உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 12/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • இதே தகவல்
  • சந்தோஷத்தை தரும் தானம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • மன்னிப்பு கேட்பது சமரசமாவதற்கு திறவுகோல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • சூதாடுவது பாவமா?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 12/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுரம் பத்திரிகைகளை வாசித்து மகிழ்ந்தீர்களா? சரி, பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் விடையளிக்க முடியுமா என்று பாருங்கள்:

• யோசிக்கும் திறன் உங்களை எப்படி பாதுகாக்கலாம்? (நீதிமொழிகள் 1:⁠4)

அது ஆவிக்குரிய ஆபத்துக்களை நமக்கு உணர்த்தலாம், வேலை செய்யுமிடத்தில் பாலியல் சம்பந்தப்பட்ட சோதனைகளைத் தவிர்ப்பது போன்ற விஷயங்களில் தகுந்த நடவடிக்கை எடுக்க திட்டமிடும்படி நம்மை தூண்டலாம். சக கிறிஸ்தவர்கள் அபூரணராய் இருப்பதை புரிந்துகொள்ள அது உதவுகிறது; இதனால், பிறருடைய செயல்கள் நமக்கு எரிச்சலை ஏற்படுத்துகையில் அவசரப்பட்டு முன்யோசனையின்றி நடந்துகொள்ளாதிருப்போம். ஆவிக்குரிய பாதையைவிட்டு விலகிப்போகச் செய்யும் பொருளாதார அழுத்தங்களை தவிர்ப்பதற்கும் இது உதவி செய்யும்.​—⁠8/15, பக்கங்கள் 21-4.

• ஒருவர் எவ்வாறு நல்ல அயலகத்தாராக ஆகமுடியும்?

தாராளமாய் கொடுப்பவராக இருப்பதும் நன்றியுடன் பெற்றுக்கொள்பவராக இருப்பதும் நல்ல அயலாராக இருப்பதற்குரிய இரண்டு வழிகளாகும். கஷ்டங்கள் வரும்போது நல்ல அயலகத்தாராக இருப்பது மிகவும் பயனுள்ளது. பொல்லாப்புக்கு முடிவுகட்ட கடவுள் சீக்கிரத்தில் எடுக்கப்போகும் நடவடிக்கையைப் பற்றி மற்றவர்களுக்கு எச்சரிப்பதன் மூலம் யெகோவாவின் சாட்சிகள் நல்ல அயலகத்தாராக இருக்க முயலுகின்றனர்.​—⁠9/1, பக்கங்கள் 4-7.

• பைபிளின்படி, உண்மையான புனிதர்கள் யார், அவர்கள் எவ்வாறு மனிதவர்க்கத்திற்கு உதவி செய்வார்கள்?

பூர்வ கால கிறிஸ்தவர்கள் அனைவரும் உண்மையான புனிதர்களாக அல்லது பரிசுத்தவான்களாக இருந்தார்கள். இவர்களை புனிதராக்கியது கடவுள், எந்த மனிதனோ அமைப்போ அல்ல. (ரோமர் 1:2) பரிசுத்தவான்கள் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும்போது கிறிஸ்துவுடனே சேர்ந்து பூமியிலுள்ள உண்மையுள்ளவர்களை ஆசீர்வதிப்பதில் பங்குகொள்வார்கள். (எபேசியர் 1:18-21)​—⁠9/15, பக்கங்கள் 4-7.

• பண்டைய கிரீஸில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளைப் பற்றி ஓரளவு அறிந்திருப்பது கிறிஸ்தவர்களுக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கலாம்?

அப்போஸ்தலர்கள் பேதுருவும் பவுலும் பண்டைய விளையாட்டுகளை அடிப்படையாக கொண்டோ அல்லது மறைமுகமாக குறிப்பிட்டோ சில உதாரணங்களை எழுதினர். (1 கொரிந்தியர் 9:26; 1 தீமோத்தேயு 4:7, NW; 2 தீமோத்தேயு 2:5; 1 பேதுரு 5:10, NW) ஒரு பண்டைய விளையாட்டு வீரருக்கு ஒரு திறமையான பயிற்சியாளர் அவசியமாக இருந்தார், அவருக்கு தன்னடக்கம் மிகவும் தேவைப்பட்டது, நல்ல முயற்சி இன்றியமையாததாய் இருந்தது. இதுவே இன்று கிறிஸ்தவர்களின் ஆன்மீக முயற்சிகளின் சம்பந்தமாக உண்மையாக உள்ளது.​—⁠10/1, பக்கங்கள் 28-31.

• ஓர் அயல்நாட்டில் பிள்ளைகளை வளர்ப்பதில் இருக்கும் சவால்களும் பலன்களும் யாவை?

பெரும்பாலான பிள்ளைகள் ஒரு புதிய மொழியை அவர்களுடைய பெற்றோரைவிட வேகமாக கற்றுக்கொள்கின்றனர். இதனால் பிள்ளைகளின் யோசனைகளையும் பிரதிபலிப்புகளையும் புரிந்துகொள்வது பெற்றோருக்கு கடினமாகிவிடலாம். மேலும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரின் மொழியில் பைபிள் போதனைகளை எளிதில் புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கலாம். இருந்தாலும், பெற்றோர் தங்கள் மொழியை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கையில் குடும்ப பந்தம் உறுதியாகிறது, பிள்ளைகள் இரண்டு மொழிகளையும் கற்று இரண்டு கலாச்சாரங்களிலும் பரிச்சயமாவார்கள்.​—⁠10/15, பக்கங்கள் 22-6.

• மன்னிப்பு கேட்க கற்றுக்கொள்வது ஏன் முக்கியம்?

அநேக சமயங்களில் சீர்குலைந்துபோன உறவை மன்னிப்பு கேட்பதன் மூலம் சரிசெய்துவிடலாம். மன்னிப்பு கேட்பது எத்தனை வலிமையுள்ளது என்பதற்கு பைபிள் உதாரணங்களைக் கொடுக்கிறது. (1 சாமுவேல் 25:2-35; அப்போஸ்தலர் 23:1-5) அநேகமாக இரண்டு மனிதர்கள் மோதிக்கொள்ளும்போது இரு சாராரிடமும் ஏதாவது தவறு இருக்கிறது. ஆகவே இருவருமே விட்டுக்கொடுத்து மன்னிப்பு கேட்பது தேவைப்படுகிறது.​—⁠11/1, பக்கங்கள் 4-7.

• சிறிய தொகையாயிருந்தாலும் சூதாடுதல் ஏன் தவறு?

தன்னலம், போட்டி மனப்பான்மை, பேராசை ஆகியவற்றை சூதாடுதல் தூண்டிவிடுகிறது. பைபிள் இவற்றை கண்டனம் செய்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) சூதாட்ட வெறியர்கள் பெரும்பாலோர் சிறு வயதில் சிறுசிறு தொகையைத்தான் பந்தயம் கட்டி விளையாட ஆரம்பித்தார்கள்.​—⁠11/1, பக்கம் 31.

• பைபிளின் பெரும்பாலான புத்தகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருக்க, பைபிளை கிரேக்க மொழியில் மொழிபெயர்ப்பதற்கு அவசியம் என்ன, இதனால் என்ன பலன்கள் கிடைத்துள்ளன?

• எபிரெய வேதாகமத்தின் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமமும் உபயோகிக்கும் கிரேக்கைவிட நவீன கிரேக்கு பெருமளவு வித்தியாசப்படுகிறது. சமீப நூற்றாண்டுகளாக, பைபிளின் சில பகுதிகளை அல்லது முழு பைபிளையும் பேச்சு வழக்கிலுள்ள கிரேக்க மொழிக்கு மொழிபெயர்ப்பதற்கு எண்ணற்ற முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. இன்றோ, கிரீஸின் சாமானிய குடிமகன் படித்து, புரிந்துகொள்ள முடிந்த சுமார் 30 பைபிள் மொழிபெயர்ப்புகள், முழுமையாகவோ பகுதியாகவோ கிடைக்கின்றன. அவற்றுள், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் கிரேக்க மொழிபெயர்ப்பு ஒப்பற்ற மாணிக்கமாகும். இது 1997-⁠ல் பிரசுரிக்கப்பட்டது.​—⁠11/15, பக்கங்கள் 26-9.

• கிறிஸ்தவர்கள் ஏன் தசமபாகம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை?

பண்டைய இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தின்கீழ், லேவி கோத்திரத்தாரை ஆதரிப்பதற்கும் கஷ்டத்தில் இருப்பவர்களை கவனித்துக்கொள்வதற்கும் தசமபாகம் ஒரு வழியாக இருந்தது. (லேவியராகமம் 27:30; உபாகமம் 14:28, 29) இயேசுவின் பலிக்குரிய மரணத்தால் தசமபாகம் செலுத்த வேண்டிய கட்டளை உட்பட நியாயப்பிரமாணமும் முடிவுக்கு வந்தது. (எபேசியர் 2:13-15) பூர்வ கிறிஸ்தவ சபையில், ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் திராணிக்கு ஏற்பவும் தன் மனதில் தீர்மானித்தபடியும் கொடுப்பதே எதிர்பார்க்கப்பட்டது. (2 கொரிந்தியர் 9:5, 7)​—⁠12/1, பக்கங்கள் 4-6.

• கடைசி சோதனையில் சாத்தான் பெருந்திரளானோரை மோசம் போக்குவான் என்பதை வெளிப்படுத்துதல் 20:8 அர்த்தப்படுத்துகிறதா?

மோசம்போகிறவர்கள் “கடற்கரை மணலத்தனையா”யிருப்பர் என்று அந்த வசனம் கூறுகிறது. பைபிளில் அந்தச் சொற்றொடர் அநேகமாக மிகப் பெரிய எண்ணிக்கையைக் குறிக்காமல் அறியப்படாத ஒரு எண்ணிக்கையையே குறிக்கிறது. ஆபிரகாமின் சந்ததி, “கடற்கரை மணலைப்போல” இருக்கும் என்று சொல்லப்பட்டது, கடைசியாக 1,44,000 பேரையே குறித்தது. (ஆதியாகமம் 22:17; வெளிப்படுத்தல் 14:1-4)​—⁠12/1, பக்கம் 29.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்