்கிறது. (ஆதியாகமம் 4:3-5; 1 யோவான் 3:11, 12) அது மோசேயின் நியாயப்பிரமாணத்தின் தேவையாகிய கீழ்ப்படிதலைப் பதிவு செய்திருக்கிறது. ஆனால், யெகோவாவை வணங்குபவர்கள் தங்களுடைய முழு இருதயம், மனது, ஆத்துமா, மற்றும் பலத்தோடு அவரில் அன்புகூரவேண்டும் என்பது நியாயப்பிரமாணத்தின் மிகமுக்கிய தேவை என்பதையும் அழுத்திக் காண்பித்தது; மேலும் அடுத்த முக்கிய கட்டளை என்னவென்றால், தங்களைப்போலவே தங்களுடைய அயலாரிலும் அன்புகூரவேண்டும் என்பதாகும்.—உபாகமம் 5:32, 33; மாற்கு 12:28-31.
6. நீதிமொழிகள் 3:1-ஐப் பொருத்திப் பிரயோகிக்கையில் நம்மைநாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளவேண்டும்?
6 நீதிமொழிகள் 3:1-ல், நாம் வெறுமனே கடவுளுடைய கட்டளைகளைக் காத்துக்கொள்வதற்கல்ல, ஆனால் உண்மையில் நம் இருதயத்தில் என்ன இருக்கிறதோ அதன் வெளிக்காட்டுதலாகக் கீழ்ப்படிதல் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள நாம் உந்துவிக்கப்படுகிறோம். நாம் தனிப்பட்டவர்களாக நம்மைநாமே கேட்டுக்கொள்ளவேண்டும், ‘கடவுளுடைய தேவைப்படுத்தும் காரியங்களுக்கான என்னுடைய கீழ்ப்படிதலைக்குறித்ததில் அது உண்மையாக இருக்கிறதா?’ சில காரியங்களில் நம்முடைய தூண்டுதலோ சிந்தனையோ குறைவுபடுவதாக நாம் உணர்ந்தால்—மேலும் நம்மில் ஒருவரும் குறையற்றவர்கள் என்று சொல்லமுடியாதிருக்கையில்—நாம் கேட்டுக்கொள்ளவேண்டும், ‘நிலைமையைச் சரிசெய்ய நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்?’—நீதிமொழிகள் 20:9; 1 யோவான் 1:8.
7. (அ) மத்தேயு 15:3-9-லுள்ள பரிசேயரைப்பற்றிய இயேசுவின் கண்டனம், நம்முடைய இருதயத்தைக் காத்துக்கொள்வதில் எவ்வாறு நமக்கு உதவி செய்யக்கூடும்? (ஆ) என்ன நிலைமைகள், நம்முடைய மனதையும் இருதயத்தையும் சிட்சிப்பதற்குக் கண்டிப்பான படிகளை எடுப்பதைத் தேவைப்படுத்தக்கூடும்?
7 கடவுளைக் கனப்படுத்துவதாக யூத பரிசேயர் பாசாங்கு செய்துகொண்டு, தன்னல அக்கறையால் தூண்டப்பட்ட ஒரு பழக்கத்தைத் தந்திரமாக முன்னேற்றுவித்துக்கொண்டிருந்தபோது, இயேசு அவர்களை மாயக்காரர் என்று கண்டனம் செய்து, அவர்களுடைய வணக்கம் வீண் என்று காண்பித்தார். (மத்தேயு 15:3-9) இருதயத்தைப் பார்க்கும் கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு, காமவெறிக்குரிய இன்பத்தை அனுபவிப்பதற்காக தொடர்ந்து நாம் ஒழுக்கயீன எண்ணங்களில் ஈடுபட்டுக்கொண்டு, அதேநேரத்தில் வெளிப்படையாக ஓர் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வது போதுமானதாக இராது என்றும் இயேசு எச்சரித்தார். நம்முடைய மனதையும் இருதயத்தையும் சிட்சிப்பதற்குக் கண்டிப்பான படிகளை நாம் மேற்கொள்ள வேண்டியதாய் இருக்கக்கூடும். (நீதிமொழிகள் 23:12; மத்தேயு 5:27-29) நம்முடைய உலகப்பிரகாரமான வேலை, கல்வியைக்குறித்ததில் நம்முடைய இலக்குகள், அல்லது பொழுதுபோக்கில் நம்முடைய தேர்ந்தெடுப்பு, ஆகியவற்றின் விளைவாக நாம் உலகத்தைப் பின்பற்றுபவர்களாகி, அதன் தராதரங்களுக்கு ஏற்ப அது நம்மை உருவாக்க அனுமதிக்கிறோமென்றாலும் அப்படிப்பட்ட சிட்சை தேவைப்படுகிறது. கடவுளுக்குரியவர்களாக உரிமைபாராட்டிக்கொண்டு, உலகின் நண்பர்களாக இருக்க விரும்புபவர்களை “விபசாரரே, விபசாரிகளே” என்று சீஷன் யாக்கோபு அழைப்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஏன்? ஏனென்றால், “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.”—யாக்கோபு 4:4; 1 யோவான் 2:15-17; 5:19.
8. கடவுளுடைய அருமையான எண்ணங்களிலிருந்து நாம் முழுமையாக நன்மையடைய, என்ன செய்வது அவசியமாக இருக்கிறது?
8 இந்தக் காரியங்களையும் மற்றக் காரியங்களையும்பற்றிய கடவுளுடைய எண்ணங்களிலிருந்து முழுமையாக நன்மையடைய, நாம் அவற்றை வாசிப்பதற்கும் கேட்பதற்கும் நேரத்தை ஒதுக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்கும் மேலாக, நாம் அவற்றைப் படிக்கவேண்டும், அவற்றைக்குறித்துப் பேசவேண்டும், அவற்றின்பேரில் தியானிக்கவேண்டும். காவற்கோபுரத்தை வாசிப்பவர்கள் அநேகர், பைபிள் கலந்தாலோசிக்கப்படும் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு ஒழுங்காகச் செல்கின்றனர். அதைச் செய்வதற்காக மற்ற வேலைகளிலிருந்து நேரத்தை வாங்குகின்றனர். (எபேசியர் 5:15-17) அதற்குப் பதிலாக அவர்கள் பெறுவது பொருளாதார செழுமையைக்காட்டிலும் அதிக விலைமதிப்புடையதாகும். நீங்கள் அவ்விதமாகவே உணருகிறீர்கள் அல்லவா?
9. கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்பவர்களில் சிலர் ஏன் மற்றவர்களைவிட விரைவாக முன்னேற்றமடைகின்றனர்?
9 இருந்தாலும், கூட்டங்களுக்குச் செல்லும் சிலர் மற்றவர்களைவிட அதிக விரைவான ஆவிக்குரிய முன்னேற்றத்தை அடைகின்றனர். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சத்தியத்தை அதிக முழுமையாகப் பொருத்திப் பிரயோகிக்கின்றனர். இதற்குக் காரணம் என்ன? அடிக்கடி, ஒரு முக்கிய அம்சம், அவர்களுடைய ஊக்கந்தளராத தனிப்பட்ட படிப்பாகும். நாம் அப்பத்தினால் மாத்திரம் உயிர் வாழ்வதில்லை என்பதை அவர்கள் மதித்துணருகின்றனர்; சரீரப்பிரகாரமான உணவை ஒழுங்காகச் சாப்பிடுவதைப் போலவே, ஒவ்வொரு நாளும் ஆவிக்குரிய உணவு முக்கியமானதாய் இருக்கிறது. (மத்தேயு 4:4; எபிரெயர் 5:14) ஆகையால், அவர்கள் ஒவ்வொரு நாளும் கொஞ்சநேரமாவது பைபிளையோ அதை விளக்கும் பிரசுரங்களையோ வாசிப்பதற்கு முயற்சி செய்கின்றனர். அவர்கள் வேதவசனங்களை எடுத்துப்பார்த்து, பாடங்களை முன்னதாகவே படித்து, சபை கூட்டங்களுக்குத் தயாரிக்கிறார்கள். அந்தப் பொருளை வாசிப்பதைவிட அதிகத்தைச் செய்கின்றனர்; அதைக் குறித்துத் தியானிக்கின்றனர். தாங்கள் எதைப் படிக்கிறார்களோ, அது தங்களுடைய சொந்த வாழ்க்கையில் என்ன பலனைக் கொண்டிருக்கவேண்டும் என்பதைக் குறித்துக் கவனமாகச் சிந்திப்பதை அவர்களுடைய படிப்பு முறை உட்படுத்துகிறது. அவர்களுடைய ஆவிக்குரிய தன்மை வளருகையில், பின்வருமாறு எழுதிய சங்கீதக்காரனைப்போலவே உணரத் துவங்குகின்றனர்: “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! . . . உம்முடைய சாட்சிகள் [நினைப்பூட்டுதல்கள், NW] அதிசயமானவைகள்.”—சங்கீதம் 1:1-3; 119:97, 129.
10 நாம் கடவுளுடைய வார்த்தையை ஒரு வருடம், 5 வருடங்கள், அல்லது 50 வருடங்கள் படித்திருந்தாலும், அது ஒருபோதும் வெறும் திரும்பத் திரும்ப படிக்கப்படும் ஒன்றாக—கடவுளுடைய எண்ணங்கள் நமக்கு அருமையானவையாக இருந்தால்—ஆவதில்லை. வேதவார்த்தைகளிலிருந்து நம்மில் எவரும் எவ்வளவு அதிகமான காரியங்களைக் கற்றிருந்தாலும், நாம் அறியாதிருப்பவை நிறைய இருக்கின்றன. “தேவனே, . . . அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்,” என்று தாவீது சொன்னார். “அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்.” கடவுளுடைய எண்ணங்கள் நம்முடைய எண்ணும் திறமைக்கு அப்பாற்பட்டவை. கடவுளுடைய எண்ணங்களை நாள்முழுவதும் கணக்கிட்டு, அதைச் செய்துகொண்டே உறங்கிவிட்டோமென்றால், காலையில் நாம் எழும்பும்போது, நாம் சிந்தித்துப்பார்ப்பதற்கு இன்னும் அதிகமிருக்கும். இவ்வாறு, தாவீது எழுதினார்: “நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன்.” (சங்கீதம் 139:17, 18) நித்தியகாலத்திற்கும், நாம் யெகோவாவையும் அவருடைய வழிகளைப்பற்றியும் கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கும். நாம் எல்லாவற்றையும் அறிந்திருக்கும் நிலை ஒருபோதும் வராது.—ரோமர் 11:33.
யெகோவா வெறுப்பதை வெறுப்பது
11. கடவுளுடைய எண்ணங்களை அறிந்திருப்பது மட்டுமல்லாமல் அவருடைய உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வதும் ஏன் முக்கியமாக இருக்கிறது?
11 நாம் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பது, வெறும் நம்முடைய தலைகளை உண்மைகளால் நிரப்பும் நோக்கோடு அல்ல. அது நம்முடைய இருதயத்தை ஊடுருவும்படி அனுமதிக்கும்போது, நாமும் கடவுளுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். அது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது! அப்படிப்பட்ட உணர்ச்சிகளை நாம் வளர்த்துக்கொள்ளாவிட்டால், என்ன நேரிடக்கூடும்? பைபிள் என்ன சொல்கிறது என்பதை நம்மால் திரும்ப சொல்லமுடிந்தாலுங்கூட, விலக்கப்பட்டிருப்பதை விரும்பத்தக்கதாகவும், அல்லது தேவையானதைப் பாரமானதாகவும் நாம் உணரக்கூடும். நாம் தவறானதை வெறுத்தாலுங்கூட, மனித அபூரணத்தின் காரணமாக நாம் ஒரு போராட்டத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்பது உண்மையே. (ரோமர் 7:15) ஆனால், நாம் உள்ளுக்குள் என்னவாக இருக்கிறோமோ அதை, சரியானதைச் செய்வதற்கு இசைவாகக் கொண்டுவருவதற்கு உண்மையான முயற்சி எடுக்கவில்லையென்றால், ‘இருதயங்களைச் சோதிக்கிறவராகிய’ யெகோவாவைப் பிரியப்படுத்தமுடியும் என்று நாம் எதிர்பார்க்கலாமா?—நீதிமொழிகள் 17:3.
12 தெய்வீக அன்பு, சரியானதைச் செய்வதை இன்பமானதாக ஆக்குவதுபோல, தெய்வீக வெறுப்பு, தவறுசெய்தலுக்கு எதிராக ஒரு வல்லமையான பாதுகாப்பாக இருக்கிறது. (1 யோவான் 5:3) திரும்பவும் திரும்பவும், வேதவார்த்தைகள் அன்பு மற்றும் வெறுப்பு ஆகிய இரண்டையும் வளர்த்துக்கொள்ளும்படி நம்மைத் தூண்டுகின்றன. “கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்.” (சங்கீதம் 97:10) “தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.” (ரோமர் 12:9) நாம் அதைச் செய்கிறோமா?
13. (அ) துன்மார்க்கரை அழிப்பதைக் குறித்ததில் தாவீதின் என்ன ஜெபத்துடன் நாம் முழுமையாக ஒத்திசைந்திருக்கிறோம்? (ஆ) தாவீதின் ஜெபத்தில் காண்பிக்கப்பட்டபடி, கடவுள் அழிக்கும்படி அவர் ஜெபித்த துன்மார்க்கர் யாராக இருந்தனர்?
13 பூமியிலிருந்து துன்மார்க்கரை அழித்துவிட்டு, நீதி வாசமாயிருக்கும் புதிய பூமியைக் கொண்டுவரப்போகும் தம்முடைய நோக்கத்தை யெகோவா தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். (சங்கீதம் 37:10, 11; 2 பேதுரு 3:13) நீதியை நேசிப்பவர்கள், அப்படிப்பட்ட ஒரு காலம் வரும்படி காத்திருக்கின்றனர். பின்வருமாறு ஜெபித்த சங்கீதக்காரன் தாவீதுடன் அவர்கள் முழுமையாக ஒத்திசைந்திருக்கின்றனர்: “தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள். அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள்.” (சங்கீதம் 139:19, 20) தான் தனிப்பட்டவராகத் துன்மார்க்கரை அழிக்கவேண்டும் என்று தாவீது காத்திருக்கவில்லை. யெகோவாவின் கரத்தால் பழிவாங்குதல் வருவதற்காக அவர் ஜெபித்தார். (உபாகமம் 32:35; எபிரெயர் 10:30) ஏதாவது ஒரு வழியில், வெறுமனே தனிப்பட்ட விதத்தில் தாவீதுக்குத் தீங்கிழைத்த மக்களாக இவர்கள் இருக்கவில்லை. அவர்கள் கடவுளைத் தவறாகப் பிரதிநிதித்துவம் செய்து, அவருடைய பெயரை வீணிலே வழங்கிக்கொண்டிருந்தவர்களாக இருந்தனர். (யாத்திராகமம் 20:7) நேர்மையற்றவர்களாக, அவரைச் சேவிப்பதாக உரிமைபாராட்டிக்கொண்டு, தங்களுடைய சொந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். கடவுளுக்கு எதிரிகளாக இருக்கும்படி தெரிந்துகொண்டவர்கள்மேல் தாவீதுக்கு எவ்வித அன்பும் இருக்கவில்லை.
14. உதவி செய்யப்படக்கூடிய துன்மார்க்க மக்கள் இருக்கிறார்களா? இருக்கிறார்களென்றால், உதவுவது எப்படி?
14 யெகோவாவை அறியாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்களில் அநேகர், அறியாமையின் காரணமாக, கடவுளுடைய வார்த்தை துன்மார்க்கமானது என்று காண்பிக்கக்கூடிய காரியங்களைச் செய்கின்றனர். இந்த வழியில் தொடர்ந்திருந்தால், மகா உபத்திரவத்தில் அழிந்துபோகிறவர்களுக்குள் அவர்கள் இருப்பார்கள். இருந்தாலும், ஒரு துன்மார்க்கனின் மரணத்தில் யெகோவா எவ்வித சந்தோஷமும் அடைவதில்லை; நாமும் சந்தோஷப்படக் கூடாது. (எசேக்கியேல் 33:11) நேரம் அனுமதிக்கும் வரையிலும், அப்படிப்பட்ட மக்கள் யெகோவாவின் வழிகளைக் கற்று, பொருத்திப் பிரயோகிப்பதற்கு நாம் உதவி செய்கிறோம். ஆனால் சில மக்கள் யெகோவாவுக்குக் கடுமையான வெறுப்பைக் காண்பித்தால் என்ன செய்யலாம்?
15. (அ) ‘உண்மையான பகைஞராக’ சங்கீதக்காரனால் கருதப்பட்டவர்கள் யார்? (ஆ) யெகோவாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களை நாம் வெறுக்கிறோம் என்று நாம் எவ்வாறு இன்று காண்பிக்கலாம்?
15 அவர்களைக்குறித்து, சங்கீதக்காரன் சொன்னார்: “கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்.” (சங்கீதம் 139:21, 22) அவர்கள் யெகோவாவைக் கடுமையாக வெறுத்ததால்தானே, தாவீது அவர்களை வெறுப்புடன் நோக்கினார். யெகோவாவிடம் வெறுப்பை, அவருக்கு எதிராக கிளர்ச்சி செய்வதன்மூலம் காண்பிப்பவர்களில் விசுவாச துரோகிகளும் உட்பட்டிருக்கின்றனர். உண்மையில், விசுவாச துரோகம், யெகோவாவுக்கு எதிரான கலகமாக இருக்கிறது. சில விசுவாச துரோகிகள் கடவுளை அறிந்திருப்பதாகவும் அவரைச் சேவிப்பதாகவும் உரிமைபாராட்டுகின்றனர், ஆனால் அவருடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டுள்ள போதனைகளை அல்லது தேவைகளை நிராகரிக்கின்றனர். மற்றவர்கள், பைபிளை நம்புவதாக உரிமைபாராட்டுகின்றனர், ஆனால் யெகோவாவின் அமைப்பை நிராகரித்து, அதன் வேலையைத் தடைசெய்ய சுறுசுறுப்பாக முயலுகின்றனர். சரியானது எது என்பதை அறிந்தபின், அத்தகைய தீங்கை வேண்டுமென்றே செய்ய அவர்கள் தெரிவுசெய்யும்போது, அவர்களுடைய ஒழுங்கமைப்பிலிருந்து பிரிக்கமுடியாத அளவிற்குத் தீமை ஆழமாகப் பதிந்ததாக ஆகும்போது, அப்போது ஒரு கிறிஸ்தவன், தங்களைத் தீமையிலிருந்து பிரிக்கமுடியாதபடி அதைப் பற்றிக்கொண்டிருப்பவர்களை (பைபிளில் அந்த வார்த்தையின் அர்த்தத்தின்படி) வெறுக்கவேண்டும். அப்படிப்பட்ட விசுவாச துரோகிகளிடமாக மெய்க்கிறிஸ்தவர்கள் யெகோவாவின் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்; அவர்கள் விசுவாச துரோக எண்ணங்களைக்குறித்து அறிய ஆர்வமுள்ளவர்களாக இல்லை. மாறாக, கடவுளுக்குப் பகைஞராகத் தங்களை ஆக்கிக்கொண்டவர்களிடம் அவர்கள் ‘அருவருப்பு உணர்ச்சியைக்’ கொண்டிருக்கின்றனர்; ஆனால் பழிவாங்குதலை யெகோவாவிடம் விட்டுவிடுகின்றனர்.—யோபு 13:16; ரோமர் 12:19; 2 யோவான் 9, 10.
கடவுள் நம்மைச் சோதித்து ஆராயும்போது
16. (அ) ஏன் யெகோவா தன்னைச் சோதித்தாராய வேண்டும் என்று தாவீது விரும்பினார்? (ஆ) நாம் பகுத்தறிவதற்கு உதவ கடவுளிடம் கேட்பதற்கு நம்முடைய சொந்த இருதயத்தைப்பற்றி என்ன இருக்கிறது?
16 தாவீது எந்த வழியிலும் துன்மார்க்கரைப் போலிருக்க விரும்பவில்லை. அநேக மக்கள், தாங்கள் உள்ளுக்குள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை மறைக்க முயலுகின்றனர்; ஆனால் தாவீது மனத்தாழ்மையுடன் ஜெபித்தார்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் [அமைதியற்ற, NW] சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.” (சங்கீதம் 139:23, 24) தன்னுடைய இருதயத்தைப்பற்றி குறிப்பிடுகையில், தாவீது இங்குச் சொல்லர்த்தமான உடலின் உறுப்பை அர்த்தப்படுத்தவில்லை. அந்தக் கூற்றின் அடையாள அர்த்தத்திற்கு இசைவாக, அவர் தான் உள்ளுக்குள் என்னவாக இருக்கிறாரோ, அந்த உள்ளான மனிதனைக் குறிப்பிட்டார். நாமுங்கூட, கடவுள் நம்முடைய இருதயத்தைச் சோதித்து ஆராய்ந்து, நம்மிடம் ஏதாவது தவறான ஆசைகள், பாசங்கள், உணர்ச்சிகள், நோக்கங்கள், எண்ணங்கள், அல்லது உள்நோக்கங்கள் இருக்கின்றனவா என்று பகுத்தறியும்படி விரும்பவேண்டும். (சங்கீதம் 26:2) யெகோவா நம்மை அழைக்கிறார்: “என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.”—நீதிமொழிகள் 23:26.
17. (அ) அமைதியற்ற சிந்தனைகளை மறைத்து வைப்பதற்குப் பதிலாக நாம் என்ன செய்யவேண்டும்? (ஆ) நம்முடைய இருதயத்தில் தவறான மனச்சாய்வுகளைக் காண்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கவேண்டுமா, மேலும் அவற்றைக்குறித்து நாம் என்ன செய்யவேண்டும்?
17 தவறான ஆசைகள் அல்லது தவறான உள்நோக்கங்கள் அல்லது கடந்த காலத்தில் நம்முடைய பங்கில் ஏதாவது தவறான நடத்தையின் காரணமாக நம்மில் ஏதாவது வேதனையான, அமைதியற்ற சிந்தனைகள் மறைந்து கிடந்தன என்றால், நாம் அந்தக் காரியத்தைச் சரி செய்வதற்கு நிச்சயமாகவே யெகோவா நமக்கு உதவி செய்யவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். “வேதனை உண்டாக்கும் வழி” என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, “ஒரு தவறான போக்கு” என்ற கூற்றை மொஃபட் மொழிபெயர்ப்பு பயன்படுத்துகிறது; தி நியூ இங்கிலிஷ் பைபிள் சொல்கிறது: “உம்மை [அதாவது, கடவுளை] துக்கப்படுத்தும் எந்த வழியும்.” நாம்தானே நம்முடைய அமைதியற்ற சிந்தனைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால் நம்முடைய பிரச்னையை எப்படிக் கடவுளிடம் வெளிப்படுத்துவது என்று அறியாமல் இருக்கக்கூடும்; ஆனால் அவர் நம்முடைய நிலைமையைப் புரிந்துகொள்கிறார். (ரோமர் 8:26, 27) நம்முடைய இருதயத்தில் தவறான மனச்சாய்வுகள் இருப்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கக்கூடாது; இருந்தாலும், நாம் அவற்றைப் புறக்கணித்துவிடக்கூடாது. (ஆதியாகமம் 8:21) அவற்றை வேரோடு எடுத்துக்களைய கடவுளுடைய உதவியை நாடவேண்டும். நாம் உண்மையிலேயே யெகோவாவையும் அவருடைய வழிகளையும் நேசித்தோமானால், “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” என்ற நம்பிக்கையுடன் அப்படிப்பட்ட உதவிக்காக நாம் அவரை அணுகலாம்.—1 யோவான் 3:19-21.
18. (அ) நித்திய காலத்திற்கான வழியில் யெகோவா எப்படி நம்மை வழிநடத்துகிறார்? (ஆ) யெகோவாவின் கட்டளையைத் தொடர்ந்து நாம் பின்பற்றினால், என்ன அன்பான பாராட்டை நாம் பெறும்படி எதிர்பார்க்கலாம்?
18 யெகோவா தன்னை நித்திய காலத்திற்கும் வழிநடத்துவார் என்ற சங்கீதக்காரனின் ஜெபத்திற்கு இசைவாக, யெகோவா உண்மையிலேயே, தம்முடைய மனத்தாழ்மையான, கீழ்ப்படிதலுள்ள ஊழியர்களை வழிநடத்துகிறார். தீங்கு செய்ததற்காக, காலத்திற்கு முன்னாக அழிக்கப்படுவதிலிருந்து காக்கப்படுவதால் நீண்ட நாள் வாழ்க்கையைக் குறிக்கும் பாதையில் மட்டுமல்லாமல், நித்திய ஜீவ பாதையிலும் அவர்களை வழிநடத்துகிறார். இயேசுவின் பலியின் பாவ நிவாரண மதிப்பிற்கான தேவையையும் அவர் நம்மேல் பதிய வைக்கிறார். தம்முடைய வார்த்தை மற்றும் தம்முடைய அமைப்பின் மூலம், நாம் அவருடைய சித்தத்தைச் செய்வதற்குத் தேவையான அத்தியாவசியமான போதனையைக் கொடுக்கிறார். நாம் வெளியில் என்ன வகையான ஆளாக இருப்பதாக உரிமைபாராட்டுகிறோமோ, உள்ளுக்குள்ளும் அந்த வகையான ஆளாகவே இருப்பதற்கு, அவருடைய உதவிக்குப் பிரதிபலிப்பதன் முக்கியத்துவத்தை அவர் அழுத்திக் காண்பிக்கிறார். (சங்கீதம் 86:11) ஒரு நீதியுள்ள புதிய உலகில், ஒரே உண்மை கடவுளாகிய அவரைச் சேவிப்பதற்குப் பயன்படுத்தும்படி, நித்திய கால வாழ்க்கையோடுகூட பரிபூரண ஆரோக்கியத்திற்கான எதிர்நோக்குடன் அவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார். அவருடைய கட்டளைக்குத் தொடர்ந்து உண்மையுடன் பிரதிபலித்தோமானால், அவர் தம்முடைய மகனிடம் சொன்னதுபோல முடிவில் நம்மிடமும் சொல்லுவார்: ‘நான் உன்னை அங்கீகரித்திருக்கிறேன்.’—லூக்கா 3:22; யோவான் 6:27; யாக்கோபு 1:12.
உங்களுடைய குறிப்பு என்ன?
◻ தம்முடைய ஊழியர்களைப்பற்றிய யெகோவாவின் நோக்குநிலை ஏன் மனிதருடையதிலிருந்து பெரும்பாலும் வித்தியாசப்பட்டதாய் இருக்கிறது?
◻ கடவுள் நம்முடைய இருதயத்தை சோதித்தாராயும்போது பார்ப்பதைப் பகுத்தறிவதற்கு எது நமக்கு உதவி செய்யலாம்?
◻ உண்மைகளைக் கற்றுக்கொள்ளவும் நம்முடைய இருதயத்தைக் காத்துக்கொள்ளவும் என்ன வகையான படிப்பு உதவி செய்கிறது?
◻ கடவுள் என்ன சொல்கிறார் என்பதை அறிந்திருப்பது மட்டுமல்லாமல் அவருடைய உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வது ஏன் முக்கியமாக இருக்கிறது?
◻ நாம் ஏன் தனிப்பட்டவர்களாகப் பின்வருமாறு ஜெபிக்க வேண்டும்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்”?
3. (அ) மக்களைப்பற்றிய யெகோவாவின் நோக்குநிலை ஏன் பெரும்பாலும் மனிதருடையதிலிருந்து மிக வித்தியாசப்பட்டதாய் இருக்கிறது? (ஆ) நாம் உள்ளுக்குள் என்ன வகையான ஆளாக இருக்கிறோம் என்பதைச் சோதித்து ஆராய்வது ஏன் மிகவும் முக்கியமாக இருக்கிறது?
10. (அ) கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதை எவ்வளவு நீண்ட காலப்பகுதிக்குத் தொடருவது இலாபகரமானதாக இருக்கும்? (ஆ) வேதவார்த்தைகள் இதை எவ்வாறு காண்பிக்கின்றன?
12. தெய்வீக அன்பும் தெய்வீக வெறுப்பும் எவ்வளவு முக்கியமானவை?
[பக்கம் 16ன் படம்]
படிக்கும்போது, கடவுளுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உங்களுடையதாக்க முயற்சி செய்யுங்கள்
[பக்கம் 18ன் படம்]
யெகோவாவின் எண்ணங்கள் “மணலைப்பார்க்கிலும் அதிகமாம்”
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.