உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 4/1 பக். 3
  • மோசே யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மோசே யார்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • இதே தகவல்
  • இயேசு கிறிஸ்து எவ்விதமாக மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • யெகோவாவின் வழிகளை அறிதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • எரிகிற முட்புதர்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • மோசே ஏன் ஓடிப்போனார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 4/1 பக். 3

அட்டைப்பட கட்டுரை: மோசே முத்தான முன்மாதிரி!

மோசே யார்?

மோசே என்ற பெயரைக் கேட்டதும் உங்கள் மனத்திரையில் தெரிவது...

  • நைல் நதியில் ஒரு கூடைக்குள் மிதந்து சென்ற பச்சிளம் குழந்தையா?

  • எகிப்தில் பார்வோனுடைய மகளின் வளர்ப்பு மகனாய் ராஜபோகமாக வாழ்ந்தாலும் தான் ஓர் இஸ்ரவேலன் என்பதை மறக்காத சிறுவனா?

  • மீதியான் நாட்டில் 40 ஆண்டுகளாக ஆடுமேய்த்த மேய்ப்பரா?

  • எரிகிற முட்புதரின் முன்னால் யெகோவாவோடுa பேசிய மனிதரா?

  • இஸ்ரவேல் மக்களை விடுதலை செய்யச் சொல்லி எகிப்து நாட்டு ராஜாவிடம் துணிந்து பேசிய நபரா?

  • அந்த ராஜா உண்மைக் கடவுளை எதிர்த்தபோது, தெய்வ கட்டளைப்படி எகிப்துமீது பத்து வாதைகளை அறிவித்த மனிதரா?

  • ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்ற தலைவரா?

  • செங்கடலைப் பிளக்க கடவுள் பயன்படுத்திய மனிதரா?

  • கடவுள் தந்த பத்துக் கட்டளைகளை இஸ்ரவேலருக்குத் தெரியப்படுத்திய மனிதரா?

இப்படி உங்கள் மனத்திரையில் எந்த முகம் தெரிந்தாலும் அது மோசேக்குப் பொருந்தும். இதுபோன்ற நிறைய சம்பவங்கள் அவருடைய வாழ்வில் அரங்கேறின. தெய்வபக்தியுள்ள இந்த மனிதர் கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என அனைவராலும் உயர்வாய் மதிக்கப்படுவதில் ஆச்சரியமே இல்லை!

மோசே ‘மகா பயங்கரமான செயல்களை’ செய்த ஒரு தீர்க்கதரிசி என்பதில் சந்தேகமில்லை. (உபாகமம் 34:10-12) அவர் மூலமாக இறைவன் மாபெரும் செயல்களைச் செய்தார். இருந்தாலும், அவரும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்தான். மற்ற தீர்க்கதரிசிகளைப் போலவே அவருக்கும் ‘நமக்கிருக்கிற உணர்ச்சிகள்தான் இருந்தன.’ (யாக்கோபு 5:17; மத்தேயு 17:1-9) நாம் இன்று எதிர்ப்படுகிற அநேக பிரச்சினைகளை அன்று மோசேயும் எதிர்ப்பட்டார்; ஆனால், அவற்றை வெற்றிகரமாகச் சமாளித்தார்.

எப்படி என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? இப்போது, மோசே காட்டிய மூன்று நல்ல குணங்களைப் பற்றி விவரமாகப் பார்ப்போம். அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் கவனிப்போம். (w13-E 02/01)

a பைபிளில் கடவுளுடைய பெயர் யெகோவா.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்