உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 11/15 பக். 12-13
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • முக்காடு​—⁠எப்போது அவசியம், ஏன் அவசியம்?
    ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’
  • தலைமை ஸ்தானம்​—⁠சபையில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • பெண்கள்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 11/15 பக். 12-13

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

கிறிஸ்தவக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கொடுக்கப்படுகிற பேச்சுகளைச் சைகை மொழியில் மொழிபெயர்க்கும்போது ஒரு சகோதரி முக்காடு போடுவது அவசியமா?

பொதுவாக, குடும்பத்தில் கணவனுக்குரிய பொறுப்புகளை அல்லது சபையில் சகோதரர்கள் கையாள வேண்டிய பொறுப்புகளை ஒரு சகோதரி கையாளும்போது அவள் முக்காடு போடுவது அவசியமாய் இருக்கிறது. இது அப்போஸ்தலன் பவுல் கொடுத்துள்ள அறிவுரைக்கு இசைவாக இருக்கிறது. “ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண் தலையாக இருக்கிறான்” என்பதால், “ஜெபம் செய்கிறபோது அல்லது தீர்க்கதரிசனம் சொல்கிறபோது முக்காடு போடாத ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய தலையை அவமதிக்கிறாள்.” (1 கொ. 11:3-10) அதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு சகோதரி அடக்கமாக, தகுந்த விதத்தில் முக்காடு போட்டுக்கொள்ளும்போது அவள் கிறிஸ்தவ சபையின் தேவராஜ்ய ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதைக் காட்டுகிறாள்.—1 தீ. 2:11, 12.a

அப்படியானால், ஒரு சகோதரர் கொடுக்கும் பேச்சைச் சைகை மொழியில் மொழிபெயர்க்கும் ஒரு சகோதரி முக்காடு போட்டுக்கொள்ள வேண்டுமா? உண்மைதான், சகோதரர் சொல்கிற தகவல்களை மட்டும்தான் அந்தச் சகோதரி சபையாருக்குத் தெரிவிக்கிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், கற்பிப்பது அந்தச் சகோதரி அல்ல, அந்தச் சகோதரர்தான். என்றாலும், சைகை மொழியில் மொழிபெயர்ப்பு செய்வதற்கும் வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது. வேறு மொழிகளில் பேச்சுகள் மொழிபெயர்க்கப்படும்போது, சபையாரின் காதுகள் மொழிபெயர்ப்பவர் சொல்கிற விஷயங்களைக் கேட்டுக்கொண்டு இருந்தாலும், அவர்களுடைய கண்கள் பேச்சாளரைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கும். சகோதரிகள், சைகை மொழியில் அல்லாமல் வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும்போது அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் நின்றுகொண்டு மொழிபெயர்க்க மாட்டார்கள். சில சமயம் அவர்கள் உட்கார்ந்துகொண்டேயும்கூட மொழிபெயர்ப்பார்கள். ஒருவேளை அவர்கள் நின்றுகொண்டு மொழிபெயர்க்க வேண்டியிருந்தால், சபையாரைப் பார்த்தல்ல பேச்சாளரைப் பார்த்தே மொழிபெயர்ப்பார்கள். ஆகையால், வேறு மொழிகளில் மொழிபெயர்க்கும்போது அவர்கள் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால், சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் பேச்சுகளை மொழிபெயர்க்கையில், நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக அது ஒரு பெரிய திரையில் காட்டப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர் மட்டுமே பெரிதுபடுத்திக் காட்டப்படுவதால், சபையார் பேச்சாளரைப் பார்க்க முடியாமல்போகலாம். ஆகவே, சைகை மொழியில் மொழிபெயர்க்கிற சகோதரி, தான் வெறும் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பதை மனதில்கொண்டு முக்காடு போட்டுக்கொள்வது அவசியமாகிறது.

அப்படியானால், சபை பைபிள் படிப்பு, ஊழியக் கூட்டம், காவற்கோபுர படிப்பு ஆகியவற்றில் சொல்லப்படுகிற பதில்களையும், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கொடுக்கப்படுகிற பேச்சுகளையும், மற்ற நடிப்புகளையும் சைகை மொழியில் மொழிபெயர்க்கும்போது ஒரு சகோதரி முக்காடு போட்டுக்கொள்ள வேண்டுமா? கூட்டத்தை அந்தச் சகோதரி நடத்தவில்லை என்பது சபையார் எல்லாருக்கும் நன்கு தெரியும் என்பதால், சில சந்தர்ப்பங்களில் அந்தச் சகோதரி முக்காடு போட்டுக்கொள்ள வேண்டியதில்லை. உதாரணமாக, சபையார் சொல்கிற பதில்களை, நடிப்புகளை, சகோதரிகளின் பேச்சுகளை அந்தச் சகோதரி மொழிபெயர்க்கும்போது முக்காடு போட்டுக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், சகோதரர்கள் கொடுக்கும் பேச்சுகளையும், அவர்கள் நடத்தும் காவற்கோபுர படிப்பையும், சபை பைபிள் படிப்பையும் ஒரு சகோதரி மொழிபெயர்க்கும்போது அல்லது அனைவர் முன்பாகவும் நின்றுகொண்டு சைகை மொழியில் பாடல்களைப் பாடும்போது அவர் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும். என்றாலும், இடையிடையே சகோதரர்களுக்காக, சகோதரிகளுக்காக, பிள்ளைகளுக்காக அல்லது மூப்பர்களுக்காக அவர் சைகை மொழியில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கும் என்பதால் கூட்டத்தின் ஆரம்பம்முதல் முடிவுவரை முக்காடு போட்டுக்கொள்வதே அவருக்கு வசதியாக இருக்கும்.

[அடிக்குறிப்பு]

a கிறிஸ்தவப் பெண்கள் முக்காடு போட்டுக்கொள்வது பற்றிய கூடுதலான தகவல்களை, ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ என்ற புத்தகத்தில் பக்கங்கள் 209-212-ல் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்