உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w15 10/15 பக். 3
  • இவர்களை உயர்வாக மதியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இவர்களை உயர்வாக மதியுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • இதே தகவல்
  • யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு என்பது என்ன?
    யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • ஆளும் குழு எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • இன்று ஆளும் குழுவுடன் ஒத்துழைத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • அறிவிப்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
w15 10/15 பக். 3
ஆளும் குழுவில் இருக்கும் ஒரு குழு நடத்தும் கூட்டத்தின் நிழல் படம்

இவர்களை உயர்வாக மதியுங்கள்

ஆளும் குழு 6 குழுக்களாக செயல்படுகிறார்கள். 1992-ல் இருந்து இந்த குழுக்களுக்கு உதவி செய்ய முதிர்ச்சியுள்ள அனுபவமுள்ள மூப்பர்களை ஆளும் குழு நியமித்திருக்கிறார்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இவர்களை உதவியாளர்கள் என்று சொல்கிறோம். இவர்கள் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்கள். (யோவா. 10:16) இவர்கள் ஆளும் குழுவில் இருக்கும் சகோதரர்களுக்கு உதவி செய்கிறார்கள். இவர்கள் எந்தக் குழுவில் சேவை செய்கிறார்களோ அந்தக் குழுவின் வாராந்திர கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். ஆளும் குழுவுக்குத் தேவைப்படுகிற தகவல்களையும் ஆலோசனைகளையும் இவர்கள் கொடுக்கிறார்கள். இருந்தாலும், ஆளும் குழுதான் கடைசியில் தீர்மானம் எடுக்கிறார்கள். அவர்கள் எடுத்த தீர்மானத்தின்படி எல்லா விஷயங்களும் நடக்கிறதா என்று இந்த சகோதரர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு எந்த நியமிப்பு கிடைத்தாலும் அதை செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆளும் குழுவை சேர்ந்த சகோதரர்களோடு சேர்ந்து விசேஷ மாநாடுகளிலும் சர்வதேச மாநாடுகளிலும் கலந்துகொள்கிறார்கள். தலைமை அலுவலக பிரதிநிதிகளாக கிளை அலுவலகங்களை சந்திக்கவும் நியமிக்கப்படுகிறார்கள்.

1992-ல் இருந்து ஆளும் குழுவுக்கு உதவியாளராக இருந்த ஒரு சகோதரர் இப்படி சொல்கிறார்: “என்னோட நியமிப்ப நான் சரியா செஞ்சா, ஆளும் குழுவால அவங்களோட பொறுப்புகள்ல முழு கவனம் செலுத்த முடியும்.” 20 வருஷங்களாக ஆளும் குழுவுக்கு உதவியாளராக இருந்த இன்னொரு சகோதரர் சொல்கிறார், “இவ்ளோ பெரிய நியமிப்பு எனக்கு கிடைக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல, இது எனக்கு கிடைச்ச மிக பெரிய பாக்கியம்!”

ஆளும் குழு, அவர்களுக்கு உதவி செய்யும் சகோதரர்களுக்கு நிறைய பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய கடினமான உழைப்பைப் பாராட்டுகிறார்கள். அதனால், நாமும் இந்த ‘சகோதரர்களை உயர்வாக மதிக்க’ வேண்டும்.—பிலி. 2:29.

a ஆளும் குழுவின் 6 குழுக்களைப் பற்றி தெரிந்துகொள்ள கடவுளது அரசைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’ என்ற புத்தகத்தில் பக்கம் 110-ஐ பாருங்கள். அதோடு, கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது! என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கம் 131-ஐயும் பாருங்கள்.

ஆளும் குழுவின் 6 குழுக்களுக்கு உதவியாளர்களாக இருக்கும் சகோதரர்கள்

ஒருங்கிணைப்பாளர்களின் குழு

  • ஜான் எக்ரன்

  • ராபர்ட் வாலன்

ஊழியர்களின் குழு

  • ஜெரல்டு கிரிஸல்

  • பேட்ரிக் லாப்ராங்கா

  • டானியல் மால்கன்

  • ரால்ப் வால்ஸ்

பிரசுரிக்கும் குழு

  • டான் ஆடம்ஸ்

  • ராபர்ட் பட்லர்

  • ஹரல்ட் கார்கர்ன்

  • டொனால்ட் கார்டன்

  • ராபர்ட் லுசியோனி

  • அலெக்ஸ் ரெயின்முல்லர்

  • டேவிட் சின்கிலேர்

ஊழியக் குழு

  • கேரி ப்ரோ

  • ஜோயெல் டெலிங்கர்

  • செத் ஹயாட்

  • கிறிஸ்டபர் மேவர்

  • பால்ட்டாசர் பெர்லா

  • வில்லியம் டர்னர்

  • ராபர்ட் வாலன்

  • லீயான் வீவர்

போதனாக் குழு

  • ரொனால்ட் கர்ஸன்

  • கென்னத் ப்லோடின்

  • வில்லியம் மாலன்பான்ட்

  • மார்க் நூமேர்

  • டேவிட் ஷேபர்

எழுத்துக் குழு

  • ராபர்ட் சிரான்கோ

  • ஜேம்ஸ் மான்ட்ஸ்

  • ஈசாக் மரே

  • ஜென் ஸ்மலி

  • ஜான் விஸ்சக்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்