உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா?
பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• தாயின் வயிற்றிலுள்ள குழந்தை செத்துவிட்டால் அதற்கு உயிர்த்தெழுதல் உண்டா?
கருத்தரிப்பின்போதே உயிர் ஆரம்பமாகிறது. ஒருவர் தன் வாழ்நாளில் எந்தச் சமயத்தில் இறந்திருந்தாலும் சரி, யெகோவாவினால் அவரை உயிர்த்தெழுப்ப முடியும்; ஏனெனில், “கடவுளால் எல்லாமே முடியும்.” (மாற். 10:27) என்றாலும், தாயின் வயிற்றிலேயே இறந்துபோகும் குழந்தையை அவர் உயிர்த்தெழுப்புவார் என்று பைபிளில் எங்குமே நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.—4/15, பக்கங்கள் 12, 13.
• எறும்பு, கற்பாறை வளைக்கரடி, வெட்டுக்கிளி, பல்லி ஆகியவற்றிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
இந்த நான்கிற்கும் இயல்பிலேயே ஞானம் இருக்கிறது. ஆகவே, இவை கடவுளுடைய ஞானத்தைப் பறைசாற்றுகின்றன. (நீதி. 30:24-28)—4/15, பக்கங்கள் 16-19.
• மௌனமாய் இருப்பது உகந்ததென்று பைபிள் ஏன் சொல்கிறது?
மௌனம் என்பது மரியாதைக்கு அடையாளமாக, தியானத்திற்கு அத்தியாவசியமாக, விவேகத்திற்கு அறிகுறியாக இருக்கலாம் என்று பைபிள் காட்டுகிறது. (சங். 37:7; 63:6; நீதி 11:12)—5/15, பக்கங்கள் 3-5.
• யெகோவாவுடைய வீட்டின்மீது அளவுகடந்த பக்திவைராக்கியத்தைக் காட்டிய யூதேய ராஜாக்கள் எத்தனை பேர்?
தெற்கு ராஜ்யமான யூதாவை பத்தொன்பது பேர் ஆட்சி செய்தார்கள்; அவர்களில் நான்கு பேரான ஆசா, யோசபாத், எசேக்கியா, யோசியா ஆகியோர் பக்திவைராக்கியத்தைக் காட்டியதில் குறிப்பிடத்தக்கவர்கள்.—6/15, பக்கங்கள் 7-11.
• பரலோக நம்பிக்கையுள்ள அனைவருமே ஆன்மீக உணவை வழங்குவதில் ஈடுபட்டு வருகிறார்களா?
இல்லை. பரலோக நம்பிக்கையுடையவர்கள் அனைவருமே உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பின் பாகமாக இருக்கிறார்கள். ஆனால், ஆளும் குழுவில் உள்ளவர்களே ஆன்மீக உணவு வழங்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.—6/15, பக்கங்கள் 22-24.
• அன்பு காட்டும் விஷயத்தில், மதத் தலைவர்களிடமிருந்து இயேசு எப்படிப் பெரிதும் வேறுபட்டார்?
மதத் தலைவர்கள் பாமர மக்கள்மீது கொஞ்சமும் அன்பு காட்டவில்லை; அதற்குப் பதிலாக அவர்களை இகழ்ந்தார்கள். கடவுள்மீதும் அவர்கள் அன்பு காட்டவில்லை. ஆனால், இயேசு தம் தகப்பன்மீது அன்பு காட்டினார், மக்களைக் கண்டு மனதுருகினார். (மத். 9:36) அவர்கள்மீது கனிவும் கரிசனையும் கருணையும் காட்டினார்.—7/15, பக்கம் 15.