20-ம் நூற்றாண்டு கடவுள் மறுப்பு
“மனிதர்கள் கடவுள் இல்லை என்ற எண்ணத்துக்கு அடிபணிந்து அதன் விளைவைப் பொருட்படுத்தாமலும் கடவுளைக் கருத்தில் கொள்ளாமலும் தங்களுடைய வாழ்க்கையைச் சுதந்தரமாக ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.”—கடவுள் மீதான நூறு ஆண்டுகால விவாதம்—நவீன நாத்திகத்தின் மூலங்கள்.
முதலில் கண்கவருவதாக இருந்தபோதிலும், உயரமான ஒரு மரம் முடிவில் சர்வசாதாரணமான ஒன்றாகவே ஆகிவிடுகிறது. அதன் தோற்றம் பழக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது; அதன் உயரம் இனிமேலும் பிரமிக்கச் செய்வதாக இல்லை.
நாத்திகத்தின் விஷயமும் இவ்வாறே இருக்கிறது. 19-வது நூற்றாண்டில் அது அதிகமான விவாதத்தைத் தூண்டியிருந்தபோதிலும், கடவுள் இருப்பதை மறுப்பது இன்று அதிர்ச்சியளிப்பதாகவும் அமைதிக்குலைப்பதாகவும் இல்லை. கடவுள் நம்பிக்கையோடு நாத்திகமும் கலவரமில்லாமல் ஒரே காலத்தில் காணப்படுவதை சகிப்புத்தன்மையின் சகாப்தம் அனுமதித்துள்ளது.
இது பெரும்பாலான மக்கள் நேரடியாக கடவுளை மறுக்கின்றனர் என்பதை அர்த்தப்படுத்துவது கிடையாது; மாறாக, அமெரிக்காக்கள், ஐரோப்பா, ஆசியா முழுவதிலுமாக உள்ள 11 தேசங்களிலிருந்து வரும் வாக்கெடுப்பு முடிவுகள், சராசரியாக 2 சதவீதத்துக்கும் சற்று அதிகமானவர்களே நாத்திகர்களாக உரிமைபாராட்டுவதை வெளிப்படுத்துகிறது. இருந்தபோதிலும், நாத்திக ஆவி—கடவுள் இருக்கிறார் என்பதை நம்பும் அநேக ஆட்களின் மத்தியிலும்கூட மேலோங்கியிருக்கிறது. இது எவ்வாறு இருக்கக்கூடும்?
கடவுளுடைய அதிகாரத்தை மறுத்தல்
“சில சமயங்களில் நாத்திகம் வெறுமனே கடவுளை நடைமுறையிலிருந்து தள்ளிவிடுவதை அல்லது அசட்டைசெய்வதையே குறிக்கிறது,” என்பதாக தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா குறிப்பிடுகிறது. இந்தக் காரணத்துக்காகவே, புதிய சுருக்கமான ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி “நாத்திகர்” என்பதற்கு பின்வரும் இரண்டாவது சொற்பொருள் விளக்கத்தை அளிக்கிறது: “ஒழுக்க சம்பந்தமாக கடவுளை மறுதலிக்கும் ஒருவர்; கடவுளற்ற ஒரு நபர்.”—எங்களால் நேரெழுத்துக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன.
ஆம், நாத்திகம், கடவுள் இருப்பதையோ அல்லது அவருடைய அதிகாரத்தையோ அல்லது இரண்டையுமே மறுப்பதை உட்படுத்தலாம். பைபிள் தீத்து 1:16-ல் இந்த நாத்திக ஆவியை குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது: “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்.”—சங்கீதம் 14:1-ஐ ஒப்பிடவும்.
கடவுளுடைய அதிகாரத்தின் இத்தகைய நிராகரிப்பின் ஆரம்பத்தை முதல் மானிட ஜோடிவரையாக பின்னோக்கி எடுத்துச் செல்லமுடியும். கடவுள் இருப்பதை ஏவாள் ஒப்புக்கொண்டாள்; என்றாலும், அவள் “நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல்” இருக்க விரும்பினாள். அவள் என்ன செய்யவேண்டும் என்பதை தானாகவே தீர்மானித்து தன்னுடைய சொந்த ஒழுக்க சட்டத் தொகுப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே குறிப்பான எண்ணமாக இருந்தது. கடவுளுடைய அதிகாரத்தை ஏற்க மறுப்பதில் பின்னால் ஆதாம் ஏவாளைச் சேர்ந்துகொண்டான்.—ஆதியாகமம் 3:5, 6.
இந்த மனநிலை இன்று வியாபித்திருக்கிறதா? ஆம், சுதந்திர நாட்டத்தில் ஒரு தந்திரமான நாத்திகம் வெளிப்படுத்தப்படுகிறது. “மக்கள் இன்று கடவுளுடைய பார்வையின்கீழ் வாழ்வதில் சலிப்படைந்துவிட்டனர்,” என்பதாக கடவுள் மீதான நூறு ஆண்டுகால விவாதம்—நவீன நாத்திகத்தின் மூலங்கள் (ஆங்கிலம்) புத்தகம் குறிப்பிடுகிறது. “அவர்கள் . . . சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள்.” பைபிளின் ஒழுக்க சம்பந்தமான சட்டத்தொகுப்பு நடைமுறைக்கு ஒவ்வாதது, நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராதது என்பதாக தள்ளிவிடப்படுகிறது. அநேக ஆட்களின் சிந்தனை எதிர்த்து நின்று பின்வருமாறு அறிவித்த எகிப்திய பார்வோனுடையதைப் போன்றே இருக்கிறது: ‘நான் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதற்கு யெகோவா யார்? நான் யெகோவாவை அறியேன்.’ அவன் யெகோவாவின் அதிகாரத்தை தள்ளிவிட்டான்.—யாத்திராகமம் 5:2, NW.
கிறிஸ்தவமண்டலத்தின் கடவுள் மறுப்பு
தூய்மையான பைபிள் சத்தியங்களின் இடத்தில் மனிதர் உண்டுபண்ணியிருக்கும் பாரம்பரியங்களை வைத்திருக்கும் கிறிஸ்தவமண்டல குருமாரிடமிருந்தே கடவுளுடைய அதிகாரத்திற்கு அதிக அதிர்ச்சியூட்டும் மறுப்பு வருகிறது. (மத்தேயு 15:9-ஐ ஒப்பிடவும்.) மேலுமாக, அவர்கள் 20-ம் நூற்றாண்டின் கொடூரமான போர்களை ஆதரித்து, இவ்விதமாக உண்மையான அன்பைக் காட்டும்படியான பைபிள் கட்டளையை நிராகரித்துவிட்டிருக்கிறார்கள்.—யோவான் 13:35.
கடவுளுடைய ஒழுக்க தராதரங்களுக்குக் கவனம் செலுத்த மறுப்பதன் மூலமாகவும்கூட மதகுருமார் கடவுளை மறுதலித்திருக்கிறார்கள். பிள்ளைகளோடு முறைதகாப் புணர்ச்சி கொண்டதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட மதகுருமாருக்கு எதிராக ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரப்படும் வழக்குகளிலிருந்து இதைக் காணமுடிகிறது. கிறிஸ்தவமண்டலத்திலுள்ள நிலைமை பூர்வ இஸ்ரவேலிலும் யூதாவிலுமிருந்த நிலைமையைப் போன்றிருக்கிறது. “தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது,” என்பதாக எசேக்கியேல் தீர்க்கதரிசிக்குச் சொல்லப்பட்டது. “கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.” (ஒப்பிடவும்: எசேக்கியேல் 9:9; ஏசாயா 29:15.) அநேகர் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளை முற்றிலும் உதறித்தள்ளிவிட்டிருப்பதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆனால் கடவுளில் நம்பிக்கையை அவர்கள் உதறித்தள்ளிவிட வேண்டுமா?
நாத்திகத்துக்கு நியாயமான காரணங்களா?
மதத்தின் மாய்மாலத்தை அவர்கள் கவனித்திருக்கிறார்களோ இல்லையோ, அநேக நாத்திகர்களால் கடவுள் நம்பிக்கையையும் உலகிலுள்ள துன்பங்களையும் இணக்குவிக்கவே முடிவதில்லை. சீமோன் டி பிவாய்ர் ஒரு சமயம் இவ்வாறு சொன்னார்: “உலகிலுள்ள எல்லா முரண்பாடுகளும் சுமத்தப்பட்ட ஒரு படைப்பாளரைவிட படைப்பாளர் இல்லாத ஓர் உலகை கற்பனைசெய்வதே எனக்கு சுலபமாக இருந்தது.”
உலகின் அநீதிகள்—மாய்மாலமான மதவாதிகள் பின்நின்று தூண்டியது உட்பட—கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கின்றனவா? பின்வருவதைச் சிந்தித்துப் பாருங்கள்: மிரட்டுவதற்கு, காயப்படுத்துவதற்கு அல்லது அப்பாவியான ஒரு நபரைக் கொலைச் செய்வதற்கும்கூட கத்தி ஒன்று பயன்படுத்தப்பட்டால், கத்திக்கு வடிவமைப்பாளர் ஒருவர் இல்லை என்பதை இது நிரூபிக்கிறதா? மாறாக அந்தப் பொருள் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதை அல்லவா அது நிரூபிக்கிறது? அதேவிதமாகவே, பெருமளவான மனித துயரம் மனிதர்கள் கடவுள் கொடுத்த திறமைகளையும் பூமியைத்தானேயும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பதற்கே அத்தாட்சியை அளிக்கிறது.
என்றபோதிலும், சிலர் நாம் அவரைப் பார்க்க முடியாத காரணத்தால் கடவுளை நம்புவது, பகுத்தறிவுக்குப் பொருத்தமற்றது என்பதாக நினைக்கிறார்கள். ஆனால் காற்று, ஒலி அலைகள் மற்றும் நறுமணங்களைப் பற்றி என்ன? இந்தக் காரியங்களில் எதையும் நம்மால் பார்க்க முடியாது, என்றாலும் அவை இருப்பதை நாம் அறிவோம். நம்முடைய நுரையீரல்கள், காதுகள் மற்றும் மூக்குகளால் இவற்றைத் தெரிந்துகொள்கிறோம். நிச்சயமாகவே, அத்தாட்சி இருக்குமேயானால் காணப்பட முடியாதவற்றை நாம் நம்புகிறோம்.
வெளிப்புற அத்தாட்சியை—எலக்ட்ரான், புரோட்டான், அணுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சிக்கலான மூளை உட்பட—ஆழ்ந்து யோசித்தப் பிறகு, இயற்கை அறிவியல் அறிஞர் இர்விங் வில்லியம் நாக்பிளாக், இவ்விதமாகச் சொல்ல தூண்டப்பட்டார்: “நான் கடவுளை நம்புகிறேன், ஏனென்றால் காரியங்கள் இயங்கிக்கொண்டிருப்பதற்குக் கடவுள் இருப்பதுதானே பகுத்தறிவுக்குப் பொருத்தமான ஒரே விளக்கமாக எனக்கு இருக்கிறது.” (சங்கீதம் 104:24-ஐ ஒப்பிடவும்.) அதேவிதமாகவே, உடலியல் அறிஞர் மார்லின் பக்ஸ் க்ரிடர் சொல்கிறார்: “சாதாரணமான ஒரு மனிதனாகவும், அறிவியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு மனிதனாகவும், கடவுள் இருப்பதைப் பற்றி எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது.”
கடவுள் இருப்பதை நம்புகிறவர்கள் இவர்கள் மாத்திரமல்ல. இயற்பியல் பேராசிரியர் ஹென்றி மார்கனோவின் பிரகாரம், “நீங்கள் மிக உயர்ந்த அறிவியல் அறிஞர்களை எடுத்துக்கொள்வீர்களானால், அவர்களில் வெகு சில நாத்திகர்களையே நீங்கள் பார்க்கிறீர்கள்.” அறிவியல் முன்னேற்றங்களோ மதத்தின் தோல்வியோ ஒரு படைப்பாளரில் நம்பிக்கையை உதறித்தள்ளுவதற்கு காரணமாக இருக்கக்கூடாது. ஏன் என்று நாம் ஆராயலாம்.
மெய் மதத்தின் மாறுபட்ட தன்மை
ஐக்கிய மாகாணங்களின் ஜனாதிபதி தாமஸ் ஜெஃப்பர்சன் 1803-ல் எழுதினார்: “கிறிஸ்தவத்தின் ஊழல்களை நான் நிச்சயமாகவே எதிர்க்கிறேன்; ஆனால் இயேசுவினுடைய உண்மையான போதனைகளை அல்ல.” ஆம், கிறிஸ்தவமண்டலத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. கிறிஸ்தவமண்டலத்தின் அநேக தனிக்கோட்பாடுகள் மனிதர்களின் பாரம்பரியங்களை ஆதாரமாக கொண்டுள்ளன. எதிர்மாறாக, மெய்க் கிறிஸ்தவமானது தன்னுடைய நம்பிக்கைகளுக்கு முற்றிலும் பைபிளையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே, பவுல் முதல் நூற்றாண்டு கொலோசெயர்களுக்கு, அவர்கள் “திருத்தமான அறிவு,” “ஞானம்,” மற்றும் “ஆவிக்குரிய விவேகம்” ஆகியவற்றை முயன்று பெறவேண்டும் என்பதாக எழுதினார்.—கொலோசெயர் 1:9, 10.
அதைத்தான் நாம் மெய்க் கிறிஸ்தவர்களிடமிருந்து எதிர்பார்க்க வேண்டும், ஏனென்றால், இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு, “சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்,” என்று கட்டளையிட்டிருக்கிறார்.—மத்தேயு 28:19, 20.
இன்று, யெகோவாவின் சாட்சிகள் இந்தக் கட்டளையை உலகம் முழுவதிலும் 231 நாடுகளில் நிறைவேற்றிவருகிறார்கள். அவர்கள் பைபிளை 12 மொழிகளில் மொழிபெயர்த்து 7,40,00,000 பிரதிகளை அச்சடித்திருக்கிறார்கள். மேலுமாக, ஒரு வீட்டு பைபிள் படிப்பு திட்டத்தின் மூலமாக, அவர்கள் தற்போது 45,00,000-க்கும் மேற்பட்ட ஆட்களுக்கு ‘இயேசு கற்பித்த எல்லா காரியங்களையும் கைக்கொள்வதற்கு,’ உதவிசெய்து வருகிறார்கள்.
இந்தக் கல்வி சம்பந்தமான திட்டம் வெகு தூரம் சென்றெட்டும் விளைவுகளைக் கொண்டுவந்திருக்கிறது. அது உண்மையான அறிவொளியைக் கொண்டு வருகிறது, ஏனென்றால் அது மனிதனின் எண்ணங்களை அல்ல ஆனால் கடவுளின் ஞானத்தை ஆதாரமாக கொண்டுள்ளது. (நீதிமொழிகள் 4:18) மேலுமாக, மனித அறிவொளி ஒருபோதும் செய்ய முடியாத ஒரு காரியத்தைச் செய்வதற்கு—ஒருவருக்கொருவர் மெய்யான அன்பை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவிசெய்யும் புதிய ஆளுமையைத் தரித்துக்கொள்வதற்கு—எல்லா தேசங்களிலும் இனங்களிலுமுள்ள ஆட்களுக்கு உதவிசெய்து வருகிறது.—கொலோசெயர் 3:9, 10.
மெய் வணக்கம் நம்முடைய 20-ம் நூற்றாண்டில் வெற்றிசிறக்கிறது. அது கடவுளை—அவர் இருப்பதையோ அவருடைய அதிகாரத்தையோ—மறுப்பதில்லை. இராஜ்ய மன்றங்கள் ஒன்றில் யெகோவாவின் சாட்சிகளைச் சந்திப்பதன் மூலம் இதை நீங்களே பார்ப்பதற்கு உங்களை அழைக்கிறோம்.
[பக்கம் 6-ன் பெட்டி]
நாத்திகத்தின் வேர்களைப் பலப்படுத்துதல்
18-வது நூற்றாண்டின் நடுப்பகுதியில், தத்துவஞானி டெனி டிடராட்டிடம் ஒரே புத்தகத்தைக்கொண்ட என்ஸைக்ளோப்பீடியாவை ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கும் வேலை ஒப்படைக்கப்பட்டது. என்றபோதிலும், அவரை வேலைக்கு அமர்த்தியவரின் எதிர்பார்ப்புகளை அவர் வெகுவாக விஞ்சிவிட்டார். மூன்று பத்தாண்டுகளாக அவருடைய ஆன்ஸிக்ளோப்பேடி-ஐ தொகுப்பதில் அவர் செலவிட்டார், 28 புத்தகங்களைக் கொண்ட இந்தப் படைப்பு அவர் வாழ்ந்த காலத்திலிருந்த மக்களின் மேலோங்கிய சிந்தையை வெகுவாக கவர்ந்தது.
அந்த ஆன்ஸிக்ளோப்பேடி பயனுள்ள தகவலை அதிகமாகக் கொண்டிருந்தபோதிலும், மனித ஞானத்தையே அழுத்திக் காண்பித்தது. மனிதனின் புகழ்பெற்ற சகாப்தங்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகங்களின் தொகுப்பின்படி, அது “மனிதன் விசுவாசத்துக்குப் பதிலாக புத்திக்கூர்மையைத் தன்னுடைய வழிநடத்தும் நியமமாக கொண்டிருந்தால் அவன் தன்னுடைய வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்ற [தத்துவஞானியின்] தீவிரமான கொள்கையைத் துணிந்து உபதேசித்தது.” குறிப்பிடத்தக்க விதமாக கடவுளைப் பற்றிய குறிப்பு எதுவும் அங்கு இல்லை. “மதம் என்பது மனிதர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் அல்ல என்பதை அவர்கள் தெரிந்துகொண்டிருக்கும் தலைப்புகளிலிருந்து பதிப்பாசிரியர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்,” என்பதாக நவீன மரபுரிமை (ஆங்கிலம்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. சர்ச் ஆன்ஸிக்ளோப்பேடி வெளியிடுவதை தடுக்க முற்பட்டது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. சட்டத்துறையின் தலைவர், அதை அரசியலுக்கும் ஒழுக்க நெறிக்கும் மதத்துக்கும் விரோதமானது என்பதாக பலமாக குற்றஞ்சாட்டினார்.
அதற்கு விரோதிகள் இருந்தபோதிலும், டிடராட்டின் ஆன்ஸிக்ளோப்பேடி-ஐ சுமார் 4,000 நபர்கள் கேட்டிருந்தார்கள்—அதனுடைய அதிகமான விலையை நோக்குமிடத்து பிரமிக்க வைக்கும் ஓர் எண்ணிக்கை. மறைவாக இயங்கிய இந்த நாத்திகப் போக்கு கடவுள் மறுப்பாக ஒருநாள் முழு வளர்ச்சியடைவது நிச்சயமாக இருந்தது.