அணு ஆயுத அச்சுறுத்துதல்—நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டது!
ஆரோக்கியமற்ற பயத்தில் வாழ்வதைக் கடவுள் மனிதவர்க்கத்திடமிருந்து விரும்புவது கிடையாது. “நித்தியானந்த தேவ”னாக சமாதானத்தை அனுபவித்து மகிழ்ந்து, பாதுகாப்போடு வாழ—சுருங்கச் சொன்னால், சந்தோஷமாக இருக்கும்படி அவர் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 1:11) அணு ஆயுத அச்சுறுத்துதல் நிறைந்த உலகிலே இது முடியவே முடியாது.
“சமாதானமும் பாதுகாப்பும்”—போலியானது
நிச்சயமாகவே, அணு ஆயுத அச்சுறுத்துதல் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பது தெளிவாக இருக்கவேண்டும். அரசியல், பொருளாதார, சமூக குழப்படியின் மத்தியிலும் பொதுவில் நாடுகள் இன்னும் நம்பிக்கையுள்ள மனப்பான்மை உடையவர்களாக இருக்கின்றனர். ஐமா-வின் சர்வதேச சமாதான ஆண்டாகிய 1986 முதல், அந்த அபாயத்தைக் குறைப்பதற்கான படிப்படியான முயற்சி தெளிவாகத் தெரிகிறது.
அணுமின் விஞ்ஞானிகளின் செய்தித்தாள் (The Bulletin of the Atomic Scientists) கடந்த பத்தாண்டில் அணு ஆயுதப் போரின் சாத்தியத்தை சுட்டிக்காட்டும் அதன் முறையை, அதன் அழிவு நாள் மணிப்பொறியைத் திருப்பிவைத்திருக்கிறது; நள்ளிரவுக்கு முந்தி 3 நிமிடம் இருந்ததை, நள்ளிரவுக்கு முந்தி 17 நிமிடங்களாக பின்னால் திருப்பிவைத்திருக்கிறது. “இரண்டாம் உலகப் போர் முற்றுப்பெற்றது முதற்கொண்டு சமாதான போரை தீர்வுகாண்பதற்கான நம்பிக்கை வேறெந்த ஆண்டைக் காட்டிலும் மிகவும் நம்பத்தகுந்ததாக இருக்கிறது” என்று 1989-ல் ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டது.
சமீப ஆண்டுகளில் அடிக்கடி போர் நடக்கக்கூடிய பகுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது. முழுமையான வெற்றிபெறவில்லையென்றாலும், அதன் வெற்றி பொதுவில் ஒரு நம்பிக்கையான மனப்பான்மை கொண்டிருப்பதற்கு போதுமானதாக இருந்திருக்கிறது. கூடுதலான புதிய, வெற்றிகரமான முன்னேற்றங்களைப் பெரும்பாலும் எதிர்காலம் கொண்டுவரும். ‘சமாதானம், பாதுகாப்புக்கான’ கூக்குரல்கள் ஒருவேளை மிகுந்து, இன்னும் வலுப்படும். நன்னம்பிக்கையையுங்கூட அவை பெறக்கூடியவையாக இருக்கும்.
ஆனால் உஷாராயிருங்கள்! “சமாதானமும் [பாதுகாப்பும், NW] உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை,” என்று பைபிள் எச்சரிக்கிறது. இப்படியாக, ‘சமாதானம், பாதுகாப்புக்கான’ கூக்குரல்கள் “[தூய்மைக்கேடு, அணு ஆயுத தூய்மைக்கேட்டினாலும் இதர விதத்திலும்] பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்”கான கடவுளுடைய காலத்தைச் சுட்டிக்காட்டும்.—1 தெசலோனிக்கேயர் 5:3, 4; வெளிப்படுத்துதல் 11:18.
‘சமாதானத்தையும் பாதுகாப்பையும்’ நாடுகள் அடைவார்கள் என்று பைபிள் சொல்லவில்லை. அதைக் குறித்து தனிச்சிறப்பான கருத்தில் பேசிக்கொண்டு இருப்பார்கள் என்பது தெளிவாகிறது; முன்பு உணராத அளவுக்கு நன்னம்பிக்கையையும் திடநம்பிக்கையையும் அவர்கள் வெளிக்காட்டுவார்கள். சமாதானம், பாதுகாப்பை அடைவதற்கான வாய்ப்புகள் முன்னொருக்காலும் இருந்ததைவிட சமீபமாயிருப்பதாக தோன்றும். அணு ஆயுத அச்சுறுத்துதல் தொடர்ந்திருந்தாலும், நாடுகள் போலித்தனமான பாதுகாப்பு உணர்ச்சியினால் மயங்கிக்கிடப்பார்கள்.
என்றபோதிலும், உண்மை கிறிஸ்தவர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள். பேராவலுடன், அவர்கள் மனித சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் அப்பால் சிறந்ததொன்றை எதிர்பார்ப்பார்கள்!
சமாதானமும் பாதுகாப்பும்—உண்மையானது
சங்கீதம் 4:8-ற்கு இணங்க, உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் யெகோவா தேவனுடைய ஏற்பாட்டிற்குள்ளேயே காணப்படும்: “சமாதானத்தோடே படுத்துக் கொண்டு, நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.” யெகோவாவின் ராஜ்ய ஏற்பாட்டு அமைப்பிற்கு புறம்பே வெளிப்படுத்தப்படும் ‘சமாதானம், பாதுகாப்புக்கான’ எந்தவொரு கூக்குரலும் போலித்தனமாகவே இருக்கக்கூடும். நிரந்தர பிரயோஜனமாயிருக்கும் எதையுமே அதனால் அடைய முடியாது.
கிறிஸ்துவின் கீழிருக்கப்போகும் கடவுளுடைய ராஜ்யம் அரைகுறையான தீர்வுகளோடு திருப்தியாயிருக்காது. கடவுளுடைய ஆட்சி அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைப்பதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்யும்; அது அவற்றையும் மற்ற போர்க் கருவிகளையும் முற்றிலுமாக நீக்கிப்போடும். சங்கீதம் 46:9 வாக்களிக்கிறது: “அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.”
அதேவிதமாக, சரியாக இயங்காத அணுக்கரு உலைகளாலோ கதிரியக்க கழிசல்களாலோ உண்டாகும் அணு ஆயுத அச்சுறுத்துதல்கள் கடந்தகால காரியங்களாகிவிட்டிருக்கும். இல்லையென்றால், இந்த வார்த்தைகள் உண்மையாயிருக்காது: “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்தி மரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.” கடவுள் பொய் சொல்லக்கூடாதவர். அவருடைய வார்த்தைகள்மீது சந்தேகப்பட நமக்கு எந்தக் காரணமும் இல்லை.—மீகா 4:4; தீத்து 1:3.
அணு ஆயுத அச்சுறுத்துதல் நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டிருக்கும் உலகில் வாழும் எதிர்பார்ப்பை நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்களா? அனுபவித்து மகிழலாம், ஏனெனில் கடவுளின் வார்த்தை அதற்கான தேவைகளைத் தெளிவாக வரையறுக்கிறது. அவற்றைக் குறித்து கற்றுக்கொள்வதன் மூலமும் அவற்றிற்கிசைய வாழ்வதன் மூலமும், துன்பத்திலிருந்து விடுபட்டு பெருமூச்சோடு: “அணு ஆயுத அச்சுறுத்துதல்—நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டது!” என்று ஒரு நாள் சந்தோஷத்துடன் சொல்ல முடியும்.
[பக்கம் 7-ன் படம்]
எந்தவொரு அணு ஆயுத அச்சுறுத்துதல்களுமிராமல், கடவுளுடைய புதிய உலகில் சமாதானம் மேலோங்கியிருக்கும்
[படத்திற்கான நன்றி]
M. Thonig/H. Armstrong Roberts
[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo