உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 5/1 பக். 8
  • அப்பாவுக்கு உதவிய மகன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அப்பாவுக்கு உதவிய மகன்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • இதே தகவல்
  • இயேசுவின் தம்பியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • கூட்டங்களில் கலந்துகொள்ள எது நம்மைத் தூண்டுகிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • பைபிள் புத்தக எண் 59—யாக்கோபு
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • ஆர்வங்காட்டியிருக்கிற அனைவருக்கும் உதவுதல்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 5/1 பக். 8

அப்பாவுக்கு உதவிய மகன்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் 30 வயதைத் தாண்டியவர்; அவர் மனவளர்ச்சி குன்றியவர், அவருக்கு இலேசாக தற்சிந்தனை (autism) நோயும் உண்டு. இருந்தாலும் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு அம்மாவுடனும் அக்காவுடனும் வருடக்கணக்கில் போய் வந்திருக்கிறார். என்றபோதிலும், அவர்களுடைய நம்பிக்கைகளில் அப்பாவுக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது. ஒரு நாள், கூட்டத்தில் ஒரு நடிப்பு இருந்தது; தெரிந்த ஒருவரை கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு அழைப்பது எப்படி என்பதுதான் அந்த நடிப்பு. கூட்டம் முடிந்து வீடு திரும்பியதும் ஜேம்ஸ் விருட்டென்று தன் அறைக்குள் சென்றார். என்னவோ ஏதோ என்று நினைத்த அவரது அம்மாவும் அவருக்குப் பின்னாலேயே சென்று பார்த்தால், பழைய காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துவிட்டு தாறுமாறாக இறைந்தார். பின்பக்கத்தில் நினைவு ஆசரிப்பு அழைப்பிதழின் படம் இருந்த ஒரு பத்திரிகையை எடுத்துக்கொண்டு நேராக அப்பாவிடம் சென்றார். முதலில் அந்தப் படத்தைக் காட்டினார், பின்பு அப்பாவிடம் “நீங்கள்!” என்று சொன்னார். அவருடைய அப்பாவும் அம்மாவும் ஒருவரையொருவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்; அப்பாவை நினைவு ஆசரிப்புக்கு ஜேம்ஸ் அழைக்கிறார் என்பதை புரிந்துகொண்டனர். வருவதாக அப்பா ஒப்புக்கொண்டார்.

நினைவு ஆசரிப்பு அன்று சாயங்காலம், ஜேம்ஸ் தன் அப்பாவின் துணிமணிகள் உள்ள அறைக்கு சென்றார்; பேன்ட் ஒன்றை தேர்ந்தெடுத்தார்; அப்பாவிடம் கொண்டுவந்து, அதை போட்டுக்கொள்ளச் சொல்லி சைகை காட்டினார். தான் கூட்டத்திற்கு வரவில்லை என்று அப்பா கூறிவிட்டார். எனவே அம்மாவும் ஜேம்ஸும் மட்டும் ராஜ்ய மன்றத்திற்கு போனார்கள்.

என்றாலும் சில நாட்களுக்குப் பின்பு, கூட்டத்திற்கு தன்னுடன் வரும்படி அம்மா ஜேம்ஸைக் கிளப்ப முயன்றபோதெல்லாம் முரண்டு பிடித்தார்; இவ்வாறு அவருடைய பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது; அதற்குப் பதிலாக அப்பாவுடன் வீட்டிலேயே இருந்துகொள்ள விரும்பினார். பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் கூட்டத்திற்காக தயார்படுத்த முயன்றபோது வழக்கம்போல் அம்மாவிடம் முரண்டு பிடித்தார். அம்மாவே ஆச்சரியப்படும் வகையில், ஜேம்ஸின் அப்பா அவரிடம், “ஜேம்ஸ், இன்றைக்கு கூட்டத்திற்கு நான் போனால் நீயும் வருவாயா?” என்று கேட்டார். ஜேம்ஸின் முகம் மலர்ந்தது. அப்பாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, “ஆமா!” என்றார்; பின்பு மூன்று பேருமே ராஜ்ய மன்றத்திற்குச் சென்றனர்.

அன்று முதல் ஜேம்ஸின் அப்பா ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்கு தவறாமல் போக ஆரம்பித்தார்; தான் முன்னேற வேண்டுமானால் மற்ற கூட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்று விரைவிலேயே யாவருமறிய சொல்லிவிட்டார். (எபிரெயர் 10:24, 25) அவ்வாறே செய்தார்; இரண்டு மாதம் கழித்து பைபிளை தவறாமல் படிக்க ஆரம்பித்தார். வேகமாக முன்னேறினார்; உடனுக்குடன் தன் வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்தார்; வெகு சீக்கிரத்தில் ராஜ்ய பிரசங்க வேலையிலும் பங்கு கொள்ள தொடங்கினார். பைபிளைப் படிக்க ஆரம்பித்து ஒரு வருடம் கழித்து தன் வாழ்க்கையை யெகோவாவிற்கு ஒப்புக்கொடுத்து, இதை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் வெளிக்காட்டினார். சபையில் தற்போது ஓர் உதவி ஊழியராக சேவை செய்கிறார். இப்போது குடும்பத்தில் அனைவருமே ஒன்றாக யெகோவாவை சேவிக்கின்றனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்