உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 2/1 பக். 22-30
  • ‘சகல தேசத்தாருக்கும் சாட்சி’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘சகல தேசத்தாருக்கும் சாட்சி’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • முதல் நூற்றாண்டில் சாட்சி கொடுக்கும் வேலை
  • தேவனுக்கு உடன்வேலையாட்கள்
  • இன்று சாட்சி கொடுக்கும் வேலை
  • சாட்சி கொடுப்பதில் தீவிரம்
  • தெய்வீக அரசுரிமைக்கு கிறிஸ்தவ சாட்சிகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • “முதலாவது நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • “பூமியின் எல்லைகள் வரையிலும்...”
    கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’
  • முழுமையாய்ச் சாட்சி கொடுக்க பயிற்சி பெற்றிருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 2/1 பக். 22-30

‘சகல தேசத்தாருக்கும் சாட்சி’

“நீங்கள் . . . பூமியின் கடைசி பரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” ​—⁠அப்போஸ்தலர் 1:8.

1. மத்தேயு 24:14-⁠ல் உள்ள தீர்க்கதரிசனத்தை சீஷர்கள் முதன்முதலில் எப்போது, எங்கே கேட்டார்கள்?

மத்தேயு 24:14-⁠ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் அந்தளவு பரிச்சயமாக இருப்பதால், நம்மில் அநேகர் அதை மனப்பாடமாய் அறிந்திருக்கிறோம். குறிப்பிடத்தக்க எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசனம் அது! அவருடைய சீஷர்கள் முதன்முதலில் அதைக் கேட்டபோது என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனைசெய்து பாருங்கள்! அது பொ.ச. 33-⁠ம் வருடம். சீஷர்கள் இயேசுவோடுகூட சுமார் மூன்று வருடங்கள் இருந்திருக்கிறார்கள், இப்போது எருசலேமுக்கு அவரோடுகூட வந்திருந்தார்கள். அவர் செய்த அற்புதங்களைப் பார்த்திருந்தார்கள், அவருடைய போதனைகளைக் கேட்டிருந்தார்கள். அருமையான சத்தியங்களை அவர் கற்பித்தபோது அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள், ஆனாலும் எல்லாருமே தங்களைப் போல் மகிழ்ச்சி அடையவில்லை என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். ஏனெனில், சக்தியும் செல்வாக்குமிக்க எதிரிகள் இயேசுவுக்கு இருந்தார்கள்.

2. சீஷர்கள் என்ன ஆபத்துகளையும் சவால்களையும் எதிர்ப்பட இருந்தார்கள்?

2 ஒலிவ மலையில், இயேசுவோடு நான்கு சீஷர்கள் அமர்ந்திருந்தார்கள்; சீக்கிரத்தில் தாங்கள் எதிர்ப்படவிருந்த ஆபத்துகளையும் சவால்களையும் பற்றி அவர் சொன்ன விஷயங்களைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். தாம் கொல்லப்படப்போவதாக அவர்களிடம் இயேசு முன்னரே சொல்லியிருந்தார். (மத்தேயு 16:21) இப்போது அவர்களும்கூட கடும் எதிர்ப்புகளைச் சந்திப்பார்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாக்கினார். “உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலை செய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்” என்று அவர் சொன்னார். அதுமட்டுமா? கள்ளத் தீர்க்கதரிசிகள் அநேகரை வஞ்சிப்பார்கள். வேறு சிலர், இடறலடைந்து ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். இன்னும் சிலர், சொல்லப்போனால் இன்னும் ‘அநேகர்,’ கடவுள் மீதும் அவருடைய வார்த்தையின் மீதும் தங்களுக்கு இருக்கும் அன்பிலே தணிந்துபோவார்கள் என்றெல்லாம் சொன்னார்.​—⁠மத்தேயு 24:9-12.

3. மத்தேயு 24:14-⁠ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் ஏன் உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றன?

3 சோர்வூட்டும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை முன்னறிவித்த பிறகே சீஷர்களை ஆச்சரியப்பட வைத்த அந்த விஷயத்தை இயேசு சொன்னார்: ‘ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்குமுள்ள சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.’ (மத்தேயு 24:14; NW) ஆம், இஸ்ரவேல் தேசத்தில் இயேசு ஆரம்பித்த வேலை, அதாவது ‘சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்கும்’ வேலை, தொடர்ந்து நடைபெற இருந்தது, அதோடு உலகளவிலும் விரிவடைய இருந்தது. (யோவான் 18:37) பிரமிக்க வைக்கும் எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசனம்! “சகல தேசத்தாருக்கும்” நற்செய்தியை அறிவிக்க வேண்டிய அந்த வேலை சவால்மிக்க வேலையாக இருக்கும்; அதுவும் ‘சகல ஜனங்களுடைய பகைமைக்கு’ மத்தியில் அந்த வேலையை விரிவாக்குவது நிச்சயமாகவே ஓர் அற்புதமாய் இருக்கும். இந்த இமாலயப் பணி நிறைவுபெறுவது யெகோவாவின் பேரரசுரிமையையும் வல்லமையையும் மட்டுமல்ல, அவருடைய அன்பு, இரக்கம், பொறுமை ஆகிய குணங்களையும் மகிமைப்படுத்தும். அதோடு, விசுவாசத்தையும் பக்தியையும் காண்பிக்க அவருடைய ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பையும் அளிக்கும்.

4. சாட்சி கொடுக்கும் வேலையைச் செய்யுமாறு யாருக்குக் கட்டளையிடப்பட்டது, இயேசு என்ன ஆறுதலை அளித்தார்?

4 தம்முடைய சீஷர்கள் பிரமாண்டமான ஒரு வேலை செய்ய வேண்டும் என்பதை இயேசு மிகத் தெளிவாக அவர்களிடம் சொன்னார். பரலோகத்திற்குச் செல்லும் முன், அவர்களுக்குக் காட்சியளித்து, இவ்வாறு சொன்னார்: “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.” (அப்போஸ்தலர் 1:8) சீக்கிரத்தில் வேறு பலரும்கூட அவர்களோடு அந்த வேலையில் ஈடுபட இருந்தார்கள். என்றாலும், சீஷர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருந்தது. கடவுள் கொடுத்த அந்த வேலையைச் செய்து முடிக்க அவருடைய பரிசுத்த ஆவி தங்களைப் பலப்படுத்தும் என்பதை அறிந்து அவர்கள் எவ்வளவாய் ஆறுதல் அடைந்திருப்பார்கள்!

5. சாட்சி கொடுக்கும் வேலையைப் பற்றி சீஷர்கள் எதை அறிந்திருக்கவில்லை?

5 நற்செய்தியைப் பிரசங்கித்து, ‘சகல தேசத்தாரையும் சீஷராக்க’ வேண்டும் என்பதை அந்தச் சீஷர்கள் அறிந்திருந்தார்கள். (மத்தேயு 28:19, 20, NW) ஆனால் எந்தளவுக்குச் சாட்சி கொடுக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை, எப்போது முடிவு வரும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. நாமும் அறியாதிருக்கிறோம். யெகோவா மட்டுமே முடிவுசெய்ய வேண்டிய விஷயங்கள் அவை. (மத்தேயு 24:36) தமக்குத் திருப்திதரும் அளவுக்குச் சாட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது என யெகோவா எப்போது நினைக்கிறாரோ, அப்போது இந்தப் பொல்லாத உலகிற்கு அவர் முடிவைக் கொண்டுவருவார். யெகோவா விருப்பப்பட்ட அளவுக்குப் பிரசங்க வேலை நடந்து முடிந்திருக்கிறது என்பதை அப்போதுதான் கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்வார்கள். இந்தக் கடைசி காலத்திலே இத்தனை பிரமாண்டமான அளவில் சாட்சி கொடுக்கப்படும் என்பதை அந்த ஆரம்பகால சீஷர்கள் கற்பனைசெய்துகூட பார்த்திருக்க மாட்டார்கள்.

முதல் நூற்றாண்டில் சாட்சி கொடுக்கும் வேலை

6. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே தினத்தன்றும், அதற்குச் சற்றுப் பின்னரும் என்ன நடந்தது?

6 முதல் நூற்றாண்டில் நடைபெற்ற ராஜ்ய பிரசங்கிப்பு வேலையும் சீஷராக்கும் வேலையும் ஆச்சரியப்படத்தக்க பலன்களைக் கொடுத்தன. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே தினத்தன்று, சுமார் 120 சீஷர்கள் எருசலேமில் ஒரு மேல்மாடியில் இருந்தார்கள். கடவுளுடைய பரிசுத்த ஆவி அவர்கள்மீது ஊற்றப்பட்டது; இந்த அற்புத நிகழ்ச்சியின் அர்த்தத்தை விளக்கி அப்போஸ்தலன் பேதுரு மனதைத் தட்டியெழுப்பும் ஒரு பேச்சைக் கொடுத்தார்; ஏறக்குறைய 3,000 பேர் விசுவாசிகளாகி, முழுக்காட்டப்பட்டார்கள். அது வெறும் ஓர் ஆரம்பமாகவே இருந்தது. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையைத் தடுத்துநிறுத்த மதத் தலைவர்கள் தீவிர முயற்சிகள் எடுத்தபோதிலும், “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.” சீக்கிரத்தில், ‘அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாக ஆனது.’ அதன்பின், “திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.”​—⁠அப்போஸ்தலர் 2:1-4, 8, 14, 41, 47; 4:4; 5:14.

7. கொர்நேலியு மதம் மாறியது குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் என ஏன் சொல்லலாம்?

7 பொ.ச. 36-⁠ல், குறிப்பிடத்தக்க மற்றொரு சம்பவமும் நடந்தது​—⁠புறஜாதியரான கொர்நேலியு மதம் மாறி, முழுக்காட்டுதல் பெற்ற சம்பவமே அது. தேவபக்திமிக்க இந்த மனிதரிடம் அப்போஸ்தலன் பேதுருவை யெகோவா அனுப்பியபோது, “சகல ஜனங்களையும் சீஷராக்க” வேண்டும் என்ற இயேசுவின் கட்டளை பல்வேறு தேசங்களிலிருந்த யூதர்களை மட்டுமே குறிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். (அப்போஸ்தலர் 10:44, 46) பிரசங்க வேலையை முன்னின்று நடத்தியவர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்? புறஜாதியாருக்கும்கூட, அதாவது யூதரல்லாதவர்களுக்கும்கூட, நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதை அப்போஸ்தலர்களும் யூதேயாவிலிருந்த மூப்பர்களும் புரிந்துகொண்டபோது, அவர்கள் தேவனை மகிமைப்படுத்தினார்கள். (அப்போஸ்தலர் 11:1, 18) இதற்கிடையே, பிரசங்க வேலை யூதர்கள் மத்தியில் தொடர்ந்து பலன் அளித்துக்கொண்டிருந்தது. சில வருடங்கள் கழித்து, ஒருவேளை பொ.ச. 58 வாக்கில், புறஜாதியரான விசுவாசிகளைத் தவிர, ‘அநேகமாயிரம் [யூத] விசுவாசிகளும் இருந்தார்கள்.’​—⁠அப்போஸ்தலர் 21:20.

8. ஆட்கள்மீது நற்செய்தி எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

8 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையில் மகத்தான அதிகரிப்பு ஏற்பட்டது என்றாலும், அந்த எண்ணிக்கை ஆட்களையே குறித்தது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அந்த ஆட்கள் செவிகொடுத்துக்கேட்ட பைபிள் செய்தி வலிமைமிக்கதாக இருந்தது. (எபிரெயர் 4:12) அதை மனதார ஏற்றுக்கொண்ட ஆட்களின் வாழ்க்கையை அது அடியோடு மாற்றியது. அவர்கள் தங்களுடைய வாழ்க்கையைச் சுத்திகரித்தார்கள், புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொண்டார்கள், கடவுளோடு மீண்டும் ஒப்புரவானார்கள். (எபேசியர் 4:22, 23) இன்றும் அதுவே நடக்கிறது. நற்செய்தியை ஏற்றுக்கொள்கிறவர்கள் அனைவரும் நித்திய நித்தியமாக வாழும் எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.​—⁠யோவான் 3:16.

தேவனுக்கு உடன்வேலையாட்கள்

9. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தங்களுக்கு என்ன பாக்கியமும் பொறுப்பும் இருந்ததை அறிந்திருந்தார்கள்?

9 பிரசங்க வேலையில் கிடைத்த பலன்களுக்குத் தாங்களே காரணமென்று ஆரம்பகால கிறிஸ்தவர்கள் உரிமைபாராட்டவில்லை. ‘பரிசுத்த ஆவியின் பலத்தினாலேயே’ தங்களுடைய பிரசங்க வேலை நடைபெற்றது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். (ரோமர் 15:13, 18ஆ, 19) ஆன்மீக வளர்ச்சிக்கு யெகோவாவே காரணராக இருந்தார். அதேசமயத்தில், ‘தேவனுக்கு உடன்வேலையாட்களாக’ சேவை செய்யும் பாக்கியமும் பொறுப்பும் தங்களுக்கு இருந்ததை அந்தக் கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தார்கள். (1 கொரிந்தியர் 3:6-9) எனவே, இயேசுவின் அறிவுரைப்படி, தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலையில் விறுவிறுப்புடன் ஈடுபட்டார்கள்.​—⁠லூக்கா 13:24.

10. சகல ஜனங்களுக்கும் சாட்சி கொடுப்பதற்காக ஆரம்பகால கிறிஸ்தவர்கள் என்ன முயற்சிகள் எடுத்தார்கள்?

10 ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருந்த’ பவுல், தரை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, ஆசியாவிலிருந்த ரோம மாகாணத்திலும், கிரேக்க நாட்டிலும் ஏராளமான சபைகளை ஸ்தாபித்தார். (ரோமர் 11:13) ரோமுக்கும், ஏன் ஸ்பெயினுக்கும்கூட அவர் பயணம் செய்தார். இதற்கிடையே, ‘விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்’ பொறுப்பைப் பெற்றிருந்த அப்போஸ்தலன் பேதுரு, அச்சமயத்தில் யூத மதத்தின் முக்கிய மையமாகத் திகழ்ந்த பாபிலோனில் ஊழியம் செய்ய வேறுவழியாய்ப் பயணம் செய்தார். (கலாத்தியர் 2:7-9; 1 பேதுரு 5:13) கர்த்தருடைய வேலைக்காகப் பாடுபட்ட வேறு பலரில், திரிபேனாள், திரிபோசாள் போன்ற பெண்களும் இருந்தார்கள். பெர்சியாள் என்ற மற்றொரு பெண்ணும், ‘கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்டதாக’ சொல்லப்படுகிறது.​—⁠ரோமர் 16:12.

11. சீஷர்களுடைய முயற்சிகளை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?

11 அவர்களுடைய முயற்சிகளையும், பக்திவைராக்கியமிக்க வேறுபல ஊழியர்களுடைய முயற்சிகளையும் யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்தார். சகல தேசத்தாருக்கும் சாட்சி கொடுக்கப்படும் என இயேசு முன்னறிவித்து, 30-⁠க்கும் குறைவான வருடங்கள் கழித்து, ‘அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டது’ என பவுல் எழுதினார். (கொலோசெயர் 1:23) அப்போது முடிவு வந்ததா? ஆம், ஒருவிதத்தில் வந்தது. எருசலேமையும் அதன் ஆலயத்தையும் ரோமப் படைகள் அழித்தபோது, பொ.ச. 70-⁠ல் யூத ஒழுங்குமுறைக்கு முடிவு வந்தது. என்றாலும், சாத்தானின் இந்தப் பொல்லாத உலகத்தை முழுமையாக அழிப்பதற்கு முன் அதைவிட மிகப் பெரியளவில் சாட்சி கொடுக்கும் வேலை நடைபெற வேண்டுமென யெகோவா தீர்மானித்திருந்தார்.

இன்று சாட்சி கொடுக்கும் வேலை

12. ஆரம்பகால பைபிள் மாணாக்கர்கள் பிரசங்கிப்பதற்கான கட்டளையை எப்படிப் புரிந்துகொண்டார்கள்?

12 விசுவாசதுரோகம் மேலோங்கியிருந்த ஒரு நீண்ட காலப்பகுதிக்குப் பிறகு, 19-⁠ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தூய வணக்கம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டது. பூமியின் கடைசி பரியந்தம் சீஷராக்க வேண்டுமென்ற கட்டளையை பைபிள் மாணாக்கர்கள் (இன்றைய யெகோவாவின் சாட்சிகள்) தெளிவாகப் புரிந்துகொண்டார்கள். (மத்தேயு 28:19, 20) 1914-⁠க்குள்ளாக, சுமார் 5,100 பேர் பிரசங்க வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள், நற்செய்தி அப்போது 68 நாடுகளை எட்டியிருந்தது. என்றாலும், மத்தேயு 24:14-⁠ன் அர்த்தத்தை அந்த ஆரம்பகால பைபிள் மாணாக்கர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. பைபிள் சங்கங்கள் 19-⁠ம் நூற்றாண்டின் இறுதிக்குள், சுவிசேஷத்தை, அதாவது நற்செய்தியை, உள்ளடக்கிய பைபிளை ஏராளமான மொழிகளில் மொழிபெயர்த்து, அச்சடித்து, உலகெங்கும் விநியோகித்திருந்தன. இதன் காரணமாக, சகல தேசத்தாருக்கும் சாட்சி கொடுக்கப்பட்டுவிட்டது என பைபிள் மாணாக்கர்கள் சில பத்தாண்டுகளுக்கு நினைத்துக்கொண்டிருந்தார்கள்.

13, 14. கடவுளுடைய சித்தத்தையும் நோக்கத்தையும் பற்றிய என்ன தெளிவான புரிந்துகொள்ளுதலை 1928-⁠ம் வருடத்தின் ஒரு காவற்கோபுர இதழ் அளித்தது?

13 தமது சித்தத்தையும் நோக்கத்தையும் குறித்து யெகோவா படிப்படியாகத் தம்முடைய ஜனங்களுக்குத் தெளிவுபடுத்தினார். (நீதிமொழிகள் 4:18) டிசம்பர் 1, 1928 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகை இவ்வாறு கூறியது: “பைபிள் விநியோகிப்பை வைத்து, முன்னறிவிக்கப்பட்டபடியே ராஜ்ய நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டுவிட்டது என நாம் சொல்லிவிட முடியுமா? நிச்சயமாகவே இல்லை! பைபிள் இப்படி விநியோகிக்கப்பட்டிருந்தாலும், பூமியிலுள்ள கடவுளது சிறிய தொகுதியான சாட்சிகள், கடவுளுடைய [நோக்கத்தை] விளக்கி பிரசுரங்களை அச்சடிப்பது அவசியம், அதோடு அந்த பைபிள்களை பெற்றுக்கொண்ட ஜனங்களைச் சென்று சந்திப்பதும் அவசியம். இல்லையென்றால், நம்முடைய நாளில் மேசியானிய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விஷயம் அவர்களுக்குத் தெரியாமலேயே போய்விடும்.”

14 அதே காவற்கோபுர இதழ் தொடர்ந்து இவ்வாறு குறிப்பிட்டது: “1920-⁠ல், . . . மத்தேயு 24:14-⁠ல் உள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசனத்தின் அர்த்தத்தை பைபிள் மாணாக்கர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள். புறஜாதியாருக்கு அல்லது எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்பட வேண்டிய ‘இந்த நற்செய்தியானது,’ இனி வரக்கூடிய ஒரு ராஜ்யத்தைப் பற்றி அல்ல, ஆனால் பூமியின் மீது ஏற்கெனவே ஆட்சிசெய்ய ஆரம்பித்துவிட்ட மேசியானிய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி என்பதை அப்போது அவர்கள் புரிந்துகொண்டார்கள்.”

15. சாட்சி கொடுக்கும் வேலை 1920-களிலிருந்து எவ்வாறு அதிகரித்திருக்கிறது?

15 அந்த ‘சிறிய தொகுதியான சாட்சிகள்,’ 1920-களில் இருந்ததைப் போல் எப்போதும் சிறிய தொகுதியாகவே இருந்துவிடவில்லை. பின்வந்த பத்தாண்டுகளில், ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்த ‘திரள்கூட்டத்தார்’ அடையாளம் காணப்பட்டு, கூட்டிச்சேர்க்கப்பட்டார்கள். (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9) இன்று, 66,13,829 பேர், உலகெங்குமுள்ள 235 நாடுகளில் நற்செய்தியைப் பிரசங்கித்து வருகிறார்கள். தீர்க்கதரிசனத்தின் எப்பேர்ப்பட்ட மகத்தான நிறைவேற்றம்! “ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி” முன்னொருபோதும் இல்லாதளவு பிரமாண்டமான அளவில் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, பூமியில் முன்னொருபோதும் இல்லாதளவு யெகோவாவுக்கு உண்மையுள்ள ஊழியர்கள் இருக்கிறார்கள்.

16. கடந்த ஊழிய ஆண்டில் என்ன நிறைவேற்றப்பட்டது? (பக்கங்கள் 27-30-⁠ல் உள்ள அட்டவணையைக் காண்க.)

16 மகா திரளான இந்தச் சாட்சிகள் 2005 ஊழிய ஆண்டில் படு மும்முரமாய் ஊழியத்தில் ஈடுபட்டார்கள். 235 நாடுகளில், நூறுகோடிக்கும் அதிகமான மணிநேரத்தை பிரசங்க வேலையில் செலவிட்டார்கள். லட்சக்கணக்கான மறுசந்திப்புகளைச் செய்தார்கள், லட்சக்கணக்கான பைபிள் படிப்புகளை நடத்தினார்கள். கடவுளுடைய வார்த்தையை மற்றவர்களிடம் பிரசங்கிக்கும் அந்த வேலையைச் செய்வதற்காக யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய நேரத்தையும் வளங்களையும் இலவசமாய்க் கொடுத்திருக்கிறார்கள். (மத்தேயு 10:8) தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு வல்லமை வாய்ந்த தமது பரிசுத்த ஆவியினால் தமது ஊழியர்களை யெகோவா தொடர்ந்து பலப்படுத்துகிறார்.​—⁠சகரியா 4:6.

சாட்சி கொடுப்பதில் தீவிரம்

17. நற்செய்தியைப் பிரசங்கிப்பது பற்றிய இயேசுவின் வார்த்தைகளுக்கு யெகோவாவின் ஜனங்கள் எப்படிப் பிரதிபலித்து வருகிறார்கள்?

17 நற்செய்தி பிரசங்கிக்கப்படும் என்று இயேசு முன்னறிவித்து, கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் உருண்டோடிவிட்டிருந்தாலும், அந்த வேலையைச் செய்ய கடவுளுடைய மக்களுக்கு இருக்கும் பக்திவைராக்கியம் கொஞ்சமும் தணியவில்லை. நல்ல காரியங்களை விடாது செய்துவரும்போது அன்பு, இரக்கம், பொறுமை ஆகிய யெகோவாவின் குணங்களைப் பிரதிபலிக்கிறோம் என்பதை நாம் அறிவோம். ஒருவரும் அழிந்துபோகாமல், எல்லாருமே மனந்திரும்பி யெகோவாவிடம் ஒப்புரவாக வேண்டுமென்று அவரைப் போலவே நாம் விரும்புகிறோம். (2 கொரிந்தியர் 5:18-20; 2 பேதுரு 3:9) யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய ஆவியிலே அனலுள்ளவர்களாய், பூமியின் கடைசி பரியந்தம் தொடர்ந்து நற்செய்தியை அறிவித்து வருகிறார்கள். (ரோமர் 12:11) இதன் விளைவாக, நாலாபுறமிருந்தும் ஜனங்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, யெகோவாவின் அன்பான வழிநடத்துதலுக்கு இசைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்துவருகிறார்கள். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

18, 19. நற்செய்திக்கு இசைவாக வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைச் செய்த சிலருடைய அனுபவங்களை உங்களால் சொல்ல முடியுமா?

18 மேற்கு கென்யாவைச் சேர்ந்த சார்ல்ஸ் என்பவர் ஒரு விவசாயி. 1998-⁠ல், 8,000-⁠க்கும் அதிகமான கிலோ எடையுள்ள புகையிலையை அவர் விற்பனை செய்தார்; இதன் காரணமாக, ‘மிகச் சிறந்த புகையிலை விவசாயி’ என்ற சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில்தான், பைபிளை அவர் படிக்கத் தொடங்கினார். புகையிலை உற்பத்தியில் ஈடுபடுகிற ஒரு நபர் பிறரை நேசிக்க வேண்டுமென்ற இயேசுவின் கட்டளையை மீறுகிறார் என்பதைச் சீக்கிரத்திலேயே அவர் புரிந்துகொண்டார். (மத்தேயு 22:39) ‘மிகச் சிறந்த புகையிலை விவசாயி’ உண்மையில் ‘மிகச் சிறந்த கொலையாளியே’ என்பதைப் புரிந்துகொண்டவுடன், தன்னுடைய புகையிலை செடிகள் மீதெல்லாம் விஷத்தைத் தெளித்தார். பின்னர், கடவுளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றார்; இப்போது ஒழுங்கான பயனியராகவும் உதவி ஊழியராகவும் சேவை செய்கிறார்.

19 சந்தேகமே இல்லை, உலகளவில் நடைபெறும் இந்தச் சாட்சி கொடுக்கும் வேலையின் மூலம் யெகோவா தேசங்களை அசைத்துக்கொண்டிருக்கிறார்; இதனால் விரும்பப்பட்ட ஜனங்கள் உள்ளே வந்துகொண்டிருக்கிறார்கள். (ஆகாய் 2:7) போர்ச்சுகல் நாட்டில் வசிக்கும் பேத்ரூ என்பவர், தன் 13 வயதில் ஒரு செமினரியில் சேர்ந்தார். ஒரு மிஷனரியாகி, ஜனங்களுக்கு பைபிளைக் கற்பிக்க வேண்டுமென்பதே அவருடைய இலட்சியமாக இருந்தது. ஆனால், கொஞ்ச காலத்திற்குள், செமினரியிலிருந்து அவர் வெளியேறினார், காரணம், அங்கு நடத்தப்பட்ட வகுப்புகளில் பைபிளைப் பற்றி அவ்வளவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆறு வருடங்கள் கழித்து, லிஸ்பனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மனோதத்துவம் படிக்க ஆரம்பித்தார். யெகோவாவின் சாட்சியாக இருந்த தன் சித்தியின் வீட்டில் அவர் தங்கியிருந்தார்; அவருடைய சித்தி பைபிளைப் படிக்கும்படி அவரை ஊக்கப்படுத்தினார். கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்பதில் பேத்ரூவுக்கு அப்போது குழப்பமாக இருந்தது, பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்று இரு மனதாகவும் இருந்தார். முடிவெடுக்கத் தெரியாத தன்னுடைய நிலையைக் குறித்து தன் மனோதத்துவ பேராசிரியரிடம் பேசினார். முடிவெடுக்கத் தெரியாத ஜனங்கள் தங்களையே சீரழித்துக்கொள்வார்கள் என மனோதத்துவம் கற்பிப்பதாக அந்தப் பேராசிரியர் சொன்னார். அவர் அப்படிச் சொன்னதுமே, பேத்ரூ பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார். சமீபத்தில் அவர் முழுக்காட்டுதல் பெற்றார், இப்போது மற்றவர்களுக்கு பைபிள் படிப்புகளை நடத்திவருகிறார்.

20. ஜனங்களுக்குச் சாட்சி கொடுக்கும் வேலை இந்தளவு பிரமாண்டமாக நடைபெறுவதை அறிந்து நாம் ஏன் அகமகிழலாம்?

20 ஜனங்களுக்கு எந்தளவு சாட்சி கொடுக்கப்படும் என்று நமக்கு இன்னமும் தெரியாது, எந்த நாளில், எந்த நாழிகையில் முடிவு வரும் என்றும் நமக்குத் தெரியாது. அது சீக்கிரத்தில் வரும் என்று மட்டுமே நமக்குத் தெரியும். நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலை இந்தளவு பிரமாண்டமாக நடைபெறுவது, கடவுளுடைய ராஜ்யம் மனித அரசாங்கங்களை நீக்கிப்போடுவதற்கான சமயம் நெருங்கி வந்திருப்பதற்கான அநேக அடையாளங்களில் ஒன்று என்பதை அறிந்து நாம் அகமகிழ்கிறோம். (தானியேல் 2:44) ஒவ்வொரு வருடமும், நற்செய்திக்குச் செவிசாய்ப்பதற்கான வாய்ப்பு லட்சக்கணக்கானோருக்குக் கொடுக்கப்படுகிறது; இது நம்முடைய கடவுளான யெகோவாவை மகிமைப்படுத்துகிறது. எனவே, கடைசிவரை உண்மையோடு இருக்க தீர்மானமுள்ளவர்களாய் இருப்போமாக; உலகெங்குமுள்ள நம் சகோதரர்களுடன் சேர்ந்து சகல தேசத்தாருக்கும் சாட்சி கொடுக்கும் வேலையில் மும்முரமாய் ஈடுபடுவோமாக! அவ்வாறு செய்வதன் மூலம், நம்மையும், நம் உபதேசங்களைக் கேட்பவர்களையும் நாம் இரட்சித்துக்கொள்வோம்.​—⁠1 தீமோத்தேயு 4:16.

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

• மத்தேயு 24:14-ஐ ஏன் குறிப்பிடத்தக்க ஒரு தீர்க்கதரிசனம் எனச் சொல்லலாம்?

• ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பிரசங்க வேலைக்காக என்ன முயற்சிகளை எடுத்தார்கள், அதனால் விளைந்த பலன்கள் யாவை?

• சகல ஜனங்களுக்கும் சாட்சி கொடுக்க வேண்டும் என்பதை பைபிள் மாணாக்கர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள்?

• யெகோவாவின் மக்களுடைய கடந்த ஆண்டு ஊழிய அறிக்கையைச் சிந்திக்கும்போது, எது உங்கள் மனதைக் கவருகிறது?

[பக்கம் 27-30-ன் அட்டவணை]

2005 உலகளாவிய யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய ஆண்டு அறிக்கை

(பவுண்டு வால்யூமைப் பார்க்கவும்)

[பக்கம் 25-ன் தேசப்படம்/படங்கள்]

பவுல், தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து நற்செய்தியைப் பிரசங்கித்தார்

[பக்கம் 24-ன் படம்]

கொர்நேலியுவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் சாட்சி கொடுக்கச் சொல்லி பேதுருவை யெகோவா அனுப்பினார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்