உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வந்த காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்தீர்களா?அப்படியென்றால், இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள்:
எசேக்கியேல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் மாகோகு தேசத்தானான கோகு யார்?
மாகோகு தேசத்தானான கோகு சாத்தானைக் குறிப்பதில்லை. மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகு கடவுளுடைய மக்களை அழிப்பதற்காக ஒன்றுகூடும் தேசங்களைக் குறிக்கிறது.—5/15, பக். 29-30.
இயேசு செய்த அற்புதங்கள் அவருடைய தாராள குணத்தை எப்படிக் காட்டியது?
கானா ஊரில் நடந்த கல்யாணத்தில் சுமார் 380 லிட்டர் தண்ணீரை இயேசு திராட்சமதுவாக மாற்றினார். இன்னொரு சமயம் சுமார் 5,000 பேருக்கு உணவளித்தார். (மத். 14:14-21; யோவா. 2:6-11) இந்த 2 அற்புதங்களிலும் இயேசு அவருடைய அப்பா யெகோவாவை போலவே தாராள குணத்தைக் காட்டினார்.—6/15, பக். 4-5.
இந்த உலகத்துக்கு அழிவு வரும்போது எதெல்லாம் முடிவுக்கு வரும்?
கடவுள் சொல்வதை செய்யாத மதங்களை... மக்களை ஏமாற்றுகிற மதங்களை... கடவுள் அழிக்கப்போகிறார். மனித அரசாங்கங்களையும், கடவுள் பக்தியில்லாத மக்களையும் அவர் அழிக்கப்போகிறார்; போருக்கும் அநியாயத்திற்கும் முடிவு கட்டப்போகிறார்.—7/1, பக். 3-5.
மகா பாபிலோன் அழிக்கப்படும்போது அதன் எல்லா உறுப்பினர்களும் அழிக்கப்படுவார்களா?
இல்லை. சகரியா 13:4-6 சொல்கிறபடி சில மதத் தலைவர்கள்கூட தங்களுக்குக் கடவுள் பக்தியே இல்லை என்று நடிப்பார்கள். அவர்களுக்கும் பொய் மதத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வார்கள்.—7/15, பக். 15-16.
கிறிஸ்தவர்கள் என்னென்ன விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும்?
யெகோவாவின் படைப்பு, பைபிள், ஜெபம், மீட்கும் பலி பற்றியெல்லாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும்.—8/15, பக். 10-13.
யெகோவாவை வணங்காதவர்களை காதலிப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
யெகோவாவை வணங்காதவர்களிடமும் நாம் அன்பாக நடந்துகொள்கிறோம். ஆனால், யெகோவாவின் சாட்சியாக இல்லாத... அவருக்கு உண்மையாக இல்லாத... அவருடைய கட்டளைகளை மதிக்காத... ஒருவரை காதலிப்பது கடவுளுடைய சட்டங்களுக்கு விரோதமாக இருக்கிறது. (1 கொ. 15:33)—8/15, பக். 25.
பேதுருவுக்கு ஏன் விசுவாசம் குறைய ஆரம்பித்தது, மறுபடியும் விசுவாசம் வைக்க பேதுருவுக்கு எது உதவியது?
பேதுருவுக்கு இயேசுமீது விசுவாசம் இருந்ததால்தான் அவர் தண்ணீர்மீது நடந்துவந்தார். (மத். 14:24-32) ஆனால், புயல்காற்றை பார்த்ததும் பேதுரு பயந்துபோனார். திரும்பவும் இயேசுவைப் பார்க்க ஆரம்பித்தார்; அவர் கொடுத்த உதவியையும் பெற்றுக்கொண்டார்.—9/15, பக். 16-17.
நாம் பாவிகளாக இருந்தாலும் கடவுளுக்குப் பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?
யோபு, லோத்து, தாவீது போன்றவர்கள் தவறு செய்தபோதும் கடவுளை சேவிக்க விரும்பினார்கள். செய்த தவறுக்காக மனம் வருந்தினார்கள், தங்களை திருத்திக்கொண்டார்கள். அதனால் கடவுள் அவர்களை ஏற்றுக்கொண்டார், நம்மையும் ஏற்றுக்கொள்வார்.—10/1, பக். 10-11.
மார்த்தாளின் கவனம் சிதறியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
விருந்து சமைப்பதிலேயே மார்த்தாள் குறியாக இருந்தாள். ஆனால் மரியாள் மிகச் சிறந்ததை தேர்ந்தெடுத்தாள், அதாவது இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள ஆசைப்பட்டாள். யெகோவாவுடைய சேவையிலிருந்து உங்களை திசை திருப்பும் எந்தவொரு விஷயத்தையும் செய்யாதீர்கள். —10/15, பக். 18-20.