உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w06 9/15 பக். 2-3
  • “கடைசி நாட்கள்”—எவை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கடைசி நாட்கள்”—எவை?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • இதே தகவல்
  • நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • கடைசி நாட்கள் எப்போது ஆரம்பித்தன?
    விழித்தெழு!—2008
  • கடவுளுடைய ராஜ்யம் பிறக்கிறது!
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • ஆவி உலகில் நமது மிகச்சிறந்த நண்பர் இருக்கிறார்
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
w06 9/15 பக். 2-3

“கடைசி நாட்கள்”​—⁠எவை?

உங்களுக்கும் உங்கள் அன்பானவர்களுக்கும் எதிர்காலம் எப்படியிருக்குமோ என கவலைப்படுகிறீர்களா? உலக சம்பவங்களால் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுமா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக மீடியாவில் வரும் செய்திகளை அநேகர் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். ஆனால், கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட புத்தகமாகிய பைபிளை ஆழ்ந்து படித்தால் இது சம்பந்தமான விஷயங்களை தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். ஏனெனில், தற்போது நடைபெறும் காரியங்களைப் பற்றி மட்டுமல்லாமல், இனிவரப்போகும் காரியங்களைப் பற்றியும் பைபிள் வெகு காலத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறது.

உதாரணமாக, இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, தாம் சென்ற இடங்களில் எல்லாம் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கித்தார். (லூக்கா 4:43) அவருக்கு செவிகொடுத்த ஜனங்கள், அருமையான அந்த ராஜ்யம் எப்போது வருமென்று தெரிந்துகொள்ள விரும்பியதில் ஆச்சரியமில்லை. அவருடைய சீஷர்களும்கூட, இயேசு அநியாயமாக கொலை செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவரிடம் பின்வருமாறு கேட்டனர்: “[அரசராக] உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” (மத்தேயு 24:3) அந்த ராஜ்யம், பூமியை அதன் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாகக் கொண்டுவரும் நாள் யெகோவா தேவனுக்கு மட்டுமே துல்லியமாகத் தெரியும் என்று இயேசு அவர்களிடம் கூறினார். (மத்தேயு 24:36; மாற்கு 13:32) என்றாலும், கிறிஸ்து அரசராக ஆட்சி செய்கையில் அதற்கு அத்தாட்சியாக பூமியில் நடைபெறவிருந்த சில சம்பவங்களை அவரும் மற்றவர்களும் முன்னறிவித்தனர்.

இந்தப் பொல்லாத உலகின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்கிறோம் என்பதை நிரூபிக்கும் நேரடி அத்தாட்சிகளை இப்போது நாம் கலந்தாராயப்போகிறோம். (2 தீமோத்தேயு 3:1) அதற்கு முன், பரலோகத்தில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை சுருக்கமாகச் சிந்திக்கலாம். இயேசு கிறிஸ்து 1914-⁠ல் பரலோகத்தில் ராஜாவாக முடிசூட்டப்பட்டார்.a (தானியேல் 7:13, 14) அரசதிகாரத்தைப் பெற்றவுடனே, அவர் ஒரு நடவடிக்கை எடுத்தார். அதை பைபிள் பின்வருமாறு விவரிக்கிறது: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம்” பண்ணினார்கள். (வெளிப்படுத்துதல் 12:7) பரலோக ஸ்தானத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவே “பிரதான தூதனாகிய மிகாவேல்.”b (யூதா 9; 1 தெசலோனிக்கேயர் 4:16) வலுசர்ப்பம் என்பது பிசாசாகிய சாத்தானைக் குறிக்கிறது. இந்த யுத்தத்தில் சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்த பொல்லாத பேய்களுக்கும் என்னவாயிற்று? யுத்தத்தில் அவர்கள் தோல்வி அடைந்தார்கள், பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பூமிக்கு அருகில் “தள்ளப்பட்டார்கள்.” (வெளிப்படுத்துதல் 12:9) இதன் காரணமாக, ‘பரலோகங்களும் அவைகளில் வாசமாயிருக்கிறவர்களும்’ அதாவது, கடவுளுக்கு உண்மையுள்ள ஆவி குமாரர்களும் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், மனிதர்களோ சந்தோஷப்படவில்லை. ‘பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ’ என்று பைபிள் முன்னறிவித்தது. “பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்” என்றும் முன்னறிவித்தது.​—⁠வெளிப்படுத்துதல் 12:12.

கடுங்கோபத்தில் இருக்கும் சாத்தான், பூமியில் குடியிருப்போருக்கு கஷ்டத்தையும் துன்பத்தையும் கொண்டுவந்திருக்கிறான். இருந்தாலும், அந்தக் கஷ்டம் ‘கொஞ்சகாலமாத்திரமே’ நீடிக்கும். இந்தக் காலப்பகுதியை “கடைசி நாட்கள்” என்பதாக பைபிள் அழைக்கிறது. சாத்தானின் செல்வாக்கு பூமியிலிருந்து சீக்கிரத்திலேயே ஒழிக்கப்படும் என்பதைக் குறித்து நாம் சந்தோஷப்படலாம். ஆனால், நாம் கடைசி நாட்களில்தான் வாழ்கிறோம் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?

[அடிக்குறிப்புகள்]

a காவற்கோபுரம், ஜூலை 15, 2006 பக்கங்கள் 6-7-ஐக் காண்க.

b கூடுதல் தகவல் பெற, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 218-19-ஐப் பார்க்கவும். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 2-ன் படங்களுக்கான நன்றி]

COVER: Foreground: © Chris Stowers/​Panos Pictures; background: FAROOQ NAEEM/​AFP/​Getty Images

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்