உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w03 7/1 பக். 8
  • உயர்தர அன்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உயர்தர அன்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • இதே தகவல்
  • அன்பின் வழியே “சிறந்த வழி” —உங்கள் வழியும் அதுதானா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • “இவைகளில் அன்பே பெரியது”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • அன்பு (அகாப்பே)—எதுவல்ல, எது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • ‘எல்லாவற்றிற்கும் மேலாக ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்’
    விழிப்புடன் இருங்கள்!
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
w03 7/1 பக். 8

உயர்தர அன்பு

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், அதாவது புதிய ஏற்பாட்டில், ஆகாப்பீ என்ற கிரேக்க வார்த்தை “அன்பு” என்பதாக பெரும்பாலான இடங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

வேதாகமத்தின்பேரில் உட்பார்வைa என்ற ஆங்கில புத்தகம் இந்த வார்த்தையின் அர்த்தத்தை இவ்வாறு விளக்குகிறது: “பொதுவாக எல்லாரும் நினைப்பது போல [ஆகாப்பீ] என்பது வெறுமனே அன்யோன்யத்தை அடிப்படையாகக் கொண்ட உணர்ச்சி அல்ல, ஆனால் நியமம், கடமை, நேர்த்தி, அதோடு சரியானது எதுவோ அதை மற்றவர்களுக்கு செய்தல் ஆகியவற்றை முன்னதாகவே தீர்மானித்து செயல்படுவதன் அடிப்படையிலான அன்பை குறிக்கிறது. ஆகாப்பீ (அன்பு) தனிப்பட்ட விரோதங்களை தகர்த்து, எதிரிகளிடம் அன்பாக இருக்க செய்கிறது; விரோதங்களால் ஒருவர் சரியான நியமங்களை விட்டுவிடாதபடிக்கு இந்த அன்பு பாதுகாக்கிறது, அதோடு விரோதிகள் காட்டும் அதே வெறுப்பை காட்டாதபடிக்கும் பாதுகாக்கிறது.”

ஆகாப்பீ ஆழ்ந்த உணர்ச்சிகளையும் உட்படுத்துகிறது. ‘எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு [ஆகாப்பீ] உள்ளவர்களாயிருங்கள்’ என அப்போஸ்தலன் பேதுரு அறிவுறுத்தினார். (1 பேதுரு 4:8) ஆகவே, ஆகாப்பீ என்பது மனதை மட்டுமல்ல, இருதயத்தையும் உட்படுத்துகிறது. இந்த உயர்தரமான அன்பின் வல்லமையையும் செயல்பாட்டையும் காண்பிக்கும் சில வசனங்களை நீங்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கக்கூடாது? பின்வரும் வசனங்கள் உதவியாக இருக்கலாம்: மத்தேயு 5:43-47; யோவான் 15:12, 13; ரோமர் 13:8-10; எபேசியர் 5:2, 25, 28; 1 யோவான் 3:15-18; 4:16-21.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்