நிர்வாகக் குழுவில் கூடுதலான சேர்க்கை
யெகோவாவின் சாட்சிகளின் நிர்வாகக் குழுவினுடைய அலுவலக ஊழியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், கூடுதலான ஓர் உறுப்பினர் ஜூலை 1, 1994 முதற்கொண்டு சேவிக்கும்படி, இப்பொழுது சேவித்துக்கொண்டிருக்கும் 11 மூப்பர்களோடுகூட சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தப் புதிய உறுப்பினர் கெரிட் லோஷ் ஆவர்.
சகோதரர் லோஷ் நவம்பர் 1, 1961-ல் முழுநேர ஊழியத்தில் உட்பட்டார், உவாட்ச்டவர் பைபிள் பள்ளியாகிய கிலியட்டின் 41-வது வகுப்பில் பட்டம் பெற்றவர். 1963-லிருந்து 1976 வரையாக ஆஸ்திரியாவில் வட்டார மற்றும் மாவட்ட ஊழியத்தில் சேவித்தார். 1967-ல் மணம் செய்தார், அவரும் அவருடைய மனைவி மெரீட்டும் பின்னால் 14 ஆண்டுகள் வியன்னாவிலுள்ள ஆஸ்திரியா பெத்தேல் குடும்பத்தின் உறுப்பினராக சேவித்தனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள், நியூ யார்க், புரூக்லினிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கே சகோதரன் லோஷ் செயல்நிறைவேற்ற ஊழியத்துறைகளிலும் ஊழியக் கமிட்டிக்கு ஓர் உதவியாளராகவும் சேவித்திருக்கிறார். ஐரோப்பிய பிராந்தியத்தில் அவருக்குள்ள பல்வேறு அனுபவத்துடனும் ஜெர்மன், ஆங்கிலம், ரொமேனியன் மற்றும் இத்தாலியன் மொழியறிவுடனும், அவர் நிர்வாகக் குழுவின் ஊழியத்துக்கு மதிப்பு வாய்ந்த உதவியாக இருப்பார்.