உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w05 8/15 பக். 8
  • கலிலேயாக் கடலில்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கலிலேயாக் கடலில்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • இதே தகவல்
  • கலிலேயப் படகு பழங்காலப் பொக்கிஷம்
    விழித்தெழு!—2006
  • இயேசு நம்மை பாதுகாப்பார்
    பெரிய போதகரிடம் கற்றுக்கொள்
  • ஒரு தீவில் கப்பற்சேதம்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • முதல் நூற்றாண்டு மீன்பிடிப் படகு
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
w05 8/15 பக். 8

கலிலேயாக் கடலில்

இயேசுவும் அவரது சீஷர்களும் கலிலேயாக் கடலைக் கடப்பதற்குப் படகில் சென்றார்கள் என்று மாற்கு 4:35-41-லுள்ள (பொது மொழிபெயர்ப்பு) பதிவு சொல்கிறது. அதில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது. அவரோ [இயேசுவோ] படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்.”

பைபிளில், இந்த ஒரு இடத்தில் மட்டும்தான் “தலையணை” என்பதற்குரிய கிரேக்க பதம் காணப்படுகிறது. எனவே இந்த வசனத்தில் அந்தப் பதத்தின் சரியான அர்த்தத்தை அறிஞர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அநேக பைபிள்களில் இந்தக் கிரேக்க பதம் “தலையணை” அல்லது “மெத்தை” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது எப்படிப்பட்ட தலையணையாக அல்லது மெத்தையாக இருந்தது? மூல மொழியில், படகின் சாதனங்களில் ஒன்றைக் குறிக்கும் விதத்தில் மாற்கு அந்தத் தலையணையைப் பற்றிச் சொன்னார். அவர் பயன்படுத்தின கிரேக்க பதத்தின் அர்த்தம் என்ன என்பதை கலிலேயாக் கடலுக்கு அருகே 1986-⁠ல் தோண்டியெடுக்கப்பட்ட ஒரு படகு வெளிப்படுத்துகிறது.

எட்டு மீட்டர் நீளமான இந்தப் படகு பாயினாலும் துடுப்பினாலும் இயங்கிய ஒன்று என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அது மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்டது. கனமான பெரிய வீச்சு வலையை வைப்பதற்கு அதன் பின்புறத்தில் ஒரு தளம் இருந்தது. இந்தப் படகு பொ.ச.மு. 100 முதல் பொ.ச. 70 வரையுள்ள காலப்பகுதியைச் சேர்ந்தது என்பதை அதன் சிதைவுகள் காட்டுகின்றன. இயேசுவும் அவருடைய சீஷர்களும் இது போன்ற ஒரு படகை பயன்படுத்தியிருக்கலாம். இந்தப் படகை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்ட ஷெல்லி வாக்ஸ்மன் என்பவர் கலிலேயாக் கடலின் படகு​—⁠2000 வருட பழமைக்குரிய ஒரு வியத்தகு கண்டுபிடிப்பு என்ற ஆங்கில புத்தகத்தை எழுதினார். படகு நிலை தடுமாறாதிருக்க பயன்படுத்தப்படும் கனமான மணல் மூட்டையையே இயேசு “தலையணை”யாக பயன்படுத்தியிருக்கலாம் என்று அவர் சொல்கிறார். பெரிய வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பதில் அனுபவம் பெற்ற யாஃபோ நகரத்தைச் சேர்ந்த மீனவர் சொல்வதாவது: “நான் சிறுவனாக இருந்தபோது, மத்தியதரைக் கடலில் பயணித்த படகுகளில் வேலைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் ஒன்று அல்லது இரண்டு மணல் மூட்டைகள் எப்போதும் இருக்கும். . . . படகு நிலையாக இருப்பதற்காக இவை மேல் தளத்தில் வைக்கப்பட்டன. ஆனால் அவை பயன்படாதபோது படகின் பின்புற தளத்தின் அடிவாரத்தில் வைக்கப்பட்டன. களைப்பாக இருந்தவர்கள் படகின் பின்புற அடிவாரத்திற்குள் தவழ்ந்து சென்று அங்கிருந்த மணல் மூட்டையை தலையணையாக வைத்துக்கொண்டு தூங்குவார்கள்.”

எனவே மாற்கு தரும் விவரிப்பில், படகின் பின்புற அடிவாரத்திலிருந்த ஒரு மணல் மூட்டையையே இயேசு தலையணையாக வைத்துக்கொண்டு தூங்கினார் என அறிஞர்கள் பலர் நினைக்கிறார்கள். பெரும் புயல் அடிக்கும் சமயத்தில் படகின் இந்தப் பகுதியே மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்கிறது. அந்தத் தலையணை எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். கடவுளுடைய துணையாலும் வல்லமையாலும், சுழல் காற்றால் சீறியெழுந்த கடலை இயேசு அமைதிப்படுத்தினார். அவருடைய சீஷர்களும்கூட, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று வியந்து கூறினார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்