அறிமுகம்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வெளிப்படுத்துதல் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் நான்கு குதிரைவீரர்களின் சவாரியைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்கிறார்கள். சிலர் இதைப் படித்து பயந்துபோயிருக்கிறார்கள். சிலர் இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்:
“இந்தத் தீர்க்கதரிசன செய்திகளைச் சத்தமாக வாசிக்கிறவர்களும் கேட்கிறவர்களும் . . . சந்தோஷமானவர்கள்.”—வெளிப்படுத்துதல் 1:3.
ஒரு அருமையான எதிர்காலம் வரும் என்பதற்கு இந்த நான்கு குதிரைவீரர்களின் சவாரி அடையாளமாக இருக்கிறது. எப்படி என்று இந்த காவற்கோபுர கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.