நம்பகமான வழிநடத்துதலை நீங்கள் எங்குக் கண்டடையலாம்?
“யெகோவாவே, மனுஷனுடைய வழி அவன் வசத்தில் இல்லை யென்றும் தன் நடையை நடத்துவது நடக்கிறவன் வசத்தில் இல்லையென்றும் அறிவேன். யெகோவாவே, என்னைசிட்சியும்.”—எரேமியா 10:23, 24, திருத்திய மொழிபெயர்ப்பு.
பைபிள் எழுத்தாளர் எரேமியா அந்த வார்த்தைகளை சுமார் 25 நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதினார். மனித வழிநடத்துதலை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பொருத்திப் பிரயோகித்ததன் விளைவாக வந்திருக்கும் மனிதவர்க்கத்தின் துயரகரமான நிலைமை இந்த வாக்கை மறுக்க முடியாத உண்மையாக்கியிருக்கிறது. ஆனால் நீங்கள் ஒருவேளை கேட்கலாம், ‘நம்பகமான வழிநடத்துதல் எங்குக் கண்டடையப்படலாம்?’
மேலே மேற்கோள் காட்டப்பட்ட வசனம், மனிதனைவிட அதிக உன்னதமான அதாவது மனிதனின் சிருஷ்டிகர் யெகோவா தேவனுடைய நம்பத்தக்க வழிநடத்துதல் மற்றும் அறிவுரையின் ஊற்றுமூலத்தைக் குறிப்பிடுகிறது. நிச்சயமாகவே, மனிதன் எவ்வாறு உண்டாக்கப்பட்டிருக்கிறான், அவனுடைய தேவைகள் என்ன என்பதை நம் சிருஷ்டிகரைத் தவிர வேறுயாரும் நன்றாக அறிந்திருக்கிறதில்லை. எனினும், அப்படிப்பட்ட வழிநடத்துதலையும் அறிவுரையையும் நமக்குக் கொடுப்பதற்கு கடவுள் அக்கறையுள்ளவராய் இருக்கிறாரா? அதை அவர் எவ்வாறு செய்கிறார்? நம் காலங்களுக்கு நடைமுறையானதாக அது இருக்கிறதா?
கடவுளின் வழிநடத்துதலைப் பெறும்படி உருவாக்கப்பட்டிருக்கிறோம்
மனிதனை விலங்குகளிலிருந்து வித்தியாசப்படுத்தும் ஒரு முக்கியமான வேறுபாடு, மனித மூளையின் வடிவமைப்பு, திறமை, செயல்பாடுகள் ஆகியவற்றில் மையங்கொண்டிருக்கிறது. விலங்குகளில் ஏறக்குறைய மூளைக்குரிய செயல்பாடுகள் அனைத்தும், இயல்புணர்ச்சி ஞானம் என்றழைக்கப்படுவதில் திட்டமைக்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களின் விஷயத்தில் இது அவ்வாறு இல்லை.—நீதிமொழிகள் 30:24-28.
விலங்குகளின் மூளைகளைப் போல் அல்லாமல், மனித மூளையின் பெரும்பகுதி நிலையான திட்டமைப்புகளும் இல்லாமல் இருக்கிறது. கடவுள் மனிதர்களுக்குத் தெரிவுசெய்யும் சுயாதீனத்தை வழங்கினார். இது அவர்கள் புத்திக்கூர்மைமிக்க தீர்மானங்களை எடுக்கவும், அன்பு, தாராளமனப்பான்மை, சுயநலமற்றத்தன்மை, நீதி, ஞானம் போன்ற உன்னதமான குணங்களைக் காட்டவும் உதவிசெய்கிறது.
கடவுள் மனிதனை அப்படிப்பட்ட மனத் திறமையோடு உண்டாக்கிவிட்டு, சிறந்தவகையில் அதை எப்படிப் பயன்படுத்தமுடியும் என்று எந்தவித வழிநடத்துதலையும் தராமல் விட்டுவிடுவார் என நினைப்பது நியாயமானதா? முதல் மனிதர்களுக்கு கடவுள் நேரடியான வழிநடத்துதலைத் தந்தார். (ஆதியாகமம் 2:15-17, 19; 3:8, 9) மனிதன் பாவத்திற்குள் வீழ்ந்தபின்பும்கூட, யெகோவா மிக முக்கியமாக அவருடைய சொந்த ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளின்மூலம் உண்மையுள்ள ஆண்களையும் பெண்களையும் தொடர்ந்து வழிநடத்தினார். (சங்கீதம் 119:105) இது மனிதர்கள் தங்களுடைய தெரிவுசெய்யும் சுயாதீனத்தை ஞானமாகப் பயன்படுத்துவதன்மூலம் வாழ்க்கையின் அன்றாட பிரச்னைகளை வெற்றியுடன் எதிர்ப்படுவதற்கு அவர்களை அனுமதித்திருக்கிறது.
பைபிளின் தெய்வீக ஆசிரியர்
வழிநடத்துதலின் ஒரு நம்பகமான ஊற்றுமூலமாக பைபிளை ஆக்குவது எது? ஒன்று, சிருஷ்டிகர் மட்டுமே கொடுக்கமுடிந்த செய்தியை நமக்கு அளிக்கிறது. மனித வாழ்க்கை ஆரம்பிக்கப்படுவதற்கு வெகுமுன்பாகவே நடந்த சம்பவங்களின் வரலாற்றை அது குறிப்பிடுகிறது. உதாரணமாக, மனித வாழ்க்கைக்கு உகந்ததாக ஆகும்வரை, பூமி எப்படிப் படிப்படியான நிலைமைகளில் உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றைத் தருகிறது. (ஆதியாகமம், அதிகாரங்கள் 1, 2) இது பைபிளில் 3,000-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பே பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், அது நவீன அறிவியல் கோட்பாடுகளுக்கு ஒத்திசைவாக இருக்கிறது.
பூமி உருண்டையானது என்று மனிதவர்க்கம் பொதுவாக ஏற்றுக்கொள்வதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, பைபிள் அறிவித்தது: “[கடவுள்] உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.” (யோபு 26:7) மேலுமாக, பைபிள் “அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்,” என்று வெளிப்படுத்துகிறது. (ஏசாயா 40:22) சிருஷ்டிகராகிய கடவுள் மட்டுமே இந்த விவரத்தைக் கொடுத்திருக்கமுடியும்.
எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன்காணும் வரம் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக, சிருஷ்டிகர் எதிர்காலத்தைப் பைபிளின் வார்த்தைகள்மூலம் முன்னறிவிக்கிறார். கடவுள் தம்மைப் பற்றி இவ்வாறு எழுதும்படி ஏசாயா தீர்க்கதரிசியைத் தூண்டினார்: “நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்.”—ஏசாயா 46:9, 10.
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டு, ஆச்சரியப்படுத்தும் துல்லியத்துடன் பைபிள் முன்னறிவிக்கமுடியும் என்று அது மெய்ப்பித்திருக்கிறது. உதாரணமாக, மனித வரலாற்றின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின்போது இருக்கும் முக்கிய உலக வல்லரசுகளின் எழுச்சி, வீழ்ச்சி, சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றை அது முன்னறிவித்தது. இந்தக் குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனங்கள் அவை நிறைவேற்றப்படுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டன. சில நிறைவேற்றங்களில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டன. இவ்வாறு, பைபிள் தற்கால சம்பவங்களையும் அவற்றின் முடிவையும் பற்றி திருத்தமாக முன்னறிவிக்கிறது. பைபிள் ஈடுயிணையற்ற ஒன்றாகவும் இருக்கிறது, ஏனென்றால் ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தமாகிய’ அர்மகெதோனில் அபூரண மனித அரசாங்கங்கள் அழிக்கப்படும்போது தப்பிப்பிழைப்பதற்கான வழியை அது குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கரங்களில் இருக்கும் கடவுளுடைய ராஜ்யம் அந்தப் பெரிய சாதனையை நிறைவேற்றும்.—வெளிப்படுத்துதல் 16:14, 16; 17:9-18; தானியேல், அதிகாரங்கள் 2, 8.
எப்போதும் பலனுள்ளது—ஒருபோதும் தீங்கானதல்ல
வெறும் மனித ஞானம் அபூரணமானது; எனவே, மனித ஆலோசனை நல்ல எண்ணங்களோடு கொடுக்கப்பட்டாலும்கூட, எப்போதும் பலனுள்ளதாய் இருப்பதில்லை. பைபிளின் ஆலோசனையைக் குறித்ததில் நிலைமை அதுவல்ல. கடவுள்தாமே சொல்கிறார்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற . . . கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.”—ஏசாயா 48:17, 18.
தெய்வீக வழிநடத்துதல் வாழ்க்கையில் முன்னுரிமைகளை வைப்பதற்கும் மேன்மையானவற்றை பற்றிக்கொள்வதற்கும் நமக்கு உதவிசெய்கிறது. நவீன சமூகம் பொருளாதார முன்னேற்றங்களுக்கும் இலக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறபோதிலும், ‘காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருப்பது’ நமக்கு எவ்வளவு மதிப்பிற்குரியதாக இருக்கக்கூடும் என்று பைபிள் அழுத்திக் காண்பிக்கிறது. “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.” (2 கொரிந்தியர் 4:17, 18) இந்த வழியில், நாம் வாழ்க்கையில் மிகச் சிறந்த இலக்குகளை, அதாவது, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் சம்பந்தமான ஆவிக்குரிய இலக்குகளைக் கொண்டிருக்க உற்சாகப்படுத்தப்படுகிறோம். ஒரு நீதியான புதிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனைப் பெறுவது இறுதியான இலக்காக இருக்கிறது.
ஒரு கிறிஸ்தவர் இந்த மேம்பட்ட இலக்குகளை அடைய தன்னை கடுமையாக ஈடுபடுத்தும்போது, இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையிலும் மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு அவருக்கு பைபிள் ஆலோசனை உதவிசெய்யும். இன்றைய மனித ஞானம், ‘குறைய வேலைசெய்து நிறைய சம்பாதி’ என்ற தத்துவத்தை உற்சாகப்படுத்துகிறது. அதற்கு மாறாக, பைபிள் “சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்” என்று நமக்குச் சொல்கிறது. அப்போஸ்தலன் பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதினார்: “நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.”—நீதிமொழிகள் 10:4; எபிரெயர் 13:18.
குடும்ப ஏற்பாட்டிற்கும் பைபிள் நடைமுறையான ஆலோசனை கொடுக்கிறது. அது குடும்ப ஏற்பாட்டில் கணவன் மனைவி ஆகிய இருவரின் பங்கை குறிப்பாக வரையறுப்பதோடுகூட பிள்ளைகளை வளர்த்து, கற்பிப்பதற்குச் சரியான வழியை நிலைநாட்டுகிறது. அது சொல்கிறது: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; . . . மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள். பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் . . . கீழ்ப்படியுங்கள், . . . பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” சிருஷ்டிகரின் உன்னதமான ஆலோசனையைப் பின்பற்றுவது, குடும்பங்களின் நிலையான தன்மைக்கும் சந்தோஷத்திற்கும் பேரளவில் நன்மைபயக்குகிறது.—எபேசியர் 5:21–6:4.
கடவுளின் வழிநடத்துதலைப் பின்பற்றுவோருக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலம்
மனிதவர்க்கத்தின் பிரச்னைகள் எல்லாவற்றிற்கும் கடவுள் கொண்டிருக்கும் தீர்வை கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தை குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. வெகு சீக்கிரத்தில், யெகோவா தேவன் இன்றைய காரிய ஒழுங்குமுறையை அதன் எல்லா வேதனைகள், அநியாயம், துன்பங்கள் ஆகியவற்றோடு முற்றிலும் நீக்கிப்போடுவார். மேலும் அதை அவருடைய நீதியான புதிய ஒழுங்குமுறையைக்கொண்டு மாற்றீடுசெய்வார். பைபிள் இதை 2 பேதுரு 3:7-10-ல் விவரிக்கிறது. மேலும் தொடர்ந்து வசனம் 13-ல்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” மனித குடும்பத்திற்குக் கொடுக்கப்பட முடிந்த அதிகமதிகமான மிகச் சிறந்த நற்செய்தியாக இது இருக்கிறது. அது துல்லியமாகவே பைபிள் சொல்கிற செய்தியாகும். மேலும் 200-க்கு மேற்பட்ட தேசங்களிலும் கடலின் தீவுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிப்பதுமாகும்.
கடவுளுடைய சித்தம் பூமியெங்கும் செயல்படுத்தப்படும்போது பூமி முழுவதுமுள்ள மனித குடும்பம் யெகோவாவாகிய அதன் சிருஷ்டிகரின் பிரமாதமான வழிநடத்துதலைப் பின்பற்றுவதால் பயன்பெறும். இனிமேலும் வறுமை, குற்றச்செயல், போதைப்பொருள் போன்ற பிரச்னைகள் இருக்கப்போவதில்லை. இனிமேலும் மனிதவர்க்கம் நோய், முதிர்வயது, மரணம் போன்றவற்றால் அல்லல்படப்போவதில்லை. கடவுளுடைய வழிநடத்துதலுக்கு எதிராகக் கலகத்தனம் செய்வதற்கு முன்பாக நம் முதல் பெற்றோர் கொண்டிருந்த பரிபூரணத்துக்கு மனிதக் குடும்பம் உயர்த்தப்படும்.
தெய்வீக வழிநடத்துதலில் தங்களுடைய நம்பிக்கையை வைப்போரின் சந்தோஷகரமான நிலைமையைப் பைபிளின் கடைசிப் புத்தகம் எவ்வளவு ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது! வெளிப்படுத்துதல் 21:4, 5 சொல்கிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.” நம் சிருஷ்டிகர் பின்வருமாறு சொல்வதன்மூலம் அதை உறுதிப்படுத்தினார்: “இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்.” அவர் தொடர்ந்து சொல்கிறார்: “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்.”
இந்த ஆசீர்வாதங்களைப் பெறவேண்டும் என்றால், நம்மிடமிருந்து கடவுள் என்ன எதிர்பார்க்கிறார்? ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற [திருத்தமான, NW] அறிவை அடையவும் வேண்டும்’ என்பது கடவுளுடைய சித்தம் என்று அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார். (1 தீமோத்தேயு 2:4) பைபிளை முற்றுமுழுக்கப் படிப்பதன் மூலமாக அந்தத் திருத்தமான அறிவைப் பெறுவதற்காக யெகோவாவின் சாட்சிகள் உங்களை மனப்பூர்வமாக வரவேற்கின்றனர். கடவுளுடைய சித்தத்தைப் பற்றி விடாமுயற்சியுடன் கற்றுக்கொள்வதன்மூலம், நீங்களும் அனுபவரீதியாக, இந்த இடுக்கண் நிறைந்த காலங்களில் தெய்வீக ஞானமே நம்பத்தக்க ஒரே வழிகாட்டி என்பதை கண்டுணர்ந்துகொள்ளலாம். ஒருபோதும் இல்லாதளவுக்கு அதிகமாக அந்த ஞானத்தைப் பின்தொடரும்படி காலங்களின் அவசரத்தன்மை தேவைப்படுத்துகிறது!