உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w14 7/1 பக். 16
  • பைபிள் தரும் பதில்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் தரும் பதில்கள்
  • கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • இதே தகவல்
  • கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை தீர்க்காமல் இருக்கிறார்?
    கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி!
  • கடவுள் ஏன் தீமையையும் துன்பத்தையும் விட்டுவைத்திருக்கிறார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • இந்த உலகம் யார் கையில்?
    இந்த உலகம் யார் கையில்?
  • ஏன் இவ்வளவு வேதனை?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
மேலும் பார்க்க
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
w14 7/1 பக். 16

பைபிள் தரும் பதில்கள்

உலகத்தை ஆட்சி செய்வது யார்?

போர், குற்றச்செயல், வன்முறை, பேரழிவு பற்றிய காட்சிகள்

கடவுள் இந்த உலகத்தை ஆட்சி செய்தால், இவ்வளவு கஷ்டம் இருக்குமா ?

கடவுள்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்கிறார் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். இது உண்மையென்றால், இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு கஷ்டம் இருக்கிறது? (உபாகமம் 32:4, 5) இந்த உலகம் ஒரு கெட்டவனுடைய கையில் இருப்பதாக பைபிள் சொல்கிறது.—1 யோவான் 5:19 வாசியுங்கள்.

இந்தக் கெட்டவன், எப்படி மனிதர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்? ஆரம்பத்தில், ஒரு தேவதூதன் கடவுளுக்கு எதிராக செயல்பட்டான். அவன்தான் சாத்தான். அவன், முதல் மனித ஜோடியான ஆதாமையும் ஏவாளையும் கடவுளுக்கு எதிராக செயல்பட தூண்டினான். (ஆதியாகமம் 3:1-6) அவர்கள் சாத்தானுக்குக் கீழ்ப்படிந்தார்கள்; அதன் மூலம் சாத்தானைத் தங்களுடைய ஆட்சியாளனாக ஏற்றுக்கொண்டார்கள். எல்லா சக்தியும் படைத்த கடவுளுக்கு மட்டுமே நம்மை ஆட்சி செய்வதற்கான அதிகாரம் இருக்கிறது. ஆனால், தம் ஆட்சியை ஏற்றுக்கொள்ளும்படி அவர் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. தம்மேல் இருக்கும் அன்பின் காரணமாகவே, மக்கள் தம்மை ஆட்சியாளராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் விரும்புகிறார். (உபாகமம் 6:6; 30:16, 19) வருத்தகரமாக, ஆதாம் ஏவாள் எடுத்த தவறான தீர்மானத்தையே நிறைய பேர் இன்றும் எடுத்திருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 12:9-ஐ வாசியுங்கள்.

நம்முடைய கஷ்டங்களை யார் சரிசெய்வார்?

சாத்தானுடைய மோசமான ஆட்சியைக் கடவுள் தொடர்ந்து விட்டுவைப்பாரா? நிச்சயமாக இல்லை! கடவுள் தம்முடைய மகன் இயேசுவின் மூலம், சாத்தானுடைய கெட்ட ஆட்சிக்கு முடிவுகட்ட போகிறார்.—1 யோவான் 3:8-ஐ வாசியுங்கள்.

கடவுளால் நியமிக்கப்பட்ட இயேசு, சாத்தானை அழிப்பார். (ரோமர் 16:20) அதன்பின், கடவுளே மக்களை ஆட்சி செய்வார். தாம் நினைத்தபடி மக்களை சந்தோஷமாகவும் சமாதானமாகவும் வாழ வைப்பார்.—வெளிப்படுத்துதல் 21:3-5-ஐ வாசியுங்கள். (w14-E 05/01)

கூடுதல் தகவல்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் 3-ஆம் அதிகாரத்தைப் பாருங்கள்

www.jw.org-ல் டவுன்லோட் செய்யலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்