உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 2/15 பக். 3-4
  • சொல்லிமாளாத துன்பங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சொல்லிமாளாத துன்பங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘வருத்தமும் சஞ்சலமும்’ நிறைந்துள்ளது
  • கடவுளுடைய நோக்கத்தின் பாகமா?
  • இனி துன்பமே இல்லாமல் போகையில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • பைபிள் என்ன சொல்கிறது?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • பகுதி 1—கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?
    கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?
  • ஏன் இவ்வளவு துன்பம்?
    விழித்தெழு!—2012
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 2/15 பக். 3-4

சொல்லிமாளாத துன்பங்கள்

“ஏன் இந்தப் பயங்கரமான . . . எல்லா தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்தமான துன்பங்கள்? கடவுள் அனைத்து நோக்கங்களின் உருவாகவே இருப்பதாக நம்பப்படுகிறார்; இருந்தாலும் பொருத்தமே இல்லாத அநேக காரியங்களும், சொல்லிமாளாத அளவுக்கு அர்த்தமற்ற துன்பங்களும் மடத்தனமான பாவமும் இந்த உலகில் காணப்படுகின்றன. இந்தக் கடவுள் ஒருவேளை நயாட்ஷி குற்றஞ்சாட்டும் விதமாக, ஒரு கொடுங்கோலராக, வஞ்சகராக, மோசக்காரராக, கொலையாளியாக இருக்கிறாரா?”—ஒரு கிறிஸ்தவனாக இருப்பதில் (ஆங்கிலம்), ஹான்ஸ் கங் எழுதியது.

அந்தக் கத்தோலிக்க இறையியலர் ஹான்ஸ் கங், வெறுமனே அநேகரை குழப்பமடையச் செய்யும் ஒரு பிரச்சினையை முன்வைக்கிறார் என்பதை நீங்கள் காணலாம்—எல்லா வல்லமையும் அன்புமுள்ள ஒரு கடவுள் ஏன் இவ்வளவு துன்பங்களை அனுமதிக்கிறார்? மக்கள் இப்படிப்பட்ட ஒரு கேள்வியைக் கேட்பதை நீங்கள் கேட்டதில்லையா? “முடிவில்லாத இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீர் வெள்ளம், துயரம், துக்கம், பயம், தனிமை மற்றும் மரணம்” என்பதாக கங் விவரிப்பதைக் குறித்து இரக்க உணர்வுள்ள எவருமே விசனப்படுவர். அது, உண்மையில் பெருகிவரும் ஒரு பிரவாகம் போல, திகிலும் மனவேதனையுமான வெள்ளப்பெருக்காக வரலாறு முழுவதிலும் லட்சக்கணக்கான ஆட்களின் வாழ்க்கையை சீரழிப்பதாக உள்ளது.—யோபு 14:1.

‘வருத்தமும் சஞ்சலமும்’ நிறைந்துள்ளது

போரினால் விளையும் துன்பத்தைப்பற்றி, நேரடியாக அதற்கு பலியாகிறவர் படும் வேதனை மட்டுமல்ல, ஆனால் துக்கித்துக்கொண்டிருக்கும்படியாக அவர்கள் விட்டுச்செல்லும் சிறு பிள்ளைகளான பலியாட்களின் பெற்றோர்களும் உறவினர்களும் குரூரமாக நடத்தப்பட்ட மற்றவர்களும் உணரும் வேதனையைப் பற்றி எண்ணிப்பாருங்கள். “கடந்த 10 வருடங்களின்போது, ஆயுதந்தரித்து செய்யப்படும் சண்டைகளில் 15 லட்சம் பிள்ளைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்,” என்பதாக அண்மையில் செஞ்சிலுவை சங்கம் சொன்னது. ருவாண்டாவில் 1994-ல் “நூறாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் குரூரமாகவும் திட்டமிட்டும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்,” என்பதாக செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு செய்கிறது.

பிள்ளைகளிடம் முறைகேடாக பாலுணர்ச்சியோடு நடந்துகொள்பவர்கள் உண்டுபண்ணும் வேதனையையும்கூட நாம் கவனியாமல் விடக்கூடாது. பிள்ளைகள் காப்பக பணியாளர் ஒருவரால் பலாத்காரப்படுத்தப்பட்டபின் தன் மகன் தற்கொலை செய்துகொண்டபோது துயரத்திலிருந்த ஒரு தாய் இவ்விதமாகச் சொன்னார்: “என் மகனை பலாத்காரம் செய்த அந்த மனிதன் . . . நன்றாக திட்டமிட்டு, நினைத்துப்பார்க்கக்கூடிய மிகத் தகாத வழியில் அவனையும் இன்னும் அநேக மற்ற பையன்களையும் அழித்துவிட்டான்.” பிரிட்டனில் “தண்டனையில்லாமலேயே 25 ஆண்டுகளாக கடத்திச்சென்று, கற்பழித்து, சித்திரவதை செய்து கொலை செய்ததற்காக” பிடிபட்டவர்களைப் போல உணர்ச்சிகளற்ற கொலைக்காரர்களுக்கு அல்லது அடுக்கடுக்காக பல கொலைகளைச் செய்பவர்களுக்குப் பலியாகும் ஆட்கள் படுகிற வேதனையின் கொடுங்கனவைப் பற்றி என்ன? வரலாறு முழுவதிலும் ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் ஏற்படுத்தியிருக்கும் வேதனைக்கும் துன்பத்துக்கும் முடிவே இல்லாதது போல தோன்றுகிறது.—பிரசங்கி 4:1-3.

அதோடுகூட உணர்ச்சிப்பூர்வமான மற்றும் சரீர சுகவீனங்களினால் உண்டாகும் துன்பமும் அன்பானவர்கள் அகால மரணமடைகையில் குடும்பங்களை நாசமாக்கும் துக்கத்தின் பயங்கரமான வேதனையும் உள்ளது. பஞ்சத்துக்கு அல்லது இயற்கையின் பேரழிவுகள் என்பதாக அழைக்கப்படுகிறவற்றிற்கு பலியாகிறவர்களால் உணரப்படும் வேதனையும் இருக்கிறது. நமது 70 அல்லது 80 ஆண்டுகள் ‘வருத்தமும் சஞ்சலமும்’ நிறைந்ததாய் உள்ளன என்ற மோசேயின் கூற்றை வெகுசிலரே எதிர்த்து வாதாடுவர்.—சங்கீதம் 90:10.

கடவுளுடைய நோக்கத்தின் பாகமா?

சிலர் சொல்லியிருப்பது போல இந்த இடைவிடாத துன்பம் கடவுளுடைய புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு திட்டத்தின் பாகமாக இருக்குமா? ‘மறுவுலகில்’ வாழ்க்கையை முழுமையாக உணர்ந்துகொள்வதற்கு நாம் இப்பொழுது துன்பமனுபவிப்பது அவசியமா? பிரெஞ்சு தத்துவஞானி டெல்ஹார் டி  சார்டின் நம்பியது போல “உயிர்வாழ்ந்து ஆவியாக மாறும்பொருட்டு கொன்று அழுகும்படியாகச் செய்யும் துன்பம் மனிதனுக்கு அவசியம்” என்பது உண்மையா? (தி ரிலிஜன் ஆஃப் டெய்ஹார்ட் டி சார்டின்; நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) நிச்சயமாகவே இல்லை!

கரிசனையுள்ள ஒரு வடிவமைப்பாளர், வேண்டுமென்றே கொடிதான ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிட்டு, அதன் பாதிப்புகளிலிருந்து மக்களை விடுவிக்கையில் இரக்கமுள்ளவராக இருப்பதாக உரிமைபாராட்டுவாரா? நிச்சயமாகவே மாட்டார்! அன்புள்ள ஒரு கடவுள் ஏன் அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்யப்போகிறார்? ஆகவே கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? துன்பம் எப்போதாவது முடிவுக்கு வருமா? அடுத்தக் கட்டுரை இந்தக் கேள்விகளைக் கலந்தாலோசிக்கும்.

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

P. Almasy எடுத்த WHO படம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்