உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w04 11/15 பக். 3-4
  • மனிதரின் ஆயுள் எவ்வளவு?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனிதரின் ஆயுள் எவ்வளவு?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • இதே தகவல்
  • மரணத்தை முறியடிக்க மனிதனின் முயற்சி
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • மனிதன் என்ற அற்புதம்
    உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?
  • உயிர்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • நித்திய ஜீவன் உண்மையிலேயே சாத்தியமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
w04 11/15 பக். 3-4

மனிதரின் ஆயுள் எவ்வளவு?

ஸ்பானிய ஆய்வுப்பயணி க்வான் பான்ஸே டே லேயான் மார்ச் 3, 1513 அன்று குறிப்பிடத்தக்க ஆய்வுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவர் பிம்மனி என்னும் தீவை அடையும் நோக்கோடு பியூர்டோ ரிகோவிலிருந்து கப்பல் பயணத்தைத் தொடங்கினார். அவர் ஓர் அற்புத ஊற்றாகிய இளமை ஊற்றைத் தேடிச் சென்றதாக பழங்கதை சொல்கிறது. உண்மையில், அவர் போய்ச் சேர்ந்த இடமோ தற்போது ப்ளோரிடா என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் உள்ள ஓர் இடமாகும். அப்படிப்பட்ட எந்தவொரு அற்புத ஊற்றையும் அவர் கண்டுபிடிக்கவே இல்லை. ஏனெனில் அப்படி ஓர் ஊற்று இல்லவே இல்லை.

இன்று மனிதர்கள் பொதுவாக 70 அல்லது 80 வருடங்களைக் கடந்து உயிர் வாழ்வதே அபூர்வம்தான். மிக மிக நீண்ட ஆயுசுடன் வாழ்ந்தவர்களைப் பற்றி பைபிள் பட்டியலிடுகிற போதிலும், இதுவரை அதிக ஆண்டுகள் உயிரோடிருந்த நபரின் வயது 122 வருடங்கள் 164 நாட்கள் என 2002 கின்னஸ் புக் ஆஃப் உவர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சொல்கிறது. (ஆதியாகமம் 5:3-32) எனினும், “முதுமையும், ஏன் மரணமும்கூட இல்லாத ஓர் உலகை உருவாக்குவதற்கான சாத்தியம் இருக்கிறதென புதிய ஆராய்ச்சி காட்டுகிறது” என உயிர் ஒழுக்கவியல் நிபுணர் ஜான் ஹாரஸ் குறிப்பிட்டார். “சாவாமை,” “2099-⁠ம் வருடத்திற்குள் மனிதர்களுக்கு பூரண ஆயுசு,” “செல்களின் பெருக்கம் தொடர்ச்சியாக நடைபெறும் திறன்” போன்ற விஷயங்களைப் பற்றி 21-⁠ம் நூற்றாண்டின் அநேக ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்றனர்.

நித்திய வாழ்க்கை எனும் கனவு என்ற ஆங்கில நூலில் மார்க் பெனெக்கே இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நம் உடலிலுள்ள ஏறக்குறைய அனைத்து செல்களும் நம்முடைய வாழ்நாளில் பல தடவை புதிதாகிவிடுகின்றன. . . . கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பின், நாம் புத்தம் புது உடலைப் பெற்றுவிடுகிறோம்.” எனினும், செல்கள் தொடர்ந்து பிரிந்து கொண்டே இருப்பதில்லை. ஏனென்றால் முன்நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்குப்பின் செல்கள் பிரிவது நின்றுவிடுகிறது. அவ்வாறு நிற்காமல் தொடர்ந்து பிரிந்துகொண்டே இருந்தால், “மனித உடலால் தன்னைத்தானே நீண்ட நாட்களுக்கு, ஏன் நித்தியத்திற்கும் புதுப்பித்துக் கொண்டே இருக்க முடியும்” என பெனெக்கே சொல்கிறார்.

மனித மூளையைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். நம்முடைய குறுகிய வாழ்நாளில் எந்தளவு அதிகமாக பயன்படுத்தினாலும் அந்த அளவைவிடவும் அது மிகுந்தளவு திறன் கொண்டது. மனித மூளை “ஒருவரின் வாழ்நாளில் பயன்படுத்துவதற்குத் தேவைப்படும் திறனைவிடவும் எக்கச்சக்கமான திறனைப் பெற்றுள்ளது” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. (1976 பதிப்பு, தொகுதி 12, பக்கம் 998) மூளை எவ்வாறு கற்கிறது (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் டேவிட் ஏ. சூஸா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தகவலை சேகரித்து வைப்பதற்கான மூளையின் திறனுக்கு வரம்பே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.”​—⁠பக்கம் 78, இரண்டாம் பதிப்பு, பதிப்புரிமை 2001.

நாம் சாவதற்கான காரணத்தை நம் உடலின் அமைப்பில் ஆராய்ச்சியாளர்களால் ஏன் கண்டுபிடிக்கவே முடியவில்லை? நம் மூளைக்கு ஏன் அவ்வளவு அபார திறன் இருக்கிறது? நாம் நித்தியமாக வாழ்ந்து அறிவை பெற்றுக்கொண்டே இருப்பதற்காக அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்குமோ? நம்மால் ஏன் நித்தியகால வாழ்வைப் பற்றி எண்ணிப் பார்க்க முடிகிறது?

“அவர் [கடவுள்] அனைத்தையும் அதினதன் காலத்திலே நேர்த்தியாக செய்திருக்கிறார்; நித்தியகால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆகவே ஆதிமுதல் அந்தம்மட்டும் கடவுள் செய்துவரும் கிரியையை மனிதன் கண்டுபிடியான்” என பைபிள் கூறுகிறது. (பிரசங்கி 3:11, NW) நீடூழி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை கடவுள் நம் மனதில் விதைத்துள்ளார் என்பதையே இவ்வசனம் காட்டுகிறது. உண்மையில், கடவுளைப் பற்றியும் அவருடைய வேலைகளைப் பற்றியும் கற்றுக்கொள்வதற்கு எப்போதும் ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். கணக்கிட முடியா யுகா யுகங்களாக நாம் வாழ்ந்தாலும்​—⁠ஆம், நித்திய காலமாக வாழ்ந்தாலும்​—⁠கடவுளுடைய வியத்தகு படைப்புகளைப் பற்றி அதிகமதிகமாக கற்றுக் கொண்டே இருப்போம்.

நித்திய கால வாழ்க்கை சாத்தியம் என்பதை இயேசுவின் வார்த்தைகளும் ஊர்ஜிதப்படுத்துகின்றன. அவர் இவ்வாறு சொன்னார்: ‘ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.’ (யோவான் 17:3) உங்களைப் பற்றி என்ன? நீங்கள் என்றென்றும் வாழ ஆசைப்படுகிறீர்களா?

[பக்கம் 3-ன் படங்கள்]

க்வான் பான்ஸே டே லேயான் என்பவர் இளமை ஊற்றைத் தேடிச் சென்றார்

[படத்திற்கான நன்றி]

பான்ஸே டே லேயான்: Harper’s Encyclopædia of United States History

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்