கடவுளுடைய சித்தத்தை நீங்கள் செய்துகொண்டு இருக்கிறீர்களா?
யெகோவாவின் சாட்சிகளில் இருவர் தங்களுடைய வீட்டுக்கு வீடு ஊழியத்தில் எப்பிஸ்கப்பல் சர்ச்சின் ஒரு மதகுருவைச் சந்தித்தனர். அவர் நயமானவராய் தோன்றினார், தாடியோடிருந்தார்; ஏறக்குறைய 60 வயதுடையவராய் இருந்தார், அவருடைய சர்ச்சின் பெயர் தீட்டப்பட்ட ஒரு டி-சர்ட் அணிந்துகொண்டிருந்தார். ஒரே மூச்சில் இவ்வாறு சொன்னார்: “அந்த வார்த்தையைப் பரப்புவதில் எங்கள் சர்ச் அங்கத்தினர்கள் உங்களைப் போல உற்சாகமாய் இருக்க நான் விரும்புகிறேன். ஆனால் நீங்கள் என் வீட்டிற்கு இனிமேல் வரவேண்டாம் என்று கேட்கவேண்டியதிருக்கிறது.”
ஆம், யெகோவாவின் சாட்சிகளினுடைய வேலையை வியந்து பாராட்டுபவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்களின் உற்சாகத்திற்காகவும், ஆர்வத்திற்காகவும் அவர்களைப் போற்றுகிறார்கள். எனினும், சாட்சிகளினுடைய வேலையில் எந்தவித அக்கறையுமே காட்டாதவர்கள் அவர்கள், அல்லது அந்த வேலையை தாங்கள் செய்யவும் யோசிக்கமாட்டார்கள். ஆனாலும், காரியங்களின் இந்த வெளிப்படையான முரண்பாடு ஒன்றும் புதிதல்ல. இது இயேசுவினால் அவருடைய நாள்களில் கவனிக்கப்பட்டது. அவர் சிந்தனையைத் தூண்டும் உவமையின்மூலம் உறுதியுடன் அழுத்திக் காண்பித்தார்.
“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவர் போய்: ‘மகனே, நீ போய் இன்றைக்குத் திராட்சத் தோட்டத்தில் வேலை செய்,’ என்று சொன்னார். அதற்கு இவன், ‘நான் போகிறேன், ஐயா’ என்று பதிலளித்தான்; ஆனால் இவன் போகவில்லை. இரண்டாம் மகனை அணுகி அதையே சொன்னார். அதற்கு இவன், ‘நான் போகமாட்டேன்’ என்று சொன்னான். பின்பு இவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன்?”—மத்தேயு 21:28-31, NW.
பதில் தெளிவாய் இருக்கிறது. இயேசு சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தைப்போல், “பிந்தினவன்தான்” என்று நாமும் பதிலளிப்போம். ஆனால் தெளிவாய் இருப்பதற்கும் அப்பால், அந்த உவமையின்மூலம் இயேசு, பிதா விரும்பியதைச் செய்வதே முக்கியம் என்பதற்கு நம்முடைய கவனத்தைத் திருப்பிக்கொண்டிருந்தார். இரண்டாம் மகன் தான் போக விரும்பவில்லை என்று கூறினாலும், எப்படியோ போனான், அதற்காக பாராட்டப்பட்டான். சரியான வகையான வேலையைச் செய்வது இணையான முக்கியத்துவமுடையது. பிதாவின் திராட்சத் தோட்டத்தில் வேலைசெய்வதன்மூலம் இரண்டாம் மகன் செயல்பட்டான்; அவன் போய் தன் சொந்த திராட்சத் தோட்டத்தில் வேலைசெய்ய போகவில்லை.
இதெல்லாம் நம்மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது? இன்றுள்ள வணக்கத்தாரிடமிருந்து கடவுள் எதைக் கேட்கிறார்? இயேசுவினுடைய பிதாவின் சித்தத்தை நாம் செய்வதற்கு இயேசுவின் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளமுடியும்? இவை முக்கியமான கேள்விகள், சரியான பதில்களை நாம் கண்டுபிடிப்பது நித்திய கால நலனை அர்த்தப்படுத்தும். ஏனென்றால், ‘கடவுளுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.’—1 யோவான் 2:17; எபேசியர் 5:17.
‘கடவுளுடைய சித்தம்’ என்ன?
“சித்தம்,” என்ற பெயர்ச்சொல் புதிய உலக மொழிபெயர்ப்பின் விரிவான ஒத்தசொல் வருகைப் பட்டியலில் (Comprehensive Concordance of the New World Translation of the Holy Scriptures) 80 முறைக்கு மேல் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இவற்றில் சுமார் 60 தடவை (அல்லது சுமார் 75 சதவிகித முறை) கடவுளுடைய சித்தத்தைப் பற்றி மேற்கோள் காட்டுகிறது. “கடவுளின் சித்தம்,” “என் பிதாவின் சித்தம்,” “கடவுளுடைய சித்தம்” போன்ற சொற்றொடர்கள் 20-க்கும் மேற்பட்ட தடவைகள் தோன்றுகின்றன. இதிலிருந்து தெய்வ சித்தம் நமக்கு முதலாம் முக்கியத்துவம் உடையதாக இருக்க வேண்டும் என்பதை நாம் உணர முடிகிறது. நம்முடைய வாழ்க்கையின் பிரதான அக்கறை, கடவுளுடைய சித்தத்தின்படி செய்துகொண்டிருப்பதாகவே இருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில், “சித்தம்” (“will”) என்ற பெயர்ச்சொல், ‘விருப்பம், ஆவல், தீர்மானம், விரும்பப்பட்ட ஏதோவொன்று, விசேஷமாக அதிகாரமுடையவரின் அல்லது பலமுடையவரின் ஒரு தெரிவு அல்லது தீர்மானம்,’ என்பதை அர்த்தப்படுத்துகிறது. எனவே, யெகோவா, உன்னத அதிகாரமுடையவர், ஒரு சித்தத்தை, ஒரு விருப்பத்தை அல்லது தீர்மானத்தை உடையவராய் இருக்கிறார். அது என்ன? வசனங்கள் அதைப் பகுதியாக நமக்குச் சொல்கிறது, ‘எல்லாவகை மனிதரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற திருத்தமான அறிவை அடையவும் வேண்டுமென்பதே [கடவுளுடைய] சித்தமாயிருக்கிறது.’ (1 தீமோத்தேயு 2:4, NW) இயேசு கிறிஸ்துவும் ஆரம்ப கிறிஸ்தவர்களும் மற்றவர்களுக்கு இந்தத் திருத்தமான அறிவைக் கொடுப்பதற்கு முழு ஆத்துமாவோடு செயல்பட்டனர்.—மத்தேயு 9:35; அப்போஸ்தலர் 5:42; பிலிப்பியர் 2:19, 22.
இன்று கடவுளுடைய சித்தத்தை யார் செய்துகொண்டிருக்கிறார்கள்? இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்று பறைசாற்றிக்கொள்ளும் கிட்டத்தட்ட 200 கோடி மக்களில், போய் தன்னுடைய தகப்பனின் சித்தத்தின்படி செய்த இயேசுவின் உவமையிலுள்ள இளைய மகனைப்போல் எத்தனைபேர் இருக்கிறார்கள்? பதிலைக் கண்டுபிடிப்பது அதிக கடினமல்ல. இயேசு கிறிஸ்து அவர்களை என்ன செய்யச் சொன்னாரோ அந்த வேலையையே உண்மையில் அவருடைய அடிச்சுவடைப் பின்பற்றுகிறவர்கள் செய்துகொண்டு இருப்பார்கள்: “சகல தேசங்களிலும் நற்செய்தி முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும்.” (மாற்கு 13:10, NW) உலகமெங்கும் 45 லட்சத்திற்கு மேலான எண்ணிக்கையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைச் சுறுசுறுப்பாகப் பிரசங்கித்து, மற்றவர்களுக்குப் போதித்துக் கொண்டும் இருக்கிறார்கள். சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கை ராஜ்யமே என்று குறிப்பிட்டு வருகிறார்கள். கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நீங்கள் முழுப் பங்கை வகித்துவருகிறீர்களா? இயேசு செய்ததுபோல், நீங்கள் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறீர்களா?—அப்போஸ்தலர் 10:42; எபிரெயர் 10:7.
கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் சந்தோஷத்தைக் காணுதல்
கடவுளுடைய சித்தம் என்னவென்று கற்றுக்கொள்வதில் சந்தோஷம் இருக்கிறதென்றாலும், மற்றவர்களுக்குக் கடவுளுடைய சித்தத்தைக் கற்றுக்கொடுப்பதில் அதிக சந்தோஷம் இருக்கிறது. இயேசு தம்முடைய பிதாவைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதில் சந்தோஷமடைந்தார். அது உணவுபோல் அவருக்கு இருந்தது. (யோவான் 4:34) இயேசு செய்ததுபோல் நாமும் செய்தோமென்றால், அதாவது அவர் கற்பித்தவற்றை, அவருடைய பிதாவிடமிருந்து அவர் பெற்றவற்றைப் பிரசங்கம்செய்து, போதிக்கும்போது, நாமும் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்போம். (மத்தேயு 28:19, 20) இயேசு வாக்குறுதியளித்த பிரகாரம், “நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், [மகிழ்ச்சியுள்ளவர்களாயிருப்பீர்கள், NW].”—யோவான் 13:17.
உதாரணப்படுத்த: சமீபத்தில் முழுநேர பயனியர் சேவையில் தன்னை மறுபடியும் ஈடுபடுத்திக்கொண்ட ஒரு தாய் சொன்னார்: “பைபிளின் பலவிதமான சத்தியங்கள் ஒரு பைபிள் மாணாக்கரின் இருதயத்தைத் தொடும்போது அவரின் முகத்தில் பிரகாசத்தைக் காண்பது, எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது! ஒரு குறிப்பிட்ட மாணாக்கர், படிப்பிற்கு முன்பாக எல்லா வசனத்தையும் கைப்பட எழுதி, சற்றுப்பின் கேட்கப்படப்போகும் எந்த மறுபார்வை கேள்விக்கும் அவள் பதில்கொடுக்க முடியும்படி படிப்பின்போது குறிப்புகளைக் குறித்துக்கொண்டதைப் பார்ப்பது அப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுப்பதாய் இருக்கிறது.” அவளுடைய பைபிள் மாணாக்கர்களில் மற்றொரு பெண் தன்னுடைய பருவ வயதுகளில் சத்தியத்தைப் பற்றி சிறிது அறிந்திருந்தாள். இப்போது திருமணமாகி, சில சொந்த பிரச்னைகளின்மீது அக்கறையுள்ளவளாக, அவள் சாட்சிகளைக் காண ஆவலுடனிருந்தாள். பயனியர் சகோதரி அவளைக் கண்டபோது, எவ்வளவு மகிழ்ச்சியடைந்தாள்! அந்த இளம்பெண் தன்னுடைய பைபிள் படிப்பை மீண்டும் ஆரம்பிப்பதில் பூரிப்படைந்தாள்.
கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளுதல்
பூர்வீக இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது தன்னுடைய வாழ்நாளெல்லாம் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நாடின ஒருவராய் இருந்தார். அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பல பிரச்னைகள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், அவர் இவ்வாறு சொல்வதற்கு ஏவப்பட்டார்: “என் கடவுளே, உம்முடைய சித்தத்தைச் செய்ய நான் களிகூருகிறேன். உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது.” (சங்கீதம் 40:8, NW) யெகோவாவின் சித்தத்தைச் செய்வது தாவீதின் ஆத்துமாவில்தானே, அவருக்குள்தானே இருந்தது. யெகோவாவைச் சேவிப்பதில் அவருடைய மங்காத சந்தோஷத்தின் ரகசியமாக அது இருந்தது. கடவுளுடைய சித்தத்தைச் செய்வது, தாவீதுக்குக் கடினமான ஒன்றாக இல்லை. அதற்குப் பதிலாக, அது களிப்பூட்டுவதாக, அவருடைய இருதயத்திலிருந்து வந்த ஒன்றாக இருந்தது. சில சமயங்களில் அவர் பாவம்செய்து, குறைவுபட்டிருந்தாலும், அவருடைய வாழ்க்கை முழுவதும், அவருடைய கடவுளாகிய யெகோவாவைச் சேவிப்பதற்கு அவரால் முயன்ற அனைத்தையும் செய்யப் போராடினார்.
சில சமயத்தில், நம் சந்தோஷம் குறையக்கூடும். நாம் சோர்வடைந்து, மனம்வாடிப் போகக்கூடும். ஒருவேளை, நம் கடந்தகால நிகழ்ச்சிகள் நம்மை ஓயாது வந்து அலைக்கழிக்கக்கூடும். வெகுகாலத்திற்கு முன்பு நாம் செய்த ஏதோவொரு தவறான செயல்காரணமாக நம் மனசாட்சி நம்மைத் தொல்லைப்படுத்தலாம். பெரும்பாலும், இந்த உணர்ச்சிகளைக் கடவுளுடைய வார்த்தையின் மிக ஆழ்ந்த படிப்பின்மூலம் மேற்கொள்ளமுடியும். தாவீது செய்ததுபோல், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை நம் “உள்ளத்திற்குள்” பதித்துவைக்க நாம் நோக்கங்கொள்ளலாம். கடவுளுடைய சித்தத்தை முழு ஆத்துமாவோடு செய்ய நாம் முயற்சிசெய்தால், அதாவது, நம்மால் முடிந்தளவுக்கு செய்தால், அவர் நமக்கு அதன்படியே பலனளிப்பார். ஏனென்றால், அவர் உண்மையுள்ளவர்.—எபேசியர் 6:6; எபிரெயர் 6:10-12; 1 பேதுரு 4:19.
அக்கறையூட்டுவதாக, எபிரெயர் 10:5-7-ல், அப்போஸ்தலன் பவுல் சங்கீதம் 40:6-8-ல் உள்ள தாவீதின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, இயேசு கிறிஸ்துவுக்கு அவற்றைப் பொருத்திக் காட்டுகிறார். இவ்வாறு செய்வதன்மூலம், இயேசு பிதாவிடம் எவ்வளவு நெருங்கியிருந்தார் என்பதைப் பவுல் குறிப்பிட்டார். “சித்தம்” என்ற சொல்லிற்கான எபிரெய வார்த்தை, ‘களிப்பு, விருப்பம், தயவு, அல்லது மகிழ்ச்சி’ ஆகிய கருத்துக்களை உடையதாயிருக்கிறது. எனவே, சங்கீதம் 40:8 கிறிஸ்துவைக்குறித்து ஒருவேளை இவ்வாறு வாசிக்கலாம்: “என் கடவுளே, உம்முடைய மனமகிழ்ச்சியைச் செய்ய, நான் களிகூருகிறேன்.”a இயேசு, எப்பொழுதும்போலவே, அவருடைய தகப்பனை எது மனமகிழ்வித்ததோ அதையே செய்ய விரும்பினார். இயேசு தம்மிடத்தில் கேட்கப்பட்டதை செய்வதற்கும் அப்பால் சென்றார். அவருடைய பிதாவின் இருதயத்தில் என்ன இருந்ததோ அதைச் செய்தார்; அதைச் செய்வதை அனுபவிக்கவும் செய்தார்.
கடவுளுடைய சித்தம் என்னவாக இருக்கிறது என்பதையும் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெற மற்றவர்கள் என்னசெய்யவேண்டும் என்பதையும் அவர்களுக்குக் கற்பிப்பதைச் சுற்றியே இயேசுவின் முழு வாழ்க்கையும் அமைந்திருந்தது. அவர் முழுநேர பிரசங்கியாகவும் போதகராகவும் இருந்தார். அந்த வேலையைச் செய்வதில் அதிகமான சந்தோஷத்தைக் கண்டடைந்தார். எனவே, நாம் யெகோவாவின் வேலையை எவ்வளவு அதிகம் செய்கிறோமோ அவ்வளவு அதிக சந்தோஷத்தை நாம் பெறுவோம். உங்களுடைய சந்தோஷமும் நிறைவாகும்படி நீங்களும் பிரசங்க வேலையில் முழுநேரமாக ஊழியம்செய்ய முடியுமா?
எதிர்காலத்தைத் தெளிவான இலக்காக வைத்திருப்பது, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள உதவும் கூடுதலான உதவியாகும். அதைத் தான் இயேசு செய்தார். “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், கழுமர வேதனையைச் சகித்தார்.” அவருக்கு, இறுதிவரை தம்மைக் கடவுளுக்கு உண்மையுள்ளவராக நிரூபித்து, பின்பு அவர் தம்முடைய பிதாவின் வலதுபக்கத்தில் ராஜ்யத்துவ பலனைப் பெறுவதாகும்.—எபிரெயர் 12:2, NW.
கடவுளுடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்துவருவோரின் எதிர்கால சந்தோஷத்தைக்குறித்து சிந்தித்துப்பாருங்கள். கடவுளுடைய சித்தத்தைச் செய்ய முயல்வோருக்கு இது துன்பத்தைக் கொண்டுவந்தாலும் தன் சொந்த தன்னல விருப்பங்களையே செய்ய பிடிவாதமாய் இருப்போரின் அழிவை அவர்கள் காண்பார்கள். (2 தெசலோனிக்கேயர் 1:7, 8, 10) உயிர்த்தெழுப்பப்பட்ட அன்பானவர்கள் கடவுளுடைய சித்தத்தைக் கற்கவும் செய்யவும் வாய்ப்பைப் பெறும் சந்தோஷத்தைப் பற்றி நினைத்துப்பாருங்கள். அல்லது பூமியைப் பரதீஸாக மாற்றும் கடவுளுடைய நோக்கத்தை நினைத்துப்பாருங்கள். மேலும் இறுதியாக, யெகோவாவின் சித்தத்திற்கு எதிராளியாகிய சாத்தானை முழுமையாக அழிப்பதனால் வரும் சுதந்திரத்தைக் கற்பனைசெய்துபாருங்கள்.
ஆம், கடவுளுடைய சித்தத்தைச் செய்வது இப்போது அதிகமான சந்தோஷத்தையும், எதிர்காலத்தில் முடிவில்லா மகிழ்ச்சியையும் கொண்டுவரும். பிரசங்க வேலையில் நாம் பெறும் பிரதிபலிப்பைப் பொருட்படுத்தாமல், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் மனமகிழ்ச்சியைப் பெற்றிருப்பதில் இயேசுவின் மாதிரியை நாம் பின்பற்றுவோமாக.
[அடிக்குறிப்புகள்]
a சங்கீதம் 40:8-ன் [NW] அடிக்குறிப்பைக் காண்க.