உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 4/1 பக். 3
  • திருப்தி—எட்டாக் கனியா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திருப்தி—எட்டாக் கனியா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • இதே தகவல்
  • திருப்தியோடு இருப்பதற்கான ரகசியத்தைக் கற்றுக்கொண்டீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • பைபிள் நியமங்களைப் பின்பற்றுவீர், வாழ்வில் திருப்தி காண்பீர்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • பணம்—சமநிலையான கருத்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • நண்பர்களை ஞானமாய் தேர்ந்தெடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 4/1 பக். 3

திருப்தி—எட்டாக் கனியா?

“திருப்தியுள்ளவன் செல்வந்தன்; திருப்தியற்றவன் ஏழை.” —பெஞ்சமின் ஃபிராங்க்லின்

இந்தப் பழமொழி சொல்வது எவ்வளவு உண்மை! திருப்தி ஒன்றும் கடைச் சரக்கு அல்ல, விலைகொடுத்து வாங்குவதற்கு. திருப்தி என்பது ஒரு மனநிலை. அதனால்தான், சொத்துபத்துகள் சேர்க்க... சாதனைகள் புரிய... சக மனிதர்கள் போல் வாழ... ஆசைப்படுவோருக்கு இந்த உலகில் திருப்தி ஓர் எட்டாக் கனியாகவே இருக்கிறது! இப்போது, கீழே சொல்லப்பட்டுள்ளவற்றில் ஏதாவது உங்களைப் பாதித்திருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்.

• இதை வாங்கினால் மட்டுமே உங்கள் வாழ்வில் திருப்தி காண முடியும் என்று விளம்பரதாரர்கள் ஊக்குவிக்கிறார்கள்.

• மற்றவர்களைப் போல் சாதிக்க வேண்டுமென்ற போட்டி மனப்பான்மையை உங்களுடன் வேலை பார்ப்பவர்களோ படிப்பவர்களோ தூண்டிவிடுகிறார்கள்.

• நீங்கள் செய்கிற உதவிக்கு மற்றவர்கள் துளிகூட நன்றி காட்டுவதில்லை.

• நண்பர்கள் தங்களிடம் இருப்பதைக் காட்டி உங்களைப் பொறாமைப்பட வைக்கிறார்கள்.

• வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் அளிக்கப்படுவதில்லை.

இப்படிப்பட்ட சவால்கள் மத்தியில் திருப்தி சாத்தியமா? ‘திருப்தியின் ரகசியத்தை’ அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். அவர் ஏகபோகமாகவும் வாழத் தெரிந்திருந்தார்... ஏழையாகவும் வாழத் தெரிந்திருந்தார். நண்பர்களால் மெச்சி பேசப்பட்டார், மற்றவர்களால் கேலி செய்யப்பட்டார். இருந்தாலும், “எந்தச் சூழ்நிலையிலும் திருப்தியுடன் வாழ கற்றுக்கொண்டேன்” என்று சொன்னார்.—சாய்வெழுத்து எங்களுடையது; பிலிப்பியர் 4:11, 12, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்.

திருப்தியுடன் வாழ முயற்சி செய்யாதவர்களுக்கு அது ஒரு ரகசியமே, ஆனால் திருப்தியுடன் வாழ கற்றுக்கொள்ள முடியுமென பவுல் குறிப்பிட்டார். திருப்தி காண உதவும் ஐந்து ரகசியங்களைக் கடவுளுடைய வார்த்தையான பைபிளிலிருந்து சிந்தித்துப் பார்க்க உங்களை அழைக்கிறோம். (w10-E 11/01)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்