உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 12/15 பக். 30
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • யாக்கோபுக்குச் சொத்து கிடைக்கிறது
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • யாக்கோபும் ஏசாவும் சமாதானமாகிறார்கள்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • எதிரும் புதிருமான இரட்டையர்கள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 12/15 பக். 30

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:

• “பழைய ஏற்பாடு” ஏன் எக்காலத்திற்கும் பயனுள்ளதாக இருக்கிறது?

ஈவிரக்கமில்லாத ஏதோவொரு கடவுளல்ல, அன்பான கடவுளாகிய யெகோவாவே அதன் ஆசிரியர். இயேசுவும் அவருடைய ஆரம்பகால சீஷர்களும் எபிரெய வேதாகமத்தை எப்போதும் பயன்படுத்தினார்கள். அன்றாட வாழ்க்கைக்கு உதவும் ஆலோசனைகள் அதில் உள்ளன, அருமையான எதிர்கால நம்பிக்கையையும் அது அளிக்கிறது.—9/1, பக்கங்கள் 4-7.

• ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபிறகு காலத்தை அனுமதித்திருப்பதால் என்ன நிரூபிக்கப்பட்டிருக்கிறது?

இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சாத்தான் ஒரு பொய்யன் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது; ஏனென்றால், ஆதாமும் ஏவாளும் அவர்களுடைய பரம்பரையில் வந்த கோடிக்கணக்கான மக்களும் மரித்திருக்கிறார்கள். மனிதர்கள், கடவுளை விட்டுப் பிரிந்து சுதந்திரமாகச் செயல்பட்டால் வெற்றிகரமாக வாழ முடியாதென்றும் தங்களுடைய நடைகளை நடத்துவதற்கான உரிமையோ திறமையோ அவர்களுக்கு இல்லையென்றும் காலம் காட்டியிருக்கிறது.—9/15, பக்கங்கள் 6-7.

• ஏசாவைப்போல் நடித்ததற்காக யாக்கோபு ஏன் கண்டனம் செய்யப்படவில்லை?

ஏசாவிடமிருந்து சேஷ்ட புத்திரபாகத்தை, அதாவது தலைமகன் உரிமையை யாக்கோபு வாங்கியிருந்ததால், தன் தகப்பனின் ஆசீர்வாதத்தைப் பெற அவருக்கு உரிமை இருந்தது. ஈசாக்கு தான் யாக்கோபை ஆசீர்வதித்ததை அறிந்தபோது, அதை மாற்றுவதற்கு முயற்சி செய்யவில்லை. கடவுள் நினைத்திருந்தால் அந்த விஷயத்தில் குறுக்கிட்டிருந்திருக்கலாம்; ஆனால் அவர் அந்த ஆசீர்வாதத்தை யாக்கோபு பெற்றுக்கொள்ள வேண்டுமென்றே விரும்பினார்.—10/1, பக்கம் 31.

• நமக்கு மனசாட்சி இருப்பது மனிதர்கள் பரிணாமத்தினால் உருவானவர்களல்ல என்பதை எப்படி நிரூபிக்கிறது?

எல்லா இனங்களிலும் கலாச்சாரங்களிலும் மற்றவர்களுக்கு உதவிசெய்ய மக்கள் மனமுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்; அதனால் தங்களுக்கு ஆபத்து வந்தாலும்கூட அப்படிச் செய்ய மனமுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். என்ன ஆனாலும்சரி தான் வாழ்ந்தால் போதும் என நினைக்கிற மிருகங்களைப்போல மனிதன் இருந்தால் அத்தகைய தன்னலமற்ற மனப்பான்மையை அவனிடம் எதிர்பார்க்க முடியாது.—10/15, பக்கம் 20.

• கடவுள் மனத்தாழ்மையுள்ளவர் என நாம் ஏன் சொல்லாம், அதை அவர் எப்படி வெளிக்காட்டுகிறார்?

கடவுள் உன்னத பேரரசராகவும் படைப்பாளராகவும் இருப்பதால், அவருக்கு நம்மைப்போல் வரம்பு எதுவும் கிடையாது. என்றாலும் 2 சாமுவேல் 22:36-ல் சொல்லப்பட்டபடி, தமக்குப் பிரியமாக நடக்க முயலுகிற அற்ப மனிதரிடம் கடவுள் அக்கறை காட்டுகிறார், இரக்கம் காட்டுகிறார்; இதுதானே அவர் காருணியமுள்ளவர் அதாவது, தாழ்மையுள்ளவர் என்பதைத் தெரிவிக்கிறது. தமக்குப் பயந்து நடப்போருக்கு அன்புடன் உதவுவதற்காக, ஒரு கருத்தில் யெகோவா பரலோகத்திலிருந்து குனிந்து பார்க்கிறார் என்றே சொல்லலாம்.—11/1, பக்கங்கள் 4-5.

• பண்டைய மண் ஓடுகள் பைபிள் பதிவை எவ்வாறு ஊர்ஜிதப்படுத்துகின்றன?

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சமாரியாவில் சில மண் ஓடுகளைக் கண்டுபிடித்தார்கள்; யோசுவா 17:1-6-ல் பதிவு செய்யப்பட்டுள்ள ஏழு குடும்பங்களின் பெயர்களை இவற்றில் காணமுடிகிறது. ஆராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மண் ஓடுகள், ஆசாரிய குடும்பங்களைப் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தியிருக்கின்றன; மேலும் அவற்றில் கடவுளுடைய பெயரும் காணப்படுகிறது. லாகீஸில் கண்டுபிடிக்கப்பட்ட மண் ஓடுகள், யூதாவை பாபிலோனியர் தாக்குவதற்கு முன்பு அங்கு நிலவிய அரசியல் சூழலையும் நெருக்கடி நிலையையும் தெளிவுபடுத்துகின்றன.—11/15, பக்கங்கள் 12-14.

• அப்போஸ்தலர் புத்தகத்தை லூக்காவே எழுதினார் என்ற முடிவுக்கு வர எது உதவுகிறது?

லூக்கா எழுதின சுவிசேஷமும் அப்போஸ்தலருடைய நடபடிகளும் தெயோப்பிலுவுக்கு எழுதப்பட்டதால் இந்த இரண்டு புத்தகங்களையுமே லூக்காதான் எழுதினார் என்ற முடிவுக்கு நாம் வரலாம். அப்போஸ்தலர் புத்தகத்தில், “நாங்கள்,” “எங்களுடைய,” “எங்களை” போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, சில சம்பவங்களின்போது மற்றவர்களுடன் லூக்காவும் இருந்தார் என்பதைக் காட்டுகிறது. (அப்போஸ்தலர் 16:8-15)—11/15, பக்கம் 18.

• வேட்டையாடுவதையும் மீன் பிடிப்பதையும் ஒரு கிறிஸ்தவர் எப்படிக் கருத வேண்டும்?

நோவாவின் காலம் முதற்கொண்டு மிருகங்களைக் கொன்று சாப்பிட கடவுள் அனுமதியளித்தார். இருந்தாலும், சாப்பிடுவதற்கு முன்பு இரத்தத்தை நீக்கிவிட வேண்டுமென அவர் கட்டளையிட்டார்; மிருகங்களுக்கு உயிர் கொடுத்தவர் கடவுள் என்பதால் அவற்றின் உயிருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதை இந்தக் கட்டளை வலியுறுத்துகிறது. கிறிஸ்தவர்கள் மிருகங்களை விளையாட்டுக்காகவோ அவற்றை விரட்டிப் பிடிப்பதிலும் சாகடிப்பதிலும் கிடைக்கும் ‘த்ரில்’லுக்காகவோ வேட்டையாடக்கூடாது. அவர்கள், அரசாங்கச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதும் மற்றவர்களுடைய மனசாட்சியைக் கருத்தில் கொள்வதும் முக்கியம். (ரோமர் 14:13)—12/1, பக்கம் 31.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்