பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும்போது நல்ல மக்கள் அதில் குடியிருப்பார்கள்
பைபிள் என்ன சொல்கிறது?
நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஆம்
இல்லை
இருக்கலாம்
பைபிள் தரும் பதில்
“கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்.” (2 தீமோத்தேயு 3:1) இன்று நடக்கும் சம்பவங்களும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்களும் நாம் ‘கடைசி நாட்களில்தான்’ வாழ்கிறோம் என்பதை காட்டுகின்றன.
பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?
கடைசி நாட்களில் போர், பஞ்சம், நிலநடுக்கம், உயிர் கொல்லும் நோய்கள் அதிகமாக இருக்கும். —மத்தேயு 24:3, 7; லூக்கா 21:11.
கடைசி நாட்களில் வாழும் மக்கள் ஒழுக்க விஷயங்களில் படுமோசமாக இருப்பார்கள். அதுமட்டுமல்ல, கடவுள் பக்தி இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:2-5.
கஷ்டங்கள் இல்லாத எதிர்காலம் வருமா?
சிலர் சொல்கிறார்கள். . . நிலைமைகள் இன்னும் மோசமாகும், கடைசியில் பூமியே அழிந்துவிடும். இன்னும் சிலர் சொல்கிறார்கள்... இன்றைக்கு இருக்கும் நிலைமைகள் மாறும், நல்ல எதிர்காலம் வரும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பைபிள் தரும் பதில்
“நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.” —சங்கீதம் 37:29.
பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?
இன்றைக்கு இருக்கும் மோசமான நிலைமைகள் கண்டிப்பாக மாறும்.—1 யோவான் 2:17.
இந்த பூமி ஒரு அழகான பூஞ்சோலையாக பூத்துக்குலுங்கும்.—ஏசாயா 35:1, 6.