உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 5/15 பக். 14-15
  • ‘இதோ! ஒரு திரள் கூட்டம்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘இதோ! ஒரு திரள் கூட்டம்’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நீண்ட கால கேள்வி
  • அதிகமான ஒளிக்கதிர்கள்
  • மின்னிய அறிவொளி
  • குறிப்பிடத்தக்க கூட்டத்தார்
  • ஒரு மிகப் பெரிய திரள் கூட்டம்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • வேறே ஆடுகளைச் சேர்ந்த திரள் கூட்டமான மக்கள் கடவுளையும் கிறிஸ்துவையும் புகழ்கிறார்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • ‘திரள் கூட்டமான மக்கள்!’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • கடவுளுடைய அரசாங்கத்தின் மீது ராஜா ஒளியைப் பிரகாசிக்கச் செய்கிறார்
    கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 5/15 பக். 14-15

தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைத்திருங்கள்

‘இதோ! ஒரு திரள் கூட்டம்’

அநேக ஆண்டுகளுக்கு அந்தக் கூட்டத்தார் யார் என்ற கேள்வி யெகோவாவின் ஊழியர்களுக்கு புரியா புதிராகவே இருந்து வந்தது. இதற்கு பைபிளில் விடை காண வெகு காலமாக முயற்சி செய்யப்பட்டு வந்தது. இந்த விஷயம் பலவாறு விவாதிக்கப்பட்டும் வந்தது. ஆனால் கடைசியாக 1935-⁠ம் ஆண்டில் அதற்கான பதில் பைபிளில் கண்டுபிடிக்கப்பட்ட போது வாஷிங்டன், டி.சி.-யில் நடைபெற்ற மாநாட்டிற்கு வந்திருந்தவர்களை அது வெகுவாக உற்சாகமடைய செய்தது.

புரியா புதிராக இருந்த அந்தக் கேள்வி: வெளிப்படுத்துதல் 7:9-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘திரளான கூட்டமாகிய ஜனங்கள்’ (தமிழ் யூனியன் பைபிள்) அல்லது ‘திரள் கூட்டத்தார்’ (NW) யார்? இந்தத் தொகுதியைச் சேர்ந்த விசுவாசிகள் பரலோகத்தில் வாழ்வார்களா?

நீண்ட கால கேள்வி

அப்போஸ்தலன் யோவானின் நாள் முதற்கொண்டு நம்முடைய நாள் வரை, இந்தத் ‘திரள் கூட்டத்தார்’ யார் என்ற கேள்வி கிறிஸ்தவர்களுக்கு புரியா புதிராகவே இருந்தது. திரள் கூட்டத்தார் இரண்டாந்தர பரலோக வகுப்பாராக, பைபிள் சத்தியத்தை அறிந்திருந்தும் அதை பரப்புவதற்கு அதிக முயற்சி எடுக்காதவர்களாக இருக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் பைபிள் மாணாக்கர்கள் நினைத்தனர்.

ஆனால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடு கூட்டுறவு வைத்திருந்த சிலர் பிரசங்க வேலையை மிக ஆர்வத்தோடு செய்து வருவது தெரிந்தது. இவர்களுக்கு பரலோகத்துக்குச் செல்லும் ஆசையே இல்லாதிருந்தது. “இப்பொழுது வாழும் லட்சக்கணக்கானோர் மரிக்கவே மாட்டார்கள்” என்ற தலைப்பில் கொடுக்கப்பட்ட பொதுப் பேச்சில் சொல்லப்பட்டதற்கு இசைவாக இவர்களது நம்பிக்கை இருந்தது. இந்தப் பேச்சை யெகோவாவின் மக்கள் 1918 முதல் 1922 வரை கொடுத்து வந்தனர். இப்படிப்பட்டவர்களுக்கு பூமியில் என்றுமாக வாழும் ஆசீர்வாதம் இருக்கும்.

1923, அக்டோபர் 15 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரம் செம்மறியாடுகள், வெள்ளாடுகள் பற்றிய இயேசுவின் உவமையை விளக்குகையில் இவ்வாறு சொன்னது: “செம்மறியாடுகள் தேசத்தாரைக் குறிக்கின்றன, இவர்கள் ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்கள் அல்ல, ஆனால் நீதியை நேசிப்பவர்கள். இவர்கள் ஆண்டவராக இயேசு கிறிஸ்துவை மனதில் ஏற்றவர்கள். அவருடைய ஆட்சியில் வாழும் நன்னாளை எதிர்நோக்கி நம்பிக்கையோடு காத்திருப்பவர்கள்.”​—⁠மத்தேயு 25:31-46, NW.

அதிகமான ஒளிக்கதிர்கள்

1931-⁠ம் ஆண்டில் வின்டிக்கேஷன், புத்தகம் ஒன்று, எசேக்கியேல் 9-⁠ம் அதிகாரத்தை விளக்கியது. அதில், உலக முடிவில் தப்பிப்பிழைப்பதற்கு நெற்றியில் குறியிடப்படுகிறவர்களே இயேசு தம் உவமையில் குறிப்பிட்ட செம்மறியாடுகளைப் போன்றவர்கள் என்று விளக்கப்பட்டது. வின்டிக்கேஷன், புத்தகம் மூன்று (1932-⁠ல் பிரசுரிக்கப்பட்டது) இஸ்ரவேலனல்லாத யோனதாப்பின் நேர்மையான இருதய நிலையை விளக்கியது. இவர், பொய் வணக்கத்தாரை ஒழித்துக்கட்டுவதில் அபிஷேகம் செய்யப்பட்ட இஸ்ரவேல அரசனாகிய யெகூவின் வைராக்கியத்தைக் காண அவரோடு இரதத்தில் ஏறிச் சென்றவர். (2 இராஜாக்கள் 10:15-28) அந்தப் புத்தகம் இவ்வாறு கூறியது: “சாத்தானுடைய அமைப்புக்கு எதிராக, நீதியின் பக்கம் நிலைநிற்கை எடுத்தவர்களாய், இப்போது பூமியில் வாழும் ஒரு வகுப்பாரை யோனதாப் பிரதிநிதித்துவம் செய்தார் அல்லது அவர்களுக்கு முன்நிழலாக இருந்தார். இவர்களை ஆண்டவர் அர்மகெதோனில் பாதுகாத்து, உபத்திரவத்தைத் தப்பி பூமியில் நித்திய ஜீவனை அனுபவிக்க வழிநடத்துவார். இவர்களே ‘செம்மறியாடுகளின்’ வகுப்பார்.”

பூமிக்குரிய நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற வேண்டும் என்பதை 1934-⁠ல் வெளிவந்த ஆங்கில காவற்கோபுரம் தெளிவாக்கியது. இந்த பூமிக்குரிய வகுப்பாரைப் பற்றிய அறிவொளி இன்னும் அதிகமதிகமாக பிரகாசிக்க ஆரம்பித்தது.​—⁠நீதிமொழிகள் 4:⁠18.

மின்னிய அறிவொளி

வெளிப்படுத்துதல் 7:9-17-லுள்ள விஷயம் மின்னலைப் போல் அறிவொளியைச் சிந்தவிருந்தது. (சங்கீதம் 97:11) 1935, மே 30 முதல் ஜூன் 3 வரை அ.ஐ.மா., வாஷிங்டன், டி.சி.-யில் நடக்கவிருந்த மாநாடு யோனதாப் வகுப்பாருக்கு “மிகவும் ஆறுதலாகவும் பயனுள்ளதாகவும்” இருக்கும் என்ற நம்பிக்கையை ஆங்கில காவற்கோபுரம் அறிவித்திருந்தது. அது அப்படியே நிஜமானது!

மாநாட்டில் கூடியிருந்த சுமார் 20,000 பேருக்கு முன்பாக, “திரள் கூட்டம்” என்ற தலைப்பில் ஜே. எஃப். ரதர்ஃபர்டு கொடுத்த உற்சாகமான பேச்சில், நவீன நாளைய “வேறே ஆடுகளும்” வெளிப்படுத்துதல் 7:9-லுள்ள “திரள் கூட்டத்தாரும்” ஒரே தொகுதியினர் என்பதற்கு பைபிள் ஆதாரங்களை அளித்தார். (யோவான் 10:16) இந்தப் பேச்சின் உச்சக்கட்டத்தில் பேச்சாளர் இவ்விதமாக கேட்டார்: “பூமியில் என்றுமாக வாழும் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் தயவுசெய்து எழுந்து நிற்க முடியுமா?” கூட்டத்தாரில் பெரும்பாலோர் எழுந்து நின்றபோது, ரதர்ஃபார்டு “இதோ! திரள் கூட்டத்தார்!” என்றார். ஒரு கணம் நிலவிய நிசப்தத்திற்குப் பின்பு மகிழ்ச்சியான கரகோஷம் கூரையைப் பிளந்தது. அடுத்த நாள் 840 பேர் யெகோவாவின் சாட்சிகளாக புதிதாக முழுக்காட்டப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

குறிப்பிடத்தக்க கூட்டத்தார்

1935-⁠க்கு முன்பு பைபிளின் செய்திக்கு செவிசாய்த்து, நற்செய்தியை வைராக்கியமாக பிரசங்கித்த அநேகர் பரதீஸிய பூமியில் என்றும் வாழ்வதில்தான் ஆர்வம் காட்டினர். அவர்களுக்கு பரலோகத்துக்குப் போகும் ஆசை இல்லை, ஏனென்றால் அத்தகைய நம்பிக்கையை கடவுள் அவர்களுக்கு கொடுக்கவில்லை. அவர்கள் தங்களை வேறே ஆடுகளாகிய திரள் கூட்டத்தாராக அடையாளம் காட்டியது, 1935-⁠க்குள் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாகிய 1,44,000 பேருக்கான அழைப்பு முடிந்துவிட்டதையே சுட்டிக்காட்டியது.​—⁠வெளிப்படுத்துதல் 7:⁠4.

இரண்டாம் உலகப் போர் மூண்டபோது, திரள் கூட்டத்தாரை கூட்டிச் சேர்ப்பதை நிறுத்துவதற்கு பிசாசாகிய சாத்தான் கடும் முயற்சி செய்தான். பல நாடுகளில் ராஜ்ய பிரசங்க வேலைக்குத் தடைவிதிக்கப்பட்டது. அந்த இருண்ட காலத்தில் 1942, ஜனவரியில் தன் மரணத்திற்கு சற்று முன்பு “‘திரள் கூட்டம்’ அந்தளவுக்குப் பெரிதாக இருக்காது என தோன்றுகிறது” என ஜே. எஃப். ரதர்ஃபர்டு குறிப்பிட்டார்.

ஆனால் கடவுளின் ஆசீர்வாதத்தால் அவர் நினைத்ததற்கு மாறாக நடந்தது. ‘தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைத்திருக்கும்’ அபிஷேகம் பெற்றவர்களும் அவர்களுடைய தோழர்களாகிய வேறே ஆடுகளும் சீஷராக்கும் ஊழியத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். (கொலோசெயர் 4:12; மத்தேயு 24:14; 28:19, 20) 1946-⁠ல் உலகம் முழுவதிலும் பிரசங்கித்து வந்த யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை 1,76,456 ஆக இருந்தது. இவர்களில் பெரும்பாலோர் திரள் கூட்டத்தார். 2000-⁠ல் 60,00,000-⁠க்கும் அதிகமான சாட்சிகள் 235 தேசங்களில் யெகோவாவை உண்மையுடன் சேவித்து வந்தார்கள்​—⁠உண்மையிலே மாபெரும் கூட்டமே! அந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்