உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 7/1 பக். 13
  • ஓர் இளைஞனின் தைரியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஓர் இளைஞனின் தைரியம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • இதே தகவல்
  • இயேசு அற்புதமாய் சுகப்படுத்தினார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • இயேசுவை பேதுரு மறுதலித்த சம்பவம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • உண்மையான நண்பர்களைக் கண்டுபிடிக்க...
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 7/1 பக். 13

இளம் வாசகருக்கு

ஓர் இளைஞனின் தைரியம்

செய்ய வேண்டியவை: ஓர் அமைதியான சூழலில் இந்த பைபிள் பகுதியை ஆழ்ந்து படியுங்கள். வசனங்களை வாசிக்கையில் நீங்களும் அங்கே இருப்பதுபோல் கற்பனை செய்யுங்கள். காட்சிகளை மனக்கண்ணில் ஓடவிடுங்கள். அங்கு ஒலிக்கும் சத்தங்களைக் கேளுங்கள். முக்கியக் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை உணர்ந்து பாருங்கள். அவற்றை நிஜ சம்பவங்களாய்க் கற்பனை செய்து பாருங்கள்.

நடந்ததை யோசித்துப் பாருங்கள்.—1 சாமுவேல் 17:1-11, 26, 32-51-ஐ வாசியுங்கள்.

உங்கள் மனக்கண்ணில் தெரிகிற கோலியாத்தின் தோற்றத்தையும் குரலையும் விவரியுங்கள். _______

_______

தாவீது, இஸ்ரவேலப் படைவீரனாக இல்லாதபோதிலும், கோலியாத்தை எதிர்த்துப் போரிட எது அவனைத் தூண்டியது? (26-ஆம் வசனத்தைப் பாருங்கள்.)

_______

தனக்கு யெகோவா உதவி செய்வார் என தாவீது நம்புவதற்கு என்ன காரணங்கள் இருந்தன? (வசனங்கள் 34-37-ஐ மறுபடியும் வாசியுங்கள்.)

_______

ஆழ்ந்து ஆராயுங்கள்.

ஆராய்ச்சி செய்வதற்கு உங்களிடமுள்ள பிரசுரங்களைப் பயன்படுத்தி, பின்வருபவற்றைக் கண்டுபிடிக்க முயலுங்கள்:

(1) கோலியாத்தின் உயரம். (1 சாமுவேல் 17:4)

ஆறு முழமும் ஒரு ஜாணும் = ________

(2) கோலியாத் அணிந்திருந்த போர்க்கவசத்தின் எடை. (1 சாமுவேல் 17:5)

5,000 சேக்கல் வெண்கலம் = __________

(3) கோலியாத் வைத்திருந்த ஈட்டியுடைய அலகின் எடை. (1 சாமுவேல் 17:7)

600 சேக்கல் இரும்பு = . _______

கற்றுக்கொண்டதைப் பொருத்துங்கள். என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை எழுதுங்கள்:

தைரியம் பற்றி.

_______

சுய பலத்தின் மீது சார்ந்திராமல் யெகோவாவின் மீது சார்ந்திருப்பது பற்றி.

_______

கூடுதல் கேள்விகள்.

கோலியாத் அளவுக்கு என்ன தடைகள் உங்களுக்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

_______

யெகோவா உங்களைக் கைவிட மாட்டார் என்பதை (உங்களுடைய அல்லது பிறருடைய) என்ன அனுபவங்கள் உங்களுக்கு உறுதியளிக்கின்றன?

_______

இந்தப் பதிவிலுள்ள எந்த விஷயம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஏன்?

_______

(w09 1/1)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்