உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w13 10/1 பக். 16
  • பைபிள் தரும் பதில்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் தரும் பதில்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • இதே தகவல்
  • ஜெபத்தில் கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • ஜெபம்—நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • பிரார்த்தனை செய்வதில் ஏதாவது பலனுண்டா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • ஜெபத்தில் கடவுளிடம் நெருங்குதல்
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
w13 10/1 பக். 16
[பக்கம் 16-ன் படம்]

பைபிள் தரும் பதில்கள்

எல்லா ஜெபங்களையும் கடவுள் கேட்கிறாரா?

எல்லாத் தேசத்தினரின் ஜெபங்களையும் கடவுள் கேட்கிறார். (சங்கீதம் 145:18, 19) நமக்குக் கவலையளிக்கிற எந்தவொரு விஷயத்தையும் அவரிடம் கொட்டித் தீர்க்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (பிலிப்பியர்  4:6, 7) ஆனால், சில ஜெபங்களைக் கடவுள் கேட்பதில்லை. உதாரணமாக, மனப்பாடம் செய்து ஒப்பிக்கப்படுகிற ஜெபங்கள் அவருக்குப் பிடிக்காது.—மத்தேயு 6:7-ஐ வாசியுங்கள்.

அதுமட்டுமல்ல, அவருடைய சட்டங்களை வேண்டுமென்றே மீறுபவர்களின் ஜெபங்களும் அவருக்குப் பிடிக்காது. (நீதிமொழிகள் 28:9) உதாரணத்திற்கு, இரத்தப்பழி சுமந்த பூர்வகால இஸ்ரவேலரின் ஜெபங்களைக் கடவுள் கேட்கவில்லை. எனவே, நம் ஜெபங்களைக் கடவுள் கேட்க வேண்டுமென்றால், அவர் நம்மிடம் எதிர்பார்க்கிற காரியங்களை நாம் செய்ய வேண்டும்.—ஏசாயா 1:15-ஐ வாசியுங்கள்.

நம் ஜெபங்களைக் கடவுள் கேட்க நாம் என்ன செய்ய வேண்டும்?

விசுவாசமில்லாமல் கடவுளை நாம் ஜெபத்தில் அணுக முடியாது. (யாக்கோபு 1:5, 6) அவர் நிஜமான நபர், நம்மீது அக்கறையோடு இருக்கிறார் என்று நாம் உறுதியாக நம்ப வேண்டும். விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு ஒரு வழி பைபிளைப் படிப்பதாகும்; ஏனென்றால், பைபிளில்தான் உண்மையான விசுவாசத்திற்கு அடிப்படையான ஆதாரங்களும் வாக்குறுதிகளும் அடங்கியுள்ளன.—எபிரெயர் 11:1, 6-ஐ வாசியுங்கள்.

ஊக்கமாகவும் மனத்தாழ்மையாகவும் நாம் ஜெபம் செய்ய வேண்டும். கடவுளுடைய மகனான இயேசுவும் மனத்தாழ்மையோடு ஜெபம் செய்தார். (லூக்கா 22:41, 42) எனவே, என்ன செய்ய வேண்டுமென்று கடவுளிடம் நாம் சொல்வதைவிட, பைபிளைப் படித்து அவர் நம்மிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார் என்று புரிந்துகொள்ள முயல வேண்டும். அப்போதுதான், கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக நம்மால் ஜெபம் செய்ய முடியும்.—1 யோவான் 5:14-ஐ வாசியுங்கள். (w13-E 08/01)

கூடுதல் தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தில் 17-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்

www.jw.org-லிருந்து இதை டவுன்லோடு செய்துகொள்ளலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்