வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
தூரா சமவெளியில் நேபுகாத்நேச்சார் நிறுத்திய மாபெரும் சிலையை பணிந்துகொள்ள வேண்டுமென்ற பரீட்சையை மூன்று எபிரெயர் எதிர்ப்பட்டபோது தானியேல் எங்கே இருந்தார்?
இதைப் பற்றி பைபிள் ஒன்றும் சொல்வதில்லை, ஆகவே அந்தப் பரீட்சையின்போது தானியேல் எங்கே இருந்தார் என்பதை இன்று எந்த மனிதனும் நிரூபிக்க முடியாது.
தானியேல் வகித்த உயர் பதவியின் காரணமாக அல்லது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ போன்றவர்களைவிட தானியேலிடம் நேபுகாத்நேச்சார் விசேஷித்த பொறுப்புகளை ஒப்படைத்திருந்ததன் காரணமாக அவர் தூரா சமவெளிக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என சிலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். தன்னுடைய மூன்று நண்பர்களைவிட அவர் மேலான ஸ்தானத்தை வகித்தார் என்பதை தானியேல் 2:49 சுட்டிக்காட்டுகிறது. இதனால் மற்றவர்களோடு அவரும் சிலைக்கு முன் வந்து நிற்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது என நாம் திட்டமாக சொல்ல முடியாது.
அவர் ஏதாவது அலுவலக வேலையின் காரணமாக வெளியே போயிருந்திருக்கலாம் அல்லது வியாதியாக இருந்ததால் வரமுடியாமல் போயிருக்கலாம் என மற்றவர்கள் கூறியிருக்கிறார்கள். இருந்தாலும், பைபிள் இதைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. எப்படியாயினும், தானியேலின் நடத்தை மற்றவர்களுடைய விமர்சனத்திற்கு வராமல் இருந்திருக்காது. ஏனென்றால் மற்றவர்களுடைய கவனத்திற்கு வந்திருந்தால், பொறாமை கொண்ட பாபிலோனிய அதிகாரிகள் அவர் மீது குற்றம் சாட்டுவதற்கு இதை பயன்படுத்தியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. (தானியேல் 3:8) இந்தச் சம்பவத்திற்கு முன்பும்சரி பின்பும்சரி, தானியேல் உத்தமத்தைக் காத்துக்கொள்பவராகவே தன்னை நிரூபித்தார். எந்தச் சோதனையை எதிர்ப்பட்டபோதிலும் கடவுளுக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார். (தானியேல் 1:8; 5:17; 6:4, 10, 11) தூரா சமவெளியில் ஏன் தானியேல் இல்லை என்பதற்குரிய காரணத்தைப் பற்றி பைபிள் ஒன்றும் சொல்லாவிட்டாலும், யெகோவா தேவனுக்கு பற்றுமாறா விசுவாசத்தைக் காண்பித்தார் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்.—எசேக்கியேல் 14:14; எபிரெயர் 11:33.